நமது Tricks Tamizha பக்கத்தில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய பதிவுகளை வாசித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய நமது இன்றைய பதிவில் இந்த விளையாட்டின் விதிமுறைகளைப் பற்றியும், இதில் குறிப்பிடும் வார்த்தைகளுக்கான விளக்கத்தைப் பற்றியும், இதுவரை இந்திய அணியின் Captain ஆக இருந்தவர்களின் பட்டியலையும் தெரிந்து கொள்ள உள்ளோம்.
விளையாட்டைப் பற்றிய சிறிய அறிமுகம்:
பொதுவாக இந்த கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஒரு அணிக்கு 11 நபர்களும் 1 கூடுதல் நபரும் தேவைப்படும். இதில் 5 அல்லது 6 பேர் Bats Man களாகவும், 4 அல்லது 5 பேர் பந்து வீரர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டு அணிகளில் முதலில் யார் விளையாட வேண்டும் என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் முன்னிலையில் Coin ஐ செண்டி விட்டு பார்ப்பது இந்த விளையாட்டின் நடைமுறைகளில் ஒன்று.
தேர்வு செய்ததும் Bating தேர்வு செய்யப்பட்ட அணியில் இருந்து இரண்டு பேரும் எதிரணியிலிருந்து அனைவரும் கலத்தில் இறங்கி விளையாடத் துவங்குவர்.
விளையாட்டின் அடிப்படை புரிதல்:
தமிழில் துடுப்பாட்டம் என்று குறிப்பிடும் இந்த விளையாட்டினை விளையாட தேவையான முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
- Bat, Ball
- புலம் அல்லது தரை (Field or Ground)
- ஒரு அணிக்கு 11 பேர் என்ற விகிதத்தில் 2 அணிகள்
- Pitch
- நடுவர்கள் (Umpires)
- Stumps
- Bails
- இதில் Bats Man களை இரண்டு வகையாக குறிப்பிடுவர். அவை வலது கை ஆட்டக்காரர், இடது கை ஆட்டக்காரர்.
- இதே போன்று பந்து வீச்சாளர்களிலும் வலது கை பந்து வீச்சாளர், இடது கை பந்து வீச்சாளர் எனவும் குறிப்பிடுவர்.
- பொதுவாக விளையாடும் Bats man ன் Positions ஐப் பொருத்து OFF SIDE, LEG SIDE என இரண்டு வகையாக குறிப்பிடலாம். இதில் ஒரு Bats Man எந்த பக்கத்தை நோக்கி நிற்கிறாறோ அதனை OFF SIDE எ்னவும் அதற்கு எதிர் பக்கம் LEG SIDE எனவும் எடுத்துக் கொள்வர்.
- விளையாட்டிற்கானமைதானம் அல்லது நீள் வட்ட வடிவில் இருக்கும். அதன் நடுவில் செவ்வக வடிவ சமதளத்தை PITCH என்பர் இத்தளம் தோராயமாக 2.64 *22.56 மீட்டர் வரை அமைக்கப்பட்டிருக்கும்.
- அந்த pitch ற்கு இருபுறமும் Stumps & Bails இருக்கும்.
- இத்தளத்திற்கு இடையிடையே சில கோடுகள் வரையப்பட்டிருக்கும். அவை,
- Bowling Crease
- Popping Crease
- Return Crease
- இதில் பந்து வீச்சாளர் பந்தை வீசும் பொழுது கட்டாயம் Popping crease மற்றும் Return Crease ற்கு உள்ளே அவரது கால் இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது No Ball என்று எடுத்துக் கெள்ளப்படும்.
- இந்த விளையாட்டிற்கு 3 நடுவர்கள் இருப்பர். அதில் ஒருவர் பந்து வீச்சாளருக்கு அருகிலும் மற்றொருவர் Bats Man ற்கு LEG SIDE லும் நிற்பார். அடுத்த நடுவர் தொலைக்காட்சி வழியாக கவனித்துக் கொண்டிருப்பார்.
- இந்த விளையாட்டின் முக்கிய அம்சமே Runs மற்றும் Wickets ஆகும். இதில்Runs என்பது Bats Man ன் முற்சிக்கு கிடைக்கும் சன்மானமாகவும், Wickets என்பது எதிரணிக்கு கிடைக்கும் சன்மானமாகவும் கருதப்படும்.
- Runs ஐ Bats Man ஓடிச் சென்றும் எடுக்க முடியும் அல்லது Bats Man அடிக்கும் பந்தின் தொலைவைப் பொருத்தும் 4, 6 என்று நிர்ணயிக்கப்படும்.
Bats Man விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள்:
- Bowled- பந்து வீச்சாளரின் பந்து நேராக Bats Man பகுதியில் இருக்கும் Stump ன் மீது படுவது.
- Caught Out என்பது Field அணியில் உள்ளவர்களால் பந்தை Catch பிடித்து நேரடியாக Out செய்வது
- LBW- Stump ல் அடிக்க வேண்டிய பந்தை உடலை வைத்து மறைக்கப்படுவதால்
- Stumped Out- பந்தை அடிக்க முயலும் முயற்சியில் Bats Man ன் கால் Crease ஐ விட்டு வெளியேறி இருக்கும் பொழுது விக்கெட் கீப்பரால் Stump தகர்க்கப்படுவது.
- Run Out – Bats Man , Run ஓடி முடித்து Crease ஐ அடைவதற்குள் பந்தால் Stump ஐ தகர்ப்பது
- Hit Wicket – Bats Man ஆல் தவருதலாக Stump தகர்க்கப்படுவது
- Hit The Ball Twice – ஒரு பந்தை இரு முறை அடிப்பது
- Obstructing the Field – எதிரே வரும் பந்தை ஒரு Bats Man, Crease ற்கு வெளியே இருக்கும் பொழுது தன் உடலைக் கொண்டு தடுப்பது
- Timed Out – ஒரு Bats Man, Out ஆகிய பின் அடுத்த Bats Man உள்ளே நுழைய 2 நிமிடத்திற்கு மேல் நேரம் எடுக்க கூடாது. அவ்வாறு இல்லாமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் Timed Out வழங்கப்படும்.
- Retired Out – விளையாட்டின் போது Bats Man னிற்கு ஏற்படும் காயத்தின் காரணமாக வழங்கப்படுவது.
- Tv Umpire – விளையாட்டின் போது மைதானத்தில் இருக்கும் Umpire களால் கணிக்க முடியாத முடிவுகளை 3 ஆவது Umpire ஆல் உறுதி செய்து வழங்கப்படுவது.
மேற்குறிப்பிட்ட வழிகளின் மூலம் ஒரு Bats Man Out என உறுதி செய்து வெளியேற்றப்படலாம்.
நம் இந்திய முன்னாள் Captain களின் பெயர்பட்டியல்:
வருடம் பெயர்
- 1974 அஜித் வதேகர்
- 1975 எஸ். வெங்கடராகவன்
- 1979 எஸ். வெங்கடராகவன்
- 1980 சுனில் கவாஸ்கர்
- 1983 கபில் தேவ்
- 1986 ரவி சாஸ்திரி
- 1987 திலிப் வெங்சார்கர்
- 1989 கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்
- 1992 எம். அஜாருதீன்
- 1996 சச்சின் டென்டுல்கர்
- 1998 அஜய் ஜடேஜா
- 1999 சௌரவ் கங்கூலி
- 2000 ராகுல் டிராவிட்
- 2001 அனில் கும்ப்லே
- 2003 வீரேந்திர ஷேவாக்
- 2007 எம். எஸ். தோனி
- 2010 சுரேஷ் ரெய்னா
- 2011 கவுதம் கம்பீர்
- 2013 விராட் கோலி
- 2015 ரஹானே
- 2017 ரோகித் ஷர்மா
- 2021 ஷெய்கர் தவான்
- 2023 கே.எல். ராகுல்
இந்தியாவின் சாதனைப் பட்டியல்கள்:
வருடம் கோப்பைகள்
- 1983 ICC World Cup
- 1984 Asia Cup
- 1988 Asia Cup
- 1990/91 Asia Cup
- 1995 Asia Cup
- 2002 Champion Trophy
- 2007 T20 World Cup
- 2010 Asia Cup
- 2011 ICC World Cup
- 2013 Champion Trophy
- 2016 Asia Cup
- 2018 Asia Cup
- 2023 Asia Cup
இது போன்ற கிரிக்கெட் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நமது https://trickstamizha.com என்ற இணைய வழிப் பக்கத்தை பின்தொடரவும்.