- உன் நண்பனைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்; என்பது பழைய மொழி, உன் கைப்பேசியைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன்; என்பது தான் புதிய மொழி.
- தற்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கையில் நீரின்றி அமையாது உலகு என்பது போய் , Mobile இன்றி அமையாது உலகு என்று மாறிவிட்டது. அவ்வாறு Mobile Phone நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நம் நண்பர்களுக்கு தெரியாத நம்மை பற்றிய தகவல்கள் கூட நம் கையில் உள்ள Mobile க்கு தெரிந்திருக்கும்.
- கைப்பேசியானது மற்றவர்களிடம் உரையாடுவதற்கு மட்டும் அல்ல , தொழில், ஊடகம், பணப் பரிவர்த்தனை, பொழுதுதோக்கு, மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற பல நிலைகளில் நமக்கு ஒரு இடைநிலையாளராகவும், அதனைப் பற்றிய தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புப் பெட்டகமாகவும் செயல்படுவதை நாம் உணர்ந்திருப்போம்.
- இத்தகைய நிலையில் நம் Mobile Phone திருடுபோய் விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ சற்று உலகமே நின்று விட்டதைப் போல் உணர்வோம். அதை எடுத்தவர்கள் Mobile-ன் Sim Card-களை கலட்டி விட்டால் பின் அவர்களை தொடர்புகொள்ளவும் முடியாது. அந்த சூழலில் அந்த இழப்புகளை சரி செய்வதற்கே பல காலம் தேவைப்படுகிறது.
- அதற்கு உதவும் வகையில் மத்திய அரசானது ஒரு புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவு) என்பது Mobile Phone களை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும். இதில் நாம் உள்ளிடும் தகவல்களைக் கொண்டு தகவல்தொடர்புத் துறையுடன் இணைந்து காவல்துறை திருடுபோன Mobile Phone-ஐ கண்டுபிடிக்க உதவி செய்வார்கள். இதனை Sanchar Saathi என்னும் போர்டலின் வழியேயும் பதிவு செய்யலாம்.
IMEI:
- இந்த போர்டலைப் பயன்படுத்தும் முன் நமக்கு நாம் பயன்படுத்தும் mobile phone ன் IMEI (International Mobile Equipment identity) என்ற தனித்துவமான 15 இலக்க எண்ணை தெரிந்திருப்பது அவசியம். இந்த எண்ணை கண்டுபிடிக்க *#06# என்ற எண்ணிற்கு அழைக்கவும். பின் உங்கள் MOBILE phone ன் IMEI number திரையில் தோன்றும். இந்த எண்ணாணது உங்களின் mobile phone -ஐ அனைத்து வைத்திருந்தாலும் சுலபமாக அதனை கண்ணாணிக்க உதவுகிறது.
CEIR (Central Equipment Identity Register)
- இந்தத் தளத்தின் வழியே இதுவரை 25,39,780 மொபைல்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் , 15,21,292 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
தயாராக வைத்திருக்க வேண்டியவை;
- தொலைந்த Mobile Phone -ல் பயன்படுத்திய எண்ணிற்கு ஒரு நகல் எண்ணை பெற வேண்டும்.
- IMEI NUMBER, மற்றும் அதனுடைய MODEL தெரிந்து கொள்ள வேண்டும்.
- ஏதாவதொரு அடையாள அட்டை(உ.தா ஆதார் அட்டை)
- இவை அனைத்தையும் பயன்படுத்தி காவல் துறையிடம் புகாரளித்து பின் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் எண், அதனுடைய நகல்.
மேற்கூறிய அனைத்தையும் இத்தளத்தில் உள்ளிடவும்.
வழிமுறைகள்
இத்தளத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளைப் பயன்படுத்தி மட்டுமே தகவல்களை உள்ளிட முடியும்.
- அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் நுழைந்தவுடன் Block Stolen/Lost Mobile என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் நட்சத்திரக் குறியீடுடன் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் உள்ளிடவும். பின் Mobile Phone-ஐ தவறவிட்டவரின் தனிப்பட்ட விவரங்களையும் , பின் கொடுக்கப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இறுதியில் Submit என்ற பொத்தானை தேர்ந்தெடுத்து தகவல்களை சமர்பிக்கவும்.
- அதன் பின் கொடுக்கப்பட்ட கைப்பேசிக்கு அனுப்பப்படும் Request id யைப் பயன்படுத்தி தொலைந்த Mobile Phone ஆனது Block செய்யப்பட்டுள்ளதா என கண்காணித்து அதனை யாரும் பயன்படுத்த முடியாதவாறு Block செய்து கொள்ளலாம்.
- இவ்வாறு சமர்பித்த 24 மணி நேரத்திற்குள் தொலைந்த Mobile Phone ஆனது Block செய்யப்படும்.
மீட்கும் பணி
இவ்வாறு பதிவிட்ட விவரங்கள் காவல் துறையின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு அதனை கண்டுபிடிக்க உதவுகிறது.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்