பெண்மையின் மகத்துவத்தை பெண்மையே உணரும் தருணம் தான் மகப்பேறு காலம். பெண்களால் மட்டுமே சாத்தியப்படும் பிறப்பித்தல் காலம். அத்தகைய காலத்தில் ஏற்படும் உடல் நிலை பாதிப்புகளை அறிந்தும் அதை ஆனந்தமாய் ஏற்றுக்கொள்ளும் நம் இளம் தாய்மார்களுக்கான அரசின் உதவித் திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தான் இப்பதிவில் காண உள்ளோம்.
நமது அரசானது 02/05/1989 ஆம் நாளில் இருந்தே கர்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தில் ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், நகர்புற மற்றும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை கர்பிணிப் பெண்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டர். முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் நிதி உதவித் திட்டம் அளிக்கப்பட்டு வந்திறுந்தது.
- இத்திட்டத்தின் கீழ் 1989 ல் ரூ. 200 யும் 1998 ல் ரூ.500 ஆகவும் , 2006 ல் ரூ.5000 மாகவும், பின் ரூ.12000 ஆகவும், தற்பொழுது அதுவும் ரூ.18000 ரூபாயாக அதிகரித்து வழங்கிக் கொண்டு உள்ளது.
- இத்திட்டத்தினை பெற அத்தாய்மார்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை வழங்கும் முறை
- இத்திட்டத்தின் கீழ் கர்பிணிகளுக்கு வழங்கப்படும் தொகையானது 3 தவணைகளாக பிரித்து மொத்தம் ரூ.14000 வழங்கப்படும்.
- மேலும் ரூ. 4000 மதிப்பிலான ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுத் தொகுப்பும்(இரண்டு தவணைகளாக) வழங்கப்படுகிறது.
- ஆனால் இதனைப் பெற அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்பகால சோதனை மற்றும் இரத்த பரிசோதனைகளை செய்திருக்க வேண்டியது கட்டாயம்.
உதவித்திட்டம் வழங்கும் அமைப்புகள்;
- தமிழ்நாடு அரசு(டாக்டர். முத்துலட்சுமி நிதி உதவித்தொகைத் திட்டம் ) மற்றும் மத்திய அரசு (PMMVY-Pradhan Mantri Matru Vandana Yojana)
தகுதிகள்:
- கர்பமான பெண் 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- picme தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பிக்மி எண்:
PICME-( Pregnancy and infant cohort monitoring and evaluation) எண் என்பது 19 வயது பூர்த்தியான கர்பமாக உள்ள பெண்கள் 12 வாரத்திற்குள் பெற்றிருக்க வேண்டிய அடையாள எண்ணாகும். தமிழ்நாடு அரசானது அனைத்து கர்பிணிப் பெண்களையும், அவர்களின் ஆரோக்கிய நிலையை கண்காணிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்பாகும். இதில் ஒரு பெண் கருவுற்றதில் இருந்து குழந்தை பெற்று பிறப்புச் சான்றிதழ் பெறும் வரை அடையாளப்படுத்த பயன்படும் ஒரு எண்ணாகவும் செயல்படுகிறது.
RCH-ID( Reproductive Child Health)
(கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டு கண்ணாணிப்பு மற்றும் மதிப்பீடு)
Rch-Id ன் பயன்கள்:
- அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சைப் பெற ,
- டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் உதவித்தொகை பெற,
- குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய போன்ற பல தேவைகளுக்காக இந்த RCH-ID ஆனது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
RCH-ID பெறும் முறைகள்:
- அருகில் உள்ள நகர்ப்புற அல்லது கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உதவியுடன்
- இ-சேவை மையத்தை அனுகியும்
- உதவி எண் -102 ற்கு அழைப்பதன் மூலமும்
- இணையதளத்தின் மூலம் பதிவு செய்தும் இந்த RCH-ID -ஐ பெற முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- கர்பிணித் தாய்மார்களின் ஆதார் எண் (கைப்பேசி எண் பதிவு செய்யப்பட்டது)
- தற்போதைய முகவரிக்கான ஏதாவதொரு அடையாளச் சான்றிதழ்(உதா. ரேசன் அட்டை,வாக்காளர் அட்டை) 50kb க்குள் இருக்கும் மின்னனு ஆவணமாக இருக்க வேண்டும்.
இணையத்தில் சுயமாக பதிவு செய்யும் வழிமுறைகள்;
- அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் நுழைந்தவுடன் சுயமாக பதிவுசெய்யும் தேர்வினை தேர்ந்தெடுத்ததும் “self registration” என்ற பத்தியை அடையும்.
- அதில் கர்பிணிப் பெண்ணின் ஆதார் எண் மற்றும் கைப்பேசி எண்ணை உள்ளிட்டதும் அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும்.
- கர்பிணிப் பெண்ணின் சுய விவரங்கள் பற்றிய கேட்கப்படும் தகவல்களை உள்ளிடவும்.
- இறுதியில் தளத்தை சமர்பித்ததும், இந்தத் தகவல்கள் அருகில் உள்ள கிராமப்புற அல்லது நகர்ப்புற அரசு சுகாதார செவிலியர்களுக்கு அனுப்பப்படும்.
- அவர்களின் சரிபார்தலுக்குப் பின் RCH-ID யானது வழங்கப்படும்.
- இந்த RCH-ID யானது பெறப்பட்டதும் “Self Registration Bank Profile ” ஐ தேர்ந்தெடுத்து பணம் பெறவேண்டிய வங்கிக் கணக்கின் விபரங்களை உள்ளிட வேண்டும்.
- இத்தளத்தின் கீழ் டாக்டர்.முத்துலட்சுமி நிதி உதவிக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய இயலும்.
- MRMBS என்ற தளத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளிடவும்.
- இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்த கர்பிணிப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகையானது குறிப்பிட்ட மாதங்களில் வழங்கப்படும்.
இணையத்தளம் https://picme.tn.gov.in