தமிழ்நாடு அரசு மானியத்தோடு வழங்கும் மாடித்தோட்ட தொகுப்பை வாங்கிவிட்டீர்களா? தோட்டப்பிரியர்களின் வரப்பிரசாதம்…..| Tricks Tamizha`

தமிழ்நாடு அரசு மானியத்தோடு வழங்கும் மாடித்தோட்ட தொகுப்பை வாங்கிவிட்டீர்களா? தோட்டப்பிரியர்களின் வரப்பிரசாதம்…..| Tricks Tamizha`

  • நம்மிடத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்த ஆடம்பரமான வாழ்கையின் பயணத்தில் நம் வாழ்வியலோடு பொருந்தி இருக்கும் பல விஷயங்களை நாம் மறந்து விடுகின்றோம் அப்படிப்பட்டவைகளில் ஒன்று தான் விவசாயம்.  ஒவ்வொரு  நாட்டிலும் மையப் புள்ளியாக செயல்படும் தொழிலானது விவசாயம் ஆகும். அத்தகைய விவசாயமானது மனித முன்னேற்றத்தின் மத்தியில்  நசுக்கப்பட்டு வருவதை அனைவராலும் அறிந்த ஒன்றே.
  • இதனால் ஏற்படும் உணவுப் பொருளின் பற்றாக்குறையை பலர் தவறாகப் பயன்படுத்தி உணவுப் பொருளில் நஞ்சை கலப்பது போல் விவசாயத்திற்கு செயற்கை உரம் பயன்படுத்துவது ,உணவுப் பொருளில் கலப்படம் செய்வது என  தீங்கான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
  • இப்பயத்தின் காரணமாகவே பலர் அவர்களால் இயன்ற அளவு விவசாய முறையில் தற்பொழுது ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.  அந்த வகையில் அவரவர் வீட்டின் அருகில் இருக்கும் சிறு சிறு இடங்களைப் பயன்படுத்தி காய்கறிகளை விளைவித்து பயன்படுத்தி வருகின்றனர். நவீன மயமாக்கப்பட்ட நகரம் போன்ற இடங்களில் அந்த சிறு இடங்களைக்கூட வைக்காமல் கட்டிடங்களால் நிரப்பி விடுகின்றோம் .
  • ஆனால் அந்த சிக்கலுக்கும் மாற்று தீர்வாக தற்பொழுது அனவராலும் பிரபலமாகிக் கொண்டு இருக்கும் ஒன்று தான் மாடித்தோட்டம் . வீட்டின் அருகில் தோட்டம் வைத்து பராமரிக்க இடம் இல்லாதவர்கள் அவரவர் வீட்டின் மொட்டை மாடிகளில் காய்கறிச் செடிகளைப் பயன்படுத்தி தன் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை தானே விளைவித்துக் கொள்கின்றனர்.
  • இந்த மாற்று விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசானது மானியத்தோடு மாடித் தோட்டத்திற்குத் தேவையான பொருட்களின் தொகுப்பை  தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையோடு இணைந்து வழங்கி வருகின்றது.  அந்த தொகுப்பைப் பற்றிய தகவல்களையும் அதற்காக விண்ணப்பிக்கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம் .

வழங்குபவர்கள்:

  •  வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை

தொகுப்பில் அடங்கும் பொருட்களைப் பற்றிய தகவல்

  1. செடி வளர்ப்புப பைகள்———-  6 எண்கள்
  2. 6 கிலோ தென்னை நார் கட்டிகள்———-2 எண்கள்
  3. 6 வகையான காய்கறி விதைகள் (அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு இரகம் மற்றும் பாரம்பரிய வகைகள்) (அரசு நிறுவனம் மூலம்) ——6 விதை பொட்டலங்கள்
  4. அசோஸ்பைரில்லம் (அரசு நிறுவனம் மூலம்) ——- 300 கிராம்
  5. பாஸ்போபாக்டீரியா (அரசு நிறுவனம் மூலம்)——–300 கிராம்
  6. ட்ரைகோடெர்மா விரிடி (அரசு நிறுவனம் மூலம்)——-200 கிராம்
  7. வேப்பெண்ணை மருந்து ——-100 மில்லி
  8. மாடித் தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான வழிகாட்டி—–1 எண்

இத்திட்டதின் விலை விவரம்


மொத்த விலை                         ரூ.900


மானிய விலை                          ரூ.450(50%)


பயனாளியின் பங்கு தொகை          ரூ.450


ஒரு பயனாளி அதிகபட்சமாக           2 தொகுப்புகள் வரை பெற முடியும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • அதிகாரப்பூர்வ தரவுத் தளத்தின் வழியே நுழைந்த உடன் இரண்டு தேர்வுகளைக் கொண்ட ஒரு செய்திப் பெட்டி திரையில் தோன்றும்.
  • அதில் Terrace Garden Kit/ மாடித்தோட்டம் தொகுப்பு திட்டம் விண்ணப்பத்திற்கான தேர்வு வழங்கப்பட்டிருக்கும். அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  • யார் பெயரில் இத்தொகுப்பை வாங்க உள்ளீர்களோ அவர்களின் தகவல்களை ஆதார் மற்றும் புகைப்படங்களுடன் உள்ளிடவும்.
  • இறுதியாக இவ்விண்ணப்பத்தை சமர்பிக்கவும்
  • இப்பொழுது விண்ணப்பத்தில் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு பதிவு எண் மற்றும் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளும் தொலைப்பேசி எண்ணும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டிருக்கும்.
  • இந்த பதிவு எண்ணைக் கொண்டு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்

https://tnhorticulture.tn.gov.in

இத்தளத்தின் வழியே  விவசாயத் துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பு: அருகில் இருக்கும் தோட்டக்கலை அலுவலகத்தின் பொருளின் இறுப்பைப் பொறுத்தும் பதிவு செய்யப்பட்டவர்களின் முன்னுறிமை பொறுத்தும் பொருட்கள் வழங்கப்படும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *