ஆசையாசையாய் நிலமும், நிலத்தோடு வீடும் வாங்குபவர்களில் பலர், நாம் வாங்கிய நிலம் பாதுகாப்பாக தான் இருக்கிறதா? இதன் ஒட்டு மொத்த உரிமமும் தன் பெயரில் தான் இருக்கிறதா ? என்பதை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இதனால் பலர் மோசடிக்கு ஆளாகுகின்றனர். பல சட்ட சிக்கலையும் சந்திக்க நேறிடுகிறது. ஆகையால் Tricks Tamizha Website முலமாக பட்டா மற்றும் சிட்டா பற்றிய சரியான விளக்கத்தையும் அதனை எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது மற்றும் வீட்டில் இருந்த படியே எவ்வாறு சரிபார்த்து பதிவிறக்கம் செய்வது என்கின்ற தகவல்களை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
பட்டா என்றால் என்ன ?
பட்டா என்பது சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை அளந்து சரிபார்த்து சர்வே எண்ணுடன் வழங்கும் ஒரு வருவாய்துறை சான்றிதழ் ஆகும். இதில் தனிப்பட்டா மற்றும் கூட்டுப்பட்டா என இருவகைகளும் உண்டு. இவை தாசிந்தார் அலுவளகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
- தனிப்பட்டா என்பது தனி நபர் ஒருவரிடமிருந்து மற்றொரு தனி நபர் ஏதேனும் நிலமாகவோ அல்லது நிலத்துடன் கூடிய வீடாகவோ வாங்கினால் அதற்காக வழங்கப்படுவது.
- கூட்டுப்பட்டா என்பது ஒரு நிலத்தை பலர் வாங்கி உரிமை பகிரப்படும் நிலத்திற்கு வழங்கப்படுவது. உதாரணமாக நகரப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் அந்த நிலத்தின் மீது உரிமை உண்டு. அவர்கள் அனைவரின் பெயரும் அந்த பட்டாவில் உரிமையாளர்களாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிட்டா என்றால் என்ன?
- எந்தவொரு பட்டாக்களிலும் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் பசல் ஆண்டில் (அதாவது ஜூலை முதல் ஜீன் வரை) புதுப்பித்துப் பாதுகாக்கப்படுகிறது.அவ்வாறு பாதுகாக்கப்படும் பட்டாக்களின் தொகுப்பே சிட்டா என்பதாகும்.
- இவை கிராம நிர்வாக அலுவளகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும்.
பொதுவாக ஒருவர் பட்டா விண்ணப்பிக்க அரசு மூன்று வழிகளை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
- பத்திரப்பதிவின் போதே பட்டாவிற்கான விண்ணப்பமும் வழங்கப்பட்டு பிறகு சார்பதிவாளரின் மேற்பார்வையில் 15 நாட்களுக்குள் சர்வே எண்ணுடன் வழங்கப்படும்.
- அந்த நிலத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவளகத்தை அணுகி முறைப்படி விண்ணப்பிப்பது.
- இ-சேவை மையத்தை அணுகி இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பித்த பட்டாவை எவ்வாறு வீட்டில் இருந்த படியே பதிவிறக்கம் செய்வது பற்றிய தகவல்களை இனி கான்போம்.
- அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியே நுழைந்த உடன்புதிய மாறுதல்களுடன்(உதா; ஊரகம்/நத்தம்) கூடிய ஒரு தரவுத்தளம் தோன்றும். அதில் பல பயன்பாடுகளும் உண்டு.
பட்டா மாறுதல் விண்ணப்பிக்க
பட்டா/சிட்டா/புலப்பட விவரங்களை பார்வையிட
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட (ஊரகம்/நத்தம்)
பட்டா/சிட்டா விவரங்களை சரிபார்க்க (ஊரகம்/நத்தம்)
அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட
புலப்பட விவரங்களை பார்வையிட (ஊரகம்/நத்தம்)
பட்டா நகலை பார்வையிட
நகர நில அளவைப் பதிவேடு
நகர நில அளவை வரைபடம்
விண்ணப்ப நிலை
புல எல்லை வரைபடம்/அறிக்கை
- இதில் பட்டா / சிட்டா வை பார்க்க ” பட்டா/சிட்டா/புலப்பட விவரங்களை பார்வையிட” என்ற தேர்வுக்குள் நுழைய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உட்பட்ட மாவட்டம், வட்டம், கிராமம் போன்றவற்றின் தகவல்களை உள்ளிடவும்
- பிறகு 3 (பட்டா எண், புல எண், பெயர் வாரியான தேடல்) தேர்வுகளில் நன்கு தெரிந்த ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுக்கவும்.
- நில வகை மற்றும் மேலே தேர்ந்தெடுத்ததின் விவரங்களை உள்ளிடவும்.
- கைப்பேசியின் எண்ணை உள்ளிட்டதும் அதற்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இப்பொழுது குறிப்பிட்ட நிலத்தின் பட்டாவானது கருப்பு வெள்ளையாக திரையில் தோன்றும்.
- கணிணியில் உள்ள Ctrl+P என்ற பொத்தானை பயன்படுத்தி பட்டாவை Print செய்து கொள்ளலாம்.
- இதில் சிட்டா பற்றிய விவரங்களும் அடங்கும்.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்