புதிதாக கட்டிய அல்லது வாங்கிய வீட்டிற்கு புதிய மின் இணைப்பை பெறுவதற்கு தற்போதைய நடைமுறையின் படி எவ்வாறு விண்ணப்பிப்பது? அதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அதைப் பற்றிய அனைத்து தகவல்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வளங்கவே இந்தப் பதிவு.
மின் இணைப்பைப் பற்றிய அடிப்படைத் தகவல் :-
- மின் இணைப்பில் இரு வகைகள் உண்டு அவை நாம் பயன்படுத்தும் மின் அளவைக்குத் தகுந்தாற் போல் மாறுபடும். அவை,
- ஓற்றைக் கட்டம் (1- Phase)
- மூன்று கட்டம் ( 3- Phase)
- மின் இணைப்புக் கட்டணங்களும் இந்த இணைப்புகளுக்குத் தகுந்தாற் போல் மாறுபடும்.
- அந்த வகையில் புதிதாக தமிழக அரசால் நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் மின் இணைப்புகளுக்கான புதிய மாற்றங்களில் அதற்கான கட்டணங்களின் விலை உயர்வும் ஒன்று. அவற்றை பின்வரும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர்.
- பதிவு மற்றும் செயலாக்க கட்டணம்
- LT or HT New Connection
- நிலத்தடி கேபிள்
- கட்டிட மேம்பாட்டிற்கான மின் சேவை
- இற்றை இணைப்புக் கட்டம்
- மூன்று இணைப்புக் கட்டம்
- இவற்றில் பதிவு மற்றும் செயலாக்க கட்டணத்திற்காக ரூ. 215 யையும்,
- நிலத்தடி கேபிள் மூலம் ஒற்றைக் கட்டத்திற்காக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 7,500 மற்றும் மூன்று கட்டத்திற்காக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 5,355 ம் வசூலிக்கப்படுகிறது.
- இது மட்டுமின்றி இணைப்பைப் பெறுவதற்கு சில விதிகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் சமர்பிப்பதில் சிறிய கட்டிடம், 300 சதுர மீட்டர் அல்லது 14 மீ உயரத்திற்கு குறைவான வணிக கட்டிடத்திற்கு மற்றும் 8 குடியிருப்பிற்கு 8 யூனிட்டிற்கு குறைவாக மின் விநியோகம் தேவைப்படும் வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- இவ்வாற் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாடு மின்வாரியத்தால் வழங்கப்படும் இணைப்பிற்கு 12 இலக்க நுகர்வோர் எண்ணுடன் கூடிய புதிய இணைப்பை வழங்குவர்
மின் கட்டணம் பற்றிய தகவல்கள் :-
- மின் வாரியத்தின் புது அறிக்கையின் படி மின் கட்டணத்திற்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இது ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட 4.83% அதிகமாகும். இதன் மூலம் அதிகளவு எரிசக்தி வீநாகாமல் தடுக்க முடியும் என்பது மின் வாரியத்தின் திட்டமாகும். அந்த வகையில் யூனிட்டுகளுக்கான கட்டண வரம்புகள் பின்வருமாறு,
- 400 யூனிட்டுகள் வரை – ஒரு யூனிட்டிற்கு ரூ. 4.80
- 401 யூனிட்டிலிருந்து 500 வரை – ஒரு யூனிட்டிற்கு ரூ. 6.45
- 501 யூனிட்டிலிருந்து 600 வரை – ஒரு யூனிட்டிற்கு ரூ. 8.55
- 601 யூனிட்டிலிருந்து 800 வரை – ஒரு யூனிட்டிற்கு ரூ. 9.65
- 801 யூனிட்டிலிருந்து 1000 வரை – ஒரு யூனிட்டிற்கு ரூ.10.70
- 1000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் – ஒரு யூனிட்டிற்கு ரூ. 11.80 க்கு மேல் கட்ட வேண்டும்.
- இந்த வகைக் கணக்கீட்டினை எளிமையான வகையில் தெரிந்து கொள்ள TNEB ன் Bill Calculator களைப் பயன்படுத்தலாம். இதுமட்டுமின்றி தேவையான மின் பழுவிற்கு ஏற்றார் போல் இதற்கான கட்டணத் தொகையும் மாறுபடும்.
புதிய மின் இணைப்பை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :-
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- ஏதாவதொரு அடையாள அட்டை (உதா. ஆதார் அட்டை, Pan Card, Driving Licence)
- சொத்து வாங்கிய உரிமையாளரின் பெயரில் உள்ள சொத்தின் ஆவணங்கள்(விண்ணப்ப பத்திரம்/பரிசுத் தூர்வு/ஒதுக்கீடு கடிதம்/கணிண பட்டா)
- பழைய உரிமையாளரின் பெயரில் இருக்கும் நிலத்திற்கு புதிய உரிமையாளரின் பெயரில் மின் இணைப்பு பெற வேண்டுமாயின் VAO அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட உரிம சான்றிதழ் சமர்பிக்கவும்.
- கூட்டுச் சொத்தாக இருப்பின் சட்ட பூர்வ வாரிசு சான்றிதழ், மூலப்பத்திரம், மற்றும் இணை உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்கள்
- மேலும் இதைப்பற்றிய தெளிவான விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள குறிப்பிட்ட இணையதளத்தில் Documents Required என்பதைத் தேர்வு செய்யவும்.
- மேற்கூறிய அனைத்தையும் Scan செய்து PDF வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
- புதிய மின் இணைப்பிற்கு இணையதறளம் மூலம் விண்ணப்பிக்க கீயே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினுள் நுழையவும்.
- அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள Menu Bar ல் Online Services என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்தி இத்தளத்தின் சில பயன்பாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவை,
- Payment And Billing Services
- New Services Connection
- Shifting Works
- Existing Service Connection
போன்ற தலைப்புகளில் தற்பொழுது நாம் விண்ணப்பக்க இருப்பது LT – Service Connection அதனைத் தேர்வு செய்து உள்நுழையவும்.
- அடுத்ததாக OTP சரிபார்தலுக்காக ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் மற்றும் E- Mail ID ஐ பதிவு செய்து அதற்கு அனுப்பப்படும் OTP ஐ உள்ளிட்டு Validate OTP என்பதை Click செய்ய வேண்டும்.
- இதனைத் தொடர்ந்து பொது விபரங்கள்/ Personal Details என்ற இணைய விண்ணப்பம் திரையில் தோன்றும். அதில் பின்வரும் தகவல்களை நிரப்ப வேண்டும். அவை,
- மாவட்டம்
- தாலுக்கா
- டவுன்/ மிராமம்
- பிரிவு
- மின் கோருபவர் வகை
- உரிமையாளர் விபரம்
- கட்டிடத்தின் விபரம்
- தொடர்பு /விண்ணப்ப முகவரி ஒன்றா என்பதை சரிபார்க்க வேண்டும்
- அடுத்து விண்ணப்பதாரரின் விரங்கள்/Applicant Details இதற்கான தகவல்கள்,
- விண்ணப்பதாரரின் பெயர்,
- விண்ணப்பதாதரின் தாய் /தந்தை/கணவர்/ நிறுவனத்தின் பெயர்
- கதவு/ வீடு எண்/ வளாகத்தின் பெயர்
- தெரு
- அஞ்சல் குறியூடு
- உரிமையாளரின் பெயர்
- வாடகைதாரரின் பெயர்
இதில் பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி உள்ளிட வேண்டும்.
- மின் விதித் தொகுப்பு விபரங்கள்/ Tariff details என்ற தலைப்பின் கீழ் உள்ள தகவல்கள் பின்வருமாறு,
- மின் விதித் தொகுப்பு(இதில் தேவையான தொகுப்பினை தேர்வு செய்ய வேண்டும்)
- மின் விகிதாச்சார வகை
- மின் தேவை வகை(1- Phase, 3- Phase)
- மின் கம்பியமைத்தல் முடிக்கப்பட்ட தேதி
- அமைப்பு பூமியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் குறிப்பிடவும்.
- இதே பெயரில் வேறு மின் இணைப்புகள் இருப்பின் அதன் விபரங்கள்
- ஆதார் அட்டை விபரங்கள்
- இதற்கு முன் உள்ள இணைப்பின் கட்டண நிலுவைத் தொகை பற்றிய தகவல்கள்
- நிறுவனத்திற்கான மின் இணைப்பு எனில் GST உள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்.
- இதைத் தொடர்ந்து பயன்படுத்த இருக்கும் மின்சாதனப் பொருள்கள் மற்றும் அவை எடுத்திக் கொள்ளும் தோராயமான மின் திறன் சுமை பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும்.
- பதிவு செய்ததும் Confirm and upload Documents என்பதைத் தேர்வு செய்து அடுத்த பக்கத்தை அடையவும்.
- இந்த செயல்பாடுகளின் போது அனுப்பப்பட்ட OTP எண்ணை இங்கே உள்ளிட்டு Validate OTP என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து இந்த விண்ணப்பத்தில் சமர்பித்த முகவரியும் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியும் திரையில் தோன்றும்.
- இரண்டையும் சரிபார்த்து ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்யும் பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்த பின் Next ஐ Click செய்ய வேண்டும்.
- இந்த செயல்பாடுகள் முடிவடைந்ததும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு அதற்கான Reference Number வழங்கப்படும்.
- அதனைப் பயன்படுத்தி இந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.
- இறுதியாக மீண்டும் முகப்புப் பக்கத்தை அடைந்து அதில் உள்ள Status தேர்வைப் பயன்படுத்தி உள்நுழைந்து இந்த Reference Number ஐ பதிவு செய்தால் இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பம் திரையில் தோன்றும்.
- இதனை பதிவிறக்கம் செய்து Print Out எடுத்து வைத்துக் கொண்டு அதனை உங்களின் பகுதிக்கு உட்பட்ட மின் விநியோக அலுவலகத்தில் சமர்பிக்கவும்.
- அவர்களின் சரிபார்த்தலை பெற்ற பின் இதற்கான கட்டணத்தை செலுத்துவது நல்லது. அவ்வாறு சரிபார்தலுக்குப் பின் இதே தளத்தை மீண்டும் பயன்படுத்தி அதன் முகப்பு பக்கத்தை அடைந்தவுடன் அதில் User ID மற்றும் Password உள்ளிட வேண்டும். அதில் User Id என்ற இடத்தில் Application Reference Number மற்றும் Password என்ற இடத்தில் Mobile Number ஐயும் சர்பித்து உள்நுழையவும்.
- அடுத்து உங்களுக்கான விண்ணப்பம் பற்றிய தகவல் திரையில் தோன்றும். அதில் உள்ள Pay Bill என்ற தேர்வைப் பயன்படுத்தி உங்கள் விண்ப்பத்தில் குறிப்பிட்ட தகவல்களுக்கு தகுந்த வண்ணம் விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை சரிபார்த்து செலுத்த வேண்டும். இதில் QR Code Scan செய்து UPI பணப்பரிமாற்றம் செய்து முடிக்கலாம்.
- இதற்கான இரசீதைப் பெற Download Receipt என்பதை பயன்படுத்தி பெற்றுக்கொல்லலாம்.
இப்பொழுது இணையதளத்தில் புதியதாக மின் இணைப்பிற்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.
தரவுத் தளம்:
https://www.tnpdcl.org/en/tnpdcl
உதவி எண்:
044-2852 4422,
044-28521109,
1912
94987 94987
இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள https://trickstamizha.com என்ற இணையபக்கத்தை பின்தொடரவும்.