பட்ஜெட் பற்றிய முன்னுரை:-
அரசியலமைப்புச் சட்டம் கட்டுரை 112,265, 266, 113, போன்றவைகள் மத்திய பட்ஜெட்டிற்கான வரையறைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை இருக்கக்கூடிய நாட்களை நிதி ஆண்டாக கணக்கிட்டு அந்த ஆண்டிற்கான பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அறிமுகமானது.
இந்த ஆண்டிற்கான (2025-2026) பட்ஜெட்டை நம் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த பிப்ரவரி 1, 2025 ல் வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த பட்ஜெட் அவரின் தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் தாக்கல் ஆகும்.
இதற்கு முன் அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை கொண்டவர் நமது முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் ஆவார். அவரை தொடர்ந்து தற்போது அதிக தொடர்ச்சியான பட்ஜெட் தாக்கல் செய்தவராக இவர் உள்ளார்.
அவ்வாறு இந்தாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அவர் குறிப்பிட்ட அறிக்கையின் சில தகவல்களைப் பற்றியே இந்தப் பதிவு.
பட்ஜெட் 2025:-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
குறள்- 542, அதிகாரம் – 55, செங்கோன்மை
என்ற திருக்குறளை மேற்கோல் காட்டியே இந்தாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் துவங்கியது. இதில் குறிப்பிட்ட தரவுகளை அடுத்தடுத்த தலைப்புகளின் குறிப்பிட்டுள்ளோம்.
வருமான வரி:-
- இதுவரை 7 லட்சம் வருட வருமானம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி தற்பொழுது அதன் உச்ச வரம்பை 12 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது மாத வருமானம் 1 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 0-4 லட்சம் – எந்த வித வரியும் இல்லை
- 4-8 லட்சம் – 5% வரி கட்டாயம்
- 8-12 லட்சம் – 10% வரி கட்டாயம்
- 12-16 லட்சம் – 15% வரி கட்டாயம்
- 16-20 லட்சம் – 20% வரி கட்டாயம்
- 20-24 லட்சம் – 25% வரி கட்டாயம்
- 24 க்கு மேல் – 30% வரி கட்டாயம்
- 4 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்பதை அறிக்கையின் படி விளங்கும். அதனோடே Income Tax Law Section -87A வின் படி வரி விலக்கு என்பதை இந்தாண்டு உயர்த்தி உள்ளனர்.
- ஆகையால் இவ்விதியின் படி இறுதியில் 12 லட்சமாக உச்ச வரம்புத் தொகை கணக்கிடப்படும்.
- மேலும் நிலையான கழிவு (Standard Deduction) என்பது எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.75,000 உள்ளது. ஆக அந்த இரண்டையும் சேர்த்து ரூ. 12,75,000 வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்பதே இந்த பட்ஜெட்டின் புதிய மாற்றம்.
- ரூ.13 லட்சம் வருமானம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வரி விபரம்: 2024-2025 ஆண்டில் உச்ச வரம்பிற்கு மேல் இருந்தால் ரூ.1,00,000 ற்கு 20% என்பது மாறி ,2025-2026 ல் ரூ. 75,000 ற்கு 15% என உணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட சற்று குறைவாகவே உள்ளது.
சொந்த வீட்டிற்கான வரி சலுகை:-
- நடுத்தர மக்களின் பெரும் கனவுகளில் ஒன்றான சொந்த வீட்டிற்கான வரிச் சலுகைகளைப் பற்றியும் இந்தாண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
- போன வருட பட்ஜெட்டில் ஒரு வீட்டிற்கான வாடகைக்கு ரூ.2.4லட்சம் வரை TDS(Tax Deduction at Source) எனப்படும் வரியை உச்ச வரம்பாக அறிவித்திருந்தது.
- ஆனால் இவ்வாண்டின் பட்ஜெட்டில் 2 வீடுகளுக்கான வாடகைக்கு வழங்கப்படும் வரியின் மதிப்பை 6 லட்சமாக உயர்த்தியுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு வசதிக்காக ரூ. 15,000 கோடியை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
HEAL INDIA:-
HEAL- Health Education Assistance Loan
- இந்தியாவை உலகலாவிய நாடுகள் மத்தியில் ஒரு சிறந்த மருத்துவ சுற்றுளாவிற்கான நாடாக்க திட்டமிட்டு இதனை அறிவித்துள்ளனர்.
- இதனடிப்படையில் சுகாதார சேவைகளை மேம்படுத்தி வெளிநாட்டினரிடையே மருத்துவ சிகிச்சை வழங்கி பிற நாட்டு நோயாளிகளை ஈர்க்கிறது.
- இதனால் உயர்தர மற்றும் மலிவு விலை மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குனருடன் இணைந்து பணியாற்ற இத்திட்டம் உதவுகிறது.
- அதற்காக HEAL INDIA என்று இத்திட்டத்தை குறிப்பிட்டுள்ளது.
மகளிர் சுய உதவிகளுக்கான திட்டம்:-
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கான “கிராமின் கிரெடிட் ஸ்கோர்” என்பதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
- இதன் படி அவர்களுக்கான தனி நபர் கடன் அட்டை வழங்கப்படும்.
கிராமப்புற பொருளாதாரம்;-
- இத்தியாவில் உள்ள கிராமப்புரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தபால் நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளனர்
- அதற்காக ரூ. 1.5 லட்சம் ஒதுக்க இருப்பதாக இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
கடனுதவிக்கான திட்டம்:-
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் தொழில்களுக்கு கடன் உத்திரவாதம் என்பது உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- புத்தாக்க தொழில்களுக்காக இந்தாண்டு நிதியில் இருந்து 10,000 கோடி ஒதுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
- பெண்கள், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் போன்றவர்களில் முதல் முறை தொழில் துவங்குவோரை ஊக்கப்படுத்தும் வகையில் 5 லட்சம் பேருக்கு ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.
- புதிய ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்கு ரூ. 10,000 கோடியுடன் கூடுதலாக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.
- தெரு
டெலிவரி ஊழியர்களுக்கான திட்டம்:-
- இந்தியாவில் Swiggy, Zomato, செப்டோ போன்ற தளங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நபருக்கும் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மற்றும் இலவச இன்சூரன்ஸற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது
- இவர்கள் E-Shram இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
- இதனால் இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மருந்துகளுக்கான வரிச்சலுகை:-
- மத்திய அரசானது 200 புதிய புற்றுநோய் மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்
- இதில் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 வகையான நோய்களுக்கான மருந்துகளுக்கு இறக்குமதி வரி கிடையாது.
வேலை வாய்ப்பு:-
- இந்த வருடம் தோல் பொருட்கள் உற்பத்தி துறையில் மற்றும் காலணிகள் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- அதற்காக 22 லட்சம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
- உலக அளவில் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இந்தியாவை ஒரு மையமாக அமைக்கும் வகையில் வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான திட்டம்:-
- மூத்த குடிமக்களின் சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு ரூ. 1,00,000 வரை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரை ரூ. 50,000 வரை வரி விலக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயம்:-
- பீகாரில் மக்கானா எனப்படும் தாமரை விதைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றும், அதற்கான வாரியம் அமைத்து சந்தைப்படுத்துதலை சுலபமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
- மேலும் வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். அதற்காக பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் - காய்கறிகள், பழங்களுக்கு ஒருங்கிணைந்த வகையில் மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்
- கிஷான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கான கடன் பெறும் தொகையை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்துள்ளது.
- இதனால் 7.7 கோடி விவசாயிகள் பயணடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
- உணவுத் துறையில் தன்னிறைவு அடைய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம்:-
- பீகாரில் இருக்கும் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி பாட்னாவில் விமான நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர.
- UDAN திட்டத்தின் மூலம் இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்விக்கான திட்டம்:-
- பள்ளிகளில் குழந்தைகளின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்த அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அதற்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் புதிய மையங்கள் 5 ஆண்டுகளில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
- IIT பாட்னா வின் உள்கட்டமைப்பினை விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
- ஊரகப் பகுதிகளில் இருக்கும் அனைத்து அரசுப் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிராட் ப்ரேண்டு வசதியுடன் இணையத்தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதுபோன்று 2025-2026 க்கான மத்திய பட்ஜெட் தாக்களின் மூலம் இவ்வாண்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் ,
- வரிவிதிப்பு
- நகர்புற மேம்பாடு
- கனிம வளங்கள்
- நிதி மேலாண்மை
- மின்சாரம்
- ஒழுங்குமுறை
போன்ற மற்ற 6 துறைகளின் சீரமைப்புகள் பற்றியும் அறிவிக்கப்பட்டிருந்தது.