அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து இனி பண்டிகை நேரத்தில் கூட சொகுசா பயணிக்கலாம்…|Tricks Tamizha

அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து இனி பண்டிகை நேரத்தில் கூட சொகுசா பயணிக்கலாம்…|Tricks Tamizha

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமானதை நம்மையே உணரவைப்பது இந்தப் போக்குவரத்து நேரத்தில் தான்.  ஆம், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டங்களாலும் வாகன நெரிசல்களாலும் நிறைந்து காணப்படுகின்றது.

அதிலும் நடுத்தர மக்கள் அதிகம் பயணம் செய்ய தேர்ந்தெடுப்பது பேருந்தை தான். ஏனெனில் இரயில் போன்ற மற்ற பயணதேர்வைக் காட்டிலும்  பேருந்தில் விலை சற்று சாதகமாகவும், அதே நேரத்தில் விரைவான பயணத்திற்கும் நம்மை ஊக்குவிக்கிறது.

TNSTC – (Tamil Nadu State Transport Corporation )

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் என்பது தமிழ்நாட்டின் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடியது. இது தமிழ்நாட்டிற்கு உள்ளே உள்ள நகரங்களுக்கும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கும் இடையை போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றது.

TNSTC நிறுவனமானது 1972 ல் அதாவது 52 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு பொதுத்துறை அமைப்பாகும். இதன் தலைமையகம் சென்னை. மேலும் நமது அன்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் வரை பயணம் செய்ய அரசு இந்நிறுவனத்தின் மூலம் நமக்கு பயண சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் மூலம் தோராயமாக ஒரு நாளைக்கு 288,880,000 வருவாய் வரலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 1,23,317  பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

பேருந்தின் வகைகள்:-

வெள்ளைப் பலகை —- சாதாரண சேவைக்காக — அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும்


பச்சைப் பலகை —- விரைவு சேவை —– சில முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்.


நீலப் பலகை —– சொகுசுப் பேருந்து —- அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் (வசதியான இருக்கைகள்)


இளம் பச்சைப் பலகை —- குளிர்சாதனப் பேருந்து —- அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் (வசதியான இருக்கைகள்)


கரும்  பலகை — இரவு சேவை —– இரவு 10 மணிக்குப் பிறகு


பெண்கள் சிறப்புப் பேருந்து — சாதாரண சேவை (கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில்)


துணை நிறுவனம்

  1. MTC-Metropolitan Transport Corporation (Chennai) ltd.
  2. SETC- State Express Transport Corporation (Tamil nadu) ltd.
  • MTC-மாநகர போக்குவரத்துக் கழகம் என்பது ஜனவரி 1, 1972 ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்து கழகம்  என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
  • ஆகையால் இதன் தாய் நிறுவனமாக பல்லவன் போக்குவரத்து கழகம் லிமிடெட் உள்ளது.
  • இதன் தலைமையகம் சென்னை.
  • அதிகாரப்பூர்வ தரவுத்தளம் (MTC):https://mtcbus.tn.gov.in
  • SETC- அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என்பது இதற்கு முன்பு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்றும், அதன் பின் ராஜிவ் காந்தி போக்குவரத்து கழகம் அல்லது J.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் என்றும் வழங்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் சென்னை.
  • இந்த வகை பேருந்துகள் டீசலினால் இயக்கப்படுகிறது.
  • இதற்கான டிப்போக்கள் 20 இதங்களில் உள்ளன.
  • இந்த SETC  பேருந்தில் ஆண்டு முழுவதும் நிர்ணயிக்கப்பட்டாலும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.
  • இருந்த போதிலும் அதிகமான மக்கள் கூட்டத்தின் காரணமாக மக்களால் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் போகிறது.
  • ஆகையால் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதியை அரசு கொண்டுவந்தது.

முன்பதிவு செய்யும் முறை:

அரசுப் பேருந்தின் முன்பதிவானது ஒரு பேருந்தின் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். இவை  பேருந்து நிலையங்களில் உள்ள SETC அலுவலக அறையில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும்  தற்பொழுது மக்கள் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கின்றனர்.

  1.  அரசால் வழங்கப்பட்ட தரவுத்தளத்தின் வழியே உள்துழைந்ததும்  பயணர் குறியீடு மற்றும் கடவுச்சொல் விவரங்களை உள்ளிடடவும். அல்லது புது பயணராக இருப்பின் கணக்கை உருவாக்கும் தேர்வில் கேட்கப்படும் தகவல்களை (கைப்பேசி எண், E-MAIL ID, பயனரின் முழு பெயர் ) உள்ளிடவும். அதன் பின் பதிவு செய்யப்பட்ட பயணர் குறியீடு, கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவேண்டும்.
  2. அடுத்த பக்கத்தில் நாம் பயணம் செய்ய வேண்டிய இடம், தேதி, நேரம்,நபர்கள் பற்றிய தகவல்களை உள்ளிடவும்.
  3. இதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் நாம் குறிப்பிட்ட தேதியில் எந்த எந்த பேருந்துகள் செல்ல இருக்கின்றது என்ற தகவல்களுடன் ஒரு திரை தோன்றும்.
  4. அந்த விவரங்களில் ஒவ்வொரு பேருந்தின் கட்டணம் பெரியவர் முதல் சிறியவர் வரை தனித்தணியான கட்டண விவரங்கள் தரப்பட்டுள்ளது.
  5. மேலும் அதில் உள்ள பயணத்தகவல்(TRIP CODE) ஒவ்வொரு பேருந்தின் தகவல்களுடன் அதன் வழி மார்கம் பற்றியும்  குறிப்பிடத்தக்கது.
  6. பின் நமக்குத் தேவையான டிக்கெட்டை பதிவு செய்தவுடன்  BOOK என்ற தேர்வில் நாம் தேர்ந்தெடுத்த பேருந்தில் நமக்கு பிடித்த இருக்கையையும் தேர்வு செய்து கொள்ளலாம்
  7. பின் அதற்கு கீழே குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பயணச்சீட்டு தயாராக இருக்கும். அதனை சமர்பிக்கவும். பயணத்தகவல் உறிதி செய்யும் பகுதியை சரிபார்த்ததும் பயணச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் , மேலும் நாம் குறிப்பிட்ட EMAIL-ID க்கு   பயணச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
  8. பயணச்சீட்டிற்கான பணம் செலுத்தும் அடுத்த பத்தியில் அதற்கான பணத்தை செலுத்திய பின்  பயணத்திறகான முன்பதிவு  சமர்பிக்கப்படும்.

இவ்வாறு நம் பயணத்தி்ற்கான முன்பதிவை சுலபமாக செய்து கொள்ளலாம்.

தரவுத்தளம்:https://www.tnstc.in

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *