உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த Deepseek AI தொழில்நுட்பம்.  அப்படி இதில் என்ன சிறப்புகள் உள்ளன.  இதோ அதற்கான சில பதில்கள்…| Tricks Tamizha

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த Deepseek AI தொழில்நுட்பம். அப்படி இதில் என்ன சிறப்புகள் உள்ளன. இதோ அதற்கான சில பதில்கள்…| Tricks Tamizha

AI என்றால் என்ன ? :-

  • AI – Artificial Technology (செயற்கை நுண்ணறிவு).
  • உலகில் தொழில்நுட்பம் சார்ந்த பல கண்டுபிடிப்புகளும் இயந்திரங்களும் நாளுக்கு நாள் வளர்ச்சியின் உச்சத்தை எட்டி இருந்தாலும் மனிதனின் பகுப்பாய்ந்து செயல்படும் திறனும் அவனின் படைப்பாற்றலும் தான் அவைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டியிருந்தன. ஆனால் அதற்கும் குறைவின்றி அதனை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பத்தின் விண்ணை எட்டிய வளர்ச்சியாக நம்மிடையே உருவெடுத்துள்ளது தான் இந்த AI  தொழில் நுட்பம்.
  • இதற்கு முன் மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்கள் மனிதனின் அறிவுக்கிணங்க கொடுக்கப்பட்ட கட்டளைகளை மட்டுமே செயல்படுத்தி வந்தன. ஆனால் AI தொழில்நுட்பத்தால் மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட செயல்களைக் கூட நிகழ்த்திக் காட்ட முடிகிறது.
  • இவை செயல்பாட்டின் அடிப்படையிலும், திறனின் அடிப்படையிலும் இரண்டு முறைமைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது.
  • அத்தகைய இந்த AI தொழில்நுட்பத்தை 1956 ஆம் ஆண்டு டார்மவுத் என்னும் பணிப்பட்டறையில் நிறுவ முயற்சித்தனர். ஆனால் அதன் பல கட்ட சுழற்சி சோதனைகளைத் தொடர்ந்து தோல்விகளையும் நிதி இழப்புகளையும் சந்தித்ததால் அதன் முயற்சி சற்று தொய்வடைந்தது.
  • ஆனால் 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு மனிதனின் ஆர்வமும் கற்றல் திறன்களின் வளர்ச்சியும் இதனை சாத்தியப்பட வைத்துள்ளது. ( உதாரணமாக ஒரு மின்விளக்கை எடுத்துக் கொண்டால் அதனை ON செய்தால் விளக்கு எரியவும் OFF செய்தால் அணைய மட்டும் வழங்கப்பட்டிருந்த  இந்த தொழில்நுட்பத்தில், மனிதனின் மூலையைப் போன்று பகுப்பாய்ந்து எப்பொழுது விளக்கு எரிய வேண்டும் எப்பொழுது அணையவேண்டும் என்பதை தண்ணியல்பாகவே ஆராய்ந்து அதனை மனிதனின் ஈடுபாடு இல்லாமல் செயல்படுத்தும் வகையில் சில Coding களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் இந்த  AI ) .
  • இந்த AI தொழில்நுட்பத்தை வைத்து மனிதனின் மூலைக்கு மாற்றாக மட்டுமல்ல ஒரு மனிதனுக்கு மாற்றாகவே உருவாக்கி செயல்படுத்த முடியும். அதற்கு உதாரணமாக சௌதி அரேபியாவின் குடியுரிமைப் பெற்ற ” Sofia” என்ற AI, IBM ன் “DeepBlue“, Digit, Pepper, Spot, Surena IV, Aquanaut, Stuntronic Robot, Handle, Atlas, Ameca, HRP 5P போன்ற சில சக்திவாய்ந்த கண்டுபிடிப்புகளை கூறலாம்.
  • இது போன்ற கண்டுபிடிப்புகள் உலக நாடுகளிடையே பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளது. அதில் முக்கியமான இடத்தில் அமெரிக்காவும் Chat GPT யும், சைனாவின் Deep Seek போன்றவை உள்ளன.

AI ன் அடுத்த கட்ட முன்னேற்றம்:-

  • இந்த AI தொழில்நுட்பத்தை வைத்து பல விந்தையான நிகழ்வுகளை மனிதர்களிடையே  அறிமுகம் செய்தது Google ன் Bard AI, Gemini AI, Meta AI, GROK AI, மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த அமெரிக்கர்களின் Chat GPT என்னும் AI Tool.  இதில் அதிக பரபலமானதாக கருதப்பட்டது Chat GPT.
  • உலகின் முதல் பணக்காரரான பில்கேட்ஷ் ன் Microsoft நிறுவனமே 500 இந்த Chat GPT நிறுவனத்தின் பின்புலமாக இருந்து  செயல்படுத்திக் கொண்டு உள்ளது.
  • இந்தக் கருவி தான் நம் எதிர்காலம் என்பது போல அனைத்து துறைகளிலும் காலூன்றி விட்ட இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடானது Google Brad AI  ஐ விட அதிக செயலாக்கம் கொண்டதாக உள்ளது.
  • இந்த Chat GPT ஐ 2022 ,நவம்பர் 30 ஆம் தேதியில் Open AI ஆனது கலத்தில் இறக்கியது. இந்த AI ChatBot ஐ வழங்கிய 5 நாட்களிலேயே 1 Million  பயனர்களை சென்றடைந்தது.  இந்த தளத்தை பயன்படுத்தி 2021 வரை சேகரிக்கப்பட்ட  தகவல்களின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் துள்ளியமாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • அதற்காக NVIDIA என்ற AI Chip நிறுவனத்தின் பின்புலத்தில் 600 பில்லியன் டாலர் மதிப்பில் இதன் செயல்பாடுகள் உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும்  இதன் பயன்பாட்டை வழங்கி வந்தது.
  • ஆனால் அதன் அதிகப்படியான உருவாக்கத்தொகையும், அதன் Open Source ஐ அனைவரும் பயன்படுத்த இயலாத நிலையும்  இந்த ChatGPT உருவாக்கத்தால் சைனா சந்தித்து வந்த பல பொருளாதார நெருக்கடிளும்  தான் CHAT GPT ஐத் தொடர்ந்து இவ்வுலகில் அடியெடுத்து வைத்த DEEPSEEK க்கிற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

DEEPSEEK பற்றிய ஒரு அறிமுகம்:-

  •  ஹாங்ஜோவை தளமாக்க கொண்டு தொடக்கப்பட்ட இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு பங்குதாரர் லியான் வென்ஃபெங் ஆவார். அவரின் பங்கினைத் தொடர்ந்து 2023 ல் Deep Seek உருவாக்கம் தொடங்கியது.
  •   இந்நிறுவனம் தற்பொழுது R1 மற்றும் R1.0 என்ற புதிய AI மாடல்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இதில் உள்ள சிறப்பம்சங்கள் : R1 மாடலை தற்போது புலக்கத்தில் உள்ள AI மாடலைப் போன்று வடிவமைக்கப்பட்டதும், R1 zero மாடல் தானாகவே கற்பித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
  • அமெரிக்காவின் முதலீட்டு மதிப்பை விட 6 மில்லியன் குறைவான பொருட்செலவே இதன் உருவாக்கத்திற்கு தேவைப்பட்டதால் சைனாவின் முதலீட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது.
  • ChatGPT ஐப் போல் இல்லாமல் இதன் பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பான ChatGPT  க்கு  இது ஒரு பெரிய இழப்பாக மாறியுள்ளது.
  • ஆனால் அதற்காக Chat GPT மற்றும் jemini AI போன்ற AI ன் பழைய version களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • அதனை Update செய்ய தொகை செலுத்த வேண்டும்.

நம்ப Mobile ல் கூட இந்த Deepseek ஐப் பயன்படுத்த முடியுமா? :-

  • இவ்வாறு இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த DeepSeek என்னும் Open Source AI Chat Bot ஐ நம்ம Mobile Phone லயே இனி இலவசமாகவே பயன்படுத்தி பார்க்க முடியும்.
  • இந்த தளமானது  Play Store மற்றும் APP Store வழியேயும் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்த முடியும்.
  • பதிவிறக்கம் செய்வதற்கு கீழ்கண்ட வழிகளை மேற்கொள்ளவும்.
    1. கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்தில் உள்நுழைந்து DeepSeek-AI Assistant என்பதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
    2. அதில் உங்களின் E-Mail ID மற்றும் Password ஐ உள்ளிட்டு உள்நுழையலாம். அல்லது Google Account ஐப் பயன்படுத்தியும் இதில் உங்கள் கணக்கை தொடரலாம்.
    3. இப்பொழுது இந்தத் தளத்தினுடைய Chat Bot திரையில் தோன்றும்.
    4. அதில் நம்மால் பல முறைமைகளில் தகவல்களை பெற முடிகிறது.
  •   இவ்வாறு நம்மால் சுலபமாக இந்த தளத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது.
DEEPSEEK தளத்தைப் பற்றிய தகவல்கள்;-
  • Version—> 1.0.8
  • Users—> 1 கோடிக்கும் மேல்
  • கோப்பின் அளவு—> 6.01 MB
  • வெளியீடு—> ஜனவரி 8, 2025
தரவுத்தளம்:-

https://play.google.com/store/apps/details?id=com.deepseek.chat

தொடர்புக்கு:-

Twitter:@deepseek_ai

EMail: [email protected]

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *