ATM (Automated Teller Machine)
“தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம்” என்னும் இதனை முதன்முதலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் கண்டறிந்தார். இந்த இயந்திரத்தின் மூலம் வங்கிகளின் செயல்பாடுகள் முடிவடைந்த நேரத்திற்கு பிறகும் கூட பண பரிவர்த்தனை செய்துகொள்ள முடிகிறது. இதனால் வங்கிகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்து பணத்தை செலுத்தவோ, பெறவோ தேவையில்லை. இதனாலேயே மக்கள் இந்த ATM இயந்திரத்தை இன்று அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு அதிக புலக்கத்தில் உள்ள இந்த ATM Card-ஐ பயன்படுத்துவதற்கு முன் அதனை அந்த அட்டையின் உரிமையாளருக்கு மட்டுமே தெரிந்த நான்கு இலக்க Pin எண்ணை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தப்பதிவின் மூலம் நாம் பயன்படுத்தும் பல விதமான வங்கிகளின் ATM Card களின் Activation-ஐப் பற்றியும் அதற்கான Pin Number அமைப்பது பற்றியும் காணலாம்.
IOB- Indian Overseas Bank :-
- IOB வங்கியின் கிளை ATM machine ல் முதலில் நமது பதிய IOB ATM Card ஐ உள்ளிடவும். அதன் செயல்பாடுகள் முடியும் வரை சிறிது நேரம் Card ஐ வெளியே எடுக்க கூடாது.
- அடுத்து உங்களுக்கான மொழியை (English, Hindi, தமிழ்) தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் வங்கிக் கணக்கில் பதிவிட்டு இருக்கும் கைப்பேசிக்கு 6 இலக்க எண்ணானது (OTP) அனுப்பப்படும். அதனை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்பொழுது அந்த ATM Card ஐ வெளியே எடுத்து மீண்டும் உள்ளிடவும்.
- மீண்டும் மொழியைத் தேர்வு செய்த பின் வரும் அடுத்த பத்தியில் OTP ஐ உள்ளிட்டு “Confirm” ஐ Click செய்ய வேண்டும்.
- அடுத்ததாக “Please Enter Your New pin” என திரையில் தோன்றும். அதற்கு கீழே உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய 4 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதே எண்ணை மீண்டும் உள்ளிடவும்.
- இறுதியாக “Pin Creator Successfully ” என்று தோன்றிய பின் Card வெளியே எடுத்து விட வேண்டும்.
இப்பொழுது IOB வங்கியின் ATM Card Activation நிறைவடைந்தது.
Indian Bank :-
- இந்தியன் வங்கியில் வழங்கப்பட்ட ATM Card ஐ புதிதாக செயல்படுத்த அந்த வங்கியின் ATM கிளையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- அவ்வாறு இந்தியன் வங்கியின் கிளை ATM இயந்திரத்தில் உங்களின் செயல்படுத்த வேண்டிய அட்டையை உள்ளிடவும்.
- செயல்பாடுகள் முடியும் வரை அட்டையை வெளியே எடுக்காமல் இருக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் Generate or Setting என்பதையும் அடுத்ததாக Generate OTP என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக உங்களின் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு Correct என்பதை Click செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து உங்களின் வங்கி கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கணக்கின் உரிமையாளர் பெயர், வங்கிக் கணக்கு எண், கைப்பேசி எண் அனைத்தும் திரையில் தோன்றும்.
- அதனை சரிபார்த்ததும் Confirm என்பதை தேர்வ செய்ய வேண்டும்.
- இப்பொழுது வங்கிகு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிற்கு OTP எண் அனுப்பப்பட்டிருக்கும். அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த ATM அட்டையை மீண்டும் உள்ளிடவும்.
- இதில் உள்ள Generate or Setting என்பதைத் தேர்வு செய்யவும். அதைத் தொடர்ந்து SET PIN என்பதைத் தேர்வு செய்து கைப்பேசி எண்ணை உள்ளிடவும். இப்பொழுது ஏற்கெனவே குறித்து வைத்துள்ள OTP எண்ணை உள்ளிட்டு Correct என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்த பக்கத்தில் உங்களுக்கு மட்டுமே தெரிந்த தனித்துவமான 4 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்.
- இந்த எண் தான் நீங்கள் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் பொழுதும் குறிப்பிடும் இரகசிய எண் ஆகும். அதனை உறுதி செய்ய மீண்டும் உள்ளிடவும்.
- இப்பொழுது உங்கள் புதிய ATM அட்டைக்கான புதிய Pin Number ஐ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவிட்டது.
State Bank Of India :-
- SBI வங்கியின் புதிய ATM Card ஐ Activate செய்வதற்கு ஏதாவதொரு SBI ATM கிளையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- முதலில் அந்த ATM அட்டையை இயந்திரத்தில் செலுத்த வேண்டும். செயல்பாடுகள் முடியும் வரை அட்டையை வெளியே எடுக்கக்கூடாது என்ற தகவல் திரையில் தோன்றும்.
- உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்த பக்கத்தில் PIN Generation என்பதைத் தேர்வு செய்யவும்.
- பின் உங்களின் 10 இலக்க SBI வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு அதற்கு கீழே குறிப்பிட்ட Press If Correct என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்தாக “Your Transaction is Being Processed Please Wait… ” என்ற தகவல் திரையில் தோன்றும். ஆகையால் சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின் வங்கியில் இருந்து உங்கள் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் “Transaction Complete “என்ற தகவல் திரையில் தோன்றியதும் அடுத்த பக்கத்தில் வரும் NEXT TIME என்பதை Click செய்தால் “Your Transaction is Being Processed Please Wait… ” என்ற தகவல் மீண்டும் திரையில் தோன்றும்.
- அடுத்து “Please Take Your Card ” என்ற தகவல் தோன்றியதும் உங்களின் அட்டையை வெளியே எடுக்க வேண்டும். பின் மீண்டும் அதை உள்ளே செலுத்த வேண்டும்.
- ஏற்கெனவே செய்த செயலை மீண்டும் தொடரும் வண்ணம் உங்கள் மொழியைத் தேர்வு செய்து Banking என்பதை Click செய்யவும்.
- அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் Pin Change என்பதை தேர்வு செய்து 10 லிருந்து 25 என்ற எண்ணிற்கு இடையேயான எதாவதொரு இரண்டு இலக்க எண்ணை உள்ளிட்டு Yes என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் உங்களுக்கு வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட OTPஎண்ணை உள்ளிடவும்.
- அடுத்ததாக உங்களின் புதிய 4 இலக்க PIN Number ஐ உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தான் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க உள்ளிட வேண்டிய கடவுச் சொல் ஆகும்.
- “Transaction Complete “என்ற தகவல் திரையில் தோன்றியதும் அட்டையை வெளியே எடுத்து விடலாம்.
- இப்பொழுது உங்களுடைய SBI ன் புதிய ATM Card ற்கான Activation வெற்றிகரமாக முடிவடைந்தது.
Canara Bank :-
- Canara வங்கியில் இருந்து உங்கள் கணக்கின் கீழ் அனுப்பப்பட்ட புதிய ATM Card ஐ Activate செய்வதற்கு Canara வங்கியின் கிளை ATM மையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ATM அட்டையை இயந்திரத்தில் உள்ளிட்டதும் மொழியை விருப்பத் தேர்வாக அமைத்துக் கொள்ளுங்கள் .
- தேர்ந்தெடுத்ததும் அதற்கு கீழே உள்ள Green Pin/ Forget Pin எனபதை Click செய்யவும். மீண்டும் உங்களுக்கான மொழியைத் தேர்வு செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் உள்ள Generate OTP என்பதை தேர்வு செய்யவும்.
- அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்க எண்ணை உள்ளிட்டு Correct என்பதை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது உங்கள் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் கொடுத்த கைப்பேசி எண்ணிற்கு OTP எண் அனுப்பப்பட்டிருக்கும். அதை இங்கு உள்ளிட்டு Correct ஐ Click செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் உங்களுக்கு மட்டுமே தெரிந்த நினைவில் வைத்திருக்க இயலும் 4 இலக்க எண்ணை உள்ளிடவும்.
- அதனை உறுதி செய்ய மீண்டும் உள்ளிட்டதும் உங்களுக்கான செயல்பாடுகள் முடிவடைந்து விடும்.
- இப்பொழுது உங்கள் Canara வங்கியின்புதிய ATM Card ற்கான Activation Process நிறைவடைந்து விட்டது.
Union Bank :-
- Union வங்கியின் கிளை ATM மையத்தை அனுகி வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட புதிய Union Bank ATM Cardஐ ATM இயந்திரத்தில் செலுத்தவும்.
- அதன் பின் திரையில் வழங்கப்பட்டுள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்குக் கீழே உள்ள “Set ATM Pin” என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்த பக்கத்தில் GREEN PIN OTP என்ற தலைப்புக்கு கீழே உள்ள இரு தேர்வுகளுள் OTP GENERATE என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் YES என்பதை Click செய்து தொடர்ந்தால் திரையில் OTP GENERATED SUCCESSFULLY என்ற தகவல் தோன்றும்.
- அதே நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்பொழுது உங்கள் ATM அட்டையை வெளியே எடுத்து மீண்டும் உள்ளிடவும்.
- மீண்டும் அதே போன்று SET ATM PIN என்பதைத் தேர்வு செய்து GREEN PIN OTP என்ற தலைப்புக்கு கீழே உள்ள மற்றொரு தேர்வான OTP VALIDATE என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது குறித்து வைக்கப்பட்ட OTP எண்ணை பதிவு செய்யவும்.
- சிறிது நேர காத்திருப்பிற்குப் பின் வரும் பக்கத்தில் உங்களின் புதிய 4 இலக்க PIN Number ஐ உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பதிவு செய்யவும்.
- இதே எண்ணை உறுதிப்படுத்தும் வகையில் மறுபடியும் உள்ளிடவும். இதைப் பயன்படுத்தியே அடுத்தடுத்த பயன்பாட்களில் பணம் எடுக்க இயலும்.
- இறுதியாக “PIN CHANGE COMPLETE PLEASE TAKE YOUR RECEIPT” என்ற தகவலுடன் இந்த Union வங்கியின் புதிய ATM Card Activation முடிவடைந்தது.