நம் தமிழக மாணவ,மாணவிகளின் உயர்கல்விக்காகவும் அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் தமிழக அரசால் அவர்களை ஊக்கப்படுத்த இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதாவது படிப்பறிவு குறைந்த ஒரு குடும்ப பின்னனியில் இருந்து வரும் மாணவர்களின் உயர்கல்விக்கான சில சலுகைகளுக்கு உத்திரவாதமாக வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.
பட்டதாரிச் சான்றிதழின் இரு வேறு வகைகள் :-
- முதல் பட்டதாரிச் சான்றிதழ்
- முதல் தலைமுறைப் பட்டதாரிச் சான்றிதழ்
முதல் பட்டதாரிச் சான்றிதழை 12 ஆம் வகுப்பு முடித்த உடன் விண்ணப்பித்துப் பெறுவதன் மூலம் பின்தங்கிய குடும்பத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்களின் கல்லூரிக் காலங்களில் பின்வரும் பயன்களைப் பெற முடியும். அவை,
- அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய உயர்கல்வி உதவித்தொகை
- கட்டணச் சலுகைகள்
- கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க
- தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க
இந்த சான்றிதழ் கீழ்கண்ட படிப்புகளின் சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை,
- கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள்
- 3 வருட டிப்ளோமா படிப்புகள்
- தொழில் முறை படிப்புகளான மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற படிப்பகள்
மூன்று ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய இந்த சான்றிதழை தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய தாசில்தாரால் மட்டுமே வழங்கப்படும். அல்லது தமிழக அரசின் இணைய வழிப் பயன்பாட்டுத் தளமான இ- சேவை மூலமும் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
தேவையான ஆவணங்கள்:-
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- விண்ணப்பதார்ரின் ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- கல்வி மாற்றுச் சான்றிதழ்
- பெற்றோருடைய கல்வி மாற்றுச் சான்றிதழ்
- உடன் பிறந்தோரின் கல்வி தொடர்பான சான்றிதழ்
- விண்ணப்ப தாரரின் சுய அறிவிப்பு(Self Declaration)
முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ்:-
இதில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த முதல் பட்டதாரிச் சான்றிதழுடன் மேலும் சில சலுகைகளை வழங்கி தலைமுறையின் முதல் பட்டதாரி மாணவர்களுக்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு இச்சான்றிதழ் வழங்குதலை அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் வழங்கப்படும் இச்சான்றிதழைக் கொண்டு ஒரு தலைமுறையின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனை தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட இச்சான்றிதழை பெற தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- முகவரிக்கான சான்று
- விண்ணப்பதாரரின் மாற்றுச் சான்றிதழ் அல்லது வேலைவாய்ப்பு அட்டை
- விண்ணப்ப தாரரின் அடையாள அட்டை
- பெற்றோரின் அடையாள அட்டை
- பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ்
- குடும்ப அட்டை
இந்த ஆவணங்களைக் கொண்டு வீட்டிலிருந்த படியே இணையதளத்தைப் பயன்படுத்தி எவ்வாறு இந்த முதல் பட்டதாரிச் சான்றிதழை விண்ணப்பிக்கலாம் என்பதைப் பற்றிய வழிமுறைகளை இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
முதல் பட்டதாரிச் சான்றிதழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:-
- இந்த சான்றிதழை இணையதளத்தில் இ-சேவை மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இ-சேவை தளத்தின் பயனர் உள்நுழைவின் வழியே சுயவிவரத்தை உள்ளிட்டு அதற்கான CEN (Citizen Access Number) எண்ணை பெற வேண்டும்.
- இவ்வாறு User Id , Password வழங்கி உள்நுழைந்து Revenue Department என்பதைத் தேர்வு செய்து REV 104- First Graduate Certificate என்பதைத் தேர்வு செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் தேவையான ஆவணங்கள் , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பிக்க செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
- அதனை சரிபார்த்து Proceed ஐ தேர்வு செய்தால் அடுத்து தோன்றும் பக்கத்தில் CAN எண், விண்ணப்பத்தாரரின் பெயர், E-Mail ID, தந்தைப் பெயர், Mobile Number, ஆதார் எண் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும். (குறிப்பு : CAN எண் இல்லாதவர்கள் இதற்கு மேலே உள்ள Register CAN என்ற தேர்வின் மூலம் விண்ப்பதாரரின் சுயவிவரங்களை உள்ளிட்டு இந்த தனித்துவமான எண்ணைப் பெற வேண்டும்.)
- இதில் ஏதாவது இரு தகவல்களை வழங்கி Search ஐ Click செய்தால் அந்த தகவல்களுடன் தொடர்புடைய விண்ணப்பம் திரையில் தோன்றும். அதனை சரிபார்த்து Proceed ஐ Click செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் கீழ்குறிப்பிடும் தலைப்புகளில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிடவும்.
- Graduation Details
- Applicant Details
- Current Address
- Permanent Address
- Contact Details
- Details Of Family Members
- Education Details
போன்ற தகவல்களைக் குறிப்பிடவும்.
- இவற்றில் Details Of Family Members என்ற தலைப்பில் தாய், தந்தையின் மற்றும் உடன் பிறந்தவர்களின் கல்வி தகவல்கள், வயது, தாயின் தந்தை தாய் பெயர், தந்தையின் தந்தை தாய் பெயர், தற்போதைய நிலை, கல்வி தகுதி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
- மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் வழங்கிய பின்பு Update செய்து கொள்ளவும்.
- அடுத்த பக்கத்தில் List Of Documents என்ற தலைப்பிற்கு கீழ் இதுவரை குறிப்பிட்ட தகவல்களுக்கான அனைத்து ஆவணங்களையும் Document வடிவில் Upload செய்ய வேண்டும்.
- அனைத்து கோப்புகளையும் பதிவிறக்கிய பின் Download Self Declaration என்பதை Click செய்து அதன் மூலம் பதிவிறக்கம் செய்த கோப்பை Print செய்து கையொப்பமிட்ட பின் அதனை மீண்டும் Upload செய்ய வேண்டும்.
- இறுதியாக Make Payment தேர்வினைப் பயன்படுத்தி ரூ. 60 செலுத்தியதும் முதல் பட்டதாரிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் செயல்பாடு நிறைவடைந்துவிடும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி இச்சான்றிதழுக்கு விண்ணப்பித்ததும் அதற்கான ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பித்த சான்றிதழின் தற்போதைய நிலையை சரிபார்த்து தாசில்தாரின் ஒப்புதல் பெற்றதும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:- https://www.tnesevai.tn.gov.in/
இது போன்ற பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள https://trickstamizha.com என்ற தளத்தை பின்தொடரவும்.