பட்டா என்றால் என்ன ?
பட்டா என்பது அந்தந்த பகுதிகளுக்கு என வரையறுக்கப்பட்ட நிலத்திற்கு குறிப்பிட்ட நபர்கள் தான் உரிமையாளர்கள் என அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் ஆவணமே ஆகும். மேலும் இதனை அந்த நிலத்திற்கு உட்பட்ட வட்டாட்சியரால் சரிபார்க்ப்பட்டு வருவாய் துறையின் கீழ் உள்ள வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும்.
இத்தகைய பட்டா பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை,
- தனிப் பட்டா
- கூட்டுப் பட்டா
- UDR – பட்டா (Updating Data Register)
- நில ஒப்புடை பட்டா
- நத்தம் நிலவரி திட்டம்- தோராய பட்டா & தூய பட்டா
- AD கண்டிசன் பட்டா( ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காக)
- TSLR (Town Survey Land Register) பட்டா
- தூசிப் பட்டா
- மூலப்பத்திரத்தில் பெயர் மாற்றி சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டாவின் பழைய நிலையை மாற்றி தற்போதைய உரிமையாளர் பெயரில் இல்லையென்றால் அதனை VAO அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
- பட்டா மாறுதல் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பற்றி நமது Tricks Tamizha பக்கத்தில் உள்ள மற்றொரு பதிவில் விளக்கியுள்ளோம்.
கூட்டுப் பட்டா மற்றும் தனிப் பட்டா விளக்கம், வேறுபாடு :-
1985 ற்குப் பிறகு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட நில அளவை சீர்பாடுகளின் அடிப்படையில் அனைத்து இடங்களையும் அதன் உரிமையாளர்களைப் பொருத்து வரையரை செய்யத் துவங்கினர். அதனடிப்படையில் பட்டாவை தனிப்பட்டா கூட்டுப்பட்டாவாகவும் வழங்கினர்.
- ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை, ஒன்றிற்கு மேற்பட்டவர்களுக்கு உரிமை உடையதாகவும் அதில் அந்த அனைவரும் உரிமை கொண்டாட முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் வருவாய் துறையால் வழங்கப்படும் பட்டாவே கூட்டுப் பட்டாவாகும். இந்த வகைப் பட்டாவில், குறிப்பிட்ட நபர்களுக்கு இதில் வழங்கப்படும் நிலம் அளவு, திசை போன்ற எந்த வகை தகவலும் குறிப்பிட்டு இருக்காது.
- ஆனால் தனிப்பட்டா என்பது இதற்கு நேர்மாறாக தனிப்பட்ட நபர் ஒருவரின் பேரில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி சொந்தமானது என அளந்து சரிபார்த்து வரிவாய்துறைக்குட்பட்டு வழங்கப்படும் சான்றிதழே ஆகும்.
- பொதுவாக ஒரு பட்டாவில் பட்டா எண், உரிமையாளர் பெயர், அவருடைய தந்தைப் பெயர், பட்டா எண், சர்வே எண், அந்த நிலத்தின் வகை, விரி தொகை, இடத்தின் விஸ்தாரம், நிலத்திற்கு உட்பட்ட கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், இணையத்தில் பட்டாவை அச்சடிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் போன்ற அனைத்து தகவல்களும் வழங்கப்படிருக்கும்.
கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்ற தேவையான ஆவணங்கள் :-
- நிலத்தினுடைய பாகப் பிரிவினைப் பத்திரம் (உதா, இரு பெரிய நிலப்பரப்பை ஒன்றிற்கு மேற்பட்டோர் வாங்கினார்கள் எனில் அதில் அந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் நில அளவை விவரங்கள், திசை போன்ற தகவல்கள் குறிப்பிட்ட பத்திரம்.)
- மற்ற கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் பத்திரம்.
- நிலத்திற்கு உரிய FMB Sketch( நிலத்திற்கான வரைபடம்)
- அந்த மொத்த நிலத்திற்குள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்திற்கான முறையான பத்திர ஆவணம்.
- இருப்பிடச் சான்றுதழ் அல்லது இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தால் வழங்கப்பட ஏதேனும் ஒரு அடையாள அட்டை
- புகைப்படம்
- வாரிசுச் சான்றிதழ்
கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றும் வழிமுறைகள் :-
- இந்த செயல்பாடுகளுக்கு முதலில் ஒரு கூட்டுப் பட்டாவில் இருப்பவர்களுக்கான நில வரையறைகளை பத்திர பதிவுத் துறை அலுவலகத்தின் முன்னிலையில் உறுதி செய்து பத்திரமாக வாங்கப்பட்ட பாக பிரிவினைப் பத்திரத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். இதில் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் ஒப்புதழ் அளிக்கும் பொருட்டு கையெழுத்து இட வேண்டும்.
- தனிப்பட்டாவை பெறுவதற்கு VAO அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சமர்பித்து இதன் செயல்பாடுகளுக்கான தொகையாக குறிப்பிட்ட தொகையை அரசிற்கு செலுத்திய பின், வருவாய் துறையின் சரிபார்த்லுக்குப் பிறகு, சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்குரிய நபரின் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றி வழங்கப்படும்.
- வாரிசின் மூலம் பெறப்பட்ட கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டவை மாற்ற வேண்டுமெனில் இதற்கு வாரிசுச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும்.
- பெறும்பாலும் பத்திர பதிவு அலுவலகத்தில் ஒரு நிலத்தை பத்திரப்பதிவு செய்யும் பொழுதே அது கூட்டுப் பட்டாவாக இருந்தால் தனி பட்டாவாக பிரிப்பதற்கு விண்ணப்பம் செய்ய அரசு தற்பொழுது வழி வகை செய்துள்ளது. அதனடிப்படையில் தனி வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்து வழங்குகின்றனர்.
Online மூலம் விண்டணப்பிக்க முடியுமா ?
- அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே இதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது. அதனடிப்படையில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும். இந்த தளத்திற்கு புதியவர் எனில் கைப்பேசி எண் மற்றும் OTP ஐ உள்ளிட்டு பதிவு செய்து இத்தளத்தில் நுழைய வேண்டும்.
- இந்த தளத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்எகள் மற்றும் அழிமுறைகளைப் பற்றி இதன் முகப்புப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி இந்த விண்ணப்பத்தை நிறைவு செய்ய முடியும்.
தனிப் பட்டாவினை வழங்கும் அதிகாரிகள் :-
- VAO- Village Administrative Officer -கிராம நிர்வாக அலுவலர்
- Surveyor – நில அளவையர்
- RI- Revenue Inspector – வருவாய் ஆய்வாளர்
- Tahsildar – வட்டாட்சியர்
- புகார்கள் இருப்பின் RDO & Collector
- மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் 30 லிருந்து 90 நாட்களுக்குள் தனிப்பட்டா மாற்றி வழங்கப்படும்.
- இவ்வாறு கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கப்பட்ட பட்டாவினை பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் மாற்றி வழங்கப்படவில்லை எனில் உயர்நீதி மன்ற உத்தரவின்படி சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2500 அபராதம் வழங்கப்படும். தனிப்பட்டா வழங்க மறுத்தால் நீதி மன்ற ஆணையுடன் முறையிட்டு இதற்கு உடனடி தீர்வு காண்பதுடன் அதற்கான நிவாரணமும் வழங்கப்படும்.
- இந்த செயல்பாடுகளின் பொழுது ஒரு வேளை சர்வேயர் நில அளவைகளில் தவறு செய்திருந்தால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நில அளவை உதவி இயக்குநருக்கும் மறு அப்பீல் செய்யலாம்.
இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள நமது https://trickstamizha.com பக்கத்தை பின்தொடரவும்.
MANIKANDAN