வண்டி ஓட்ட கத்துக்கணுமா LLR கட்டாயம்? அப்போ LLR விண்ணப்பிக்கலாமா! அதுவும் RTO அலுவலகம் போகாமல் நம்ப வீட்டிலேயே….| Tricks Tamizha

வண்டி ஓட்ட கத்துக்கணுமா LLR கட்டாயம்? அப்போ LLR விண்ணப்பிக்கலாமா! அதுவும் RTO அலுவலகம் போகாமல் நம்ப வீட்டிலேயே….| Tricks Tamizha

நாளுக்கு நாள்  வளர்ந்து வரும் நவீன வளர்ச்சியில் வாகனங்களும் ஒன்று. முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தியது போய் தற்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் வாகனங்களை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தைகளில் வரவிருக்கும்  புதுப் புது வாகனங்களின் பயன்பாட்டை  அனுபவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த வளர்ச்சி ஒருவிதத்தில் நம்மை உற்சாகப்படுத்தினாலும், சற்று ஆபத்தான வளர்ச்சியும் கூட. அதற்கான சான்று தான் நாம் ஒவ்வொரு நாளும் சாலையில் சந்திக்கின்ற விபத்துகள். வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து விதிகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தாலும் நாமோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களோ விபத்தை சந்திக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான்  அரசானது பல சாலை விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. அத்தகைய விதிகளை கடுமையாக்க அபராதம் என்ற ஆயுதத்தையும் கையாள்கிறது.   அதனை 1988 ல் அறிமுகப்படுத்தப்பட்டு ஜூலை 1, 1989 ல் நடைமுறைப் படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கண்காணிக்கப்படுகிறது. வாகனத்தேவையின் அதிகரிப்பு மற்றும் தற்போதைய தொழில் நுட்பவளர்ச்சி போன்றவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது.

மோட்டார் வாகனச் சட்டம்:

இச்சட்டத்தின் அடிப்படையில் சில முக்கிய பணிகளை அரசானது நிர்வகிக்கிறது. அவை

  • மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றார் போல் சாலை விதிகளை அமைப்பது.
  • மக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் RDO (Regional Transport Office) என்னும் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கண்காணிக்கப்படுவது.
  • அரசின் மோட்டார் காப்பீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் அதற்கான கல்வியை மக்களுக்கு புரிய வைப்பது.
  • ஓட்டுநர் உரிமம், பலகுநர் உரிமத்தைக் கட்டாயமாக்கி அதனை சில சட்டவிதிகளின் படி RDO அதிகாரியின் மேற்பார்வையின் படி வழங்குவது.
  • PUC சான்றிதழ், வாகனங்களுக்கான காப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை வழங்குதல்
  • இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு அந்தந்த குற்றங்களுக்கு தகுந்தாற் போல் அபராதங்களை நிர்ணயிப்பது போன்றவை  ஆகும்.

LLR பற்றிய அறிமுகம்;

LLR- Learning License Registration

ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி செய்ய வேண்டும் எனில் அதற்கு கற்றல் உரிமம் கட்டாயம் பதிவு செய்து வாங்கியிருக்க வேண்டும்.  6 மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடிய இந்த உரிமம் ஒரு நிரந்தர ஓட்டுநர் உரிமம் அன்று. இந்த கற்றல் உரிமமானது சில குறிப்பிட்ட வகைகளின் கீழ் வழங்கப்படுகிறது. அவை,

  1. இலகுரக வாகனங்கள் (உதா. Bike,Car)
  2. போக்குவரத்து வாகனங்கள்(உதா. லாரி, டேக்சி, கேரியர் வாகனம்)
  3. கியர் இல்லாத மோட்டார் சைக்கிள்கள்.

இந்த வகை வாகனங்களை ஓட்டி பயிற்சி செய்ய விண்ணப்பிக்கும் கற்றல் உரிமம் பெறுவதற்கு 18 வயதை குறைந்தபட்ச வயதாக அரசானது நிர்ணயித்துள்ளது.

LLR விண்ணப்பிக்க இயலும் வழிகள்:

  1. நேரடியாக RDO அலுகலகத்திற்குச் சென்று அங்கு தேவையான ஆவணங்களை சமர்பித்து LLR பெறுவது.
  2. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலம் பெறுவது
  3. இ-சேவை மூலம் விண்ணப்பித்துப் பெறுவது.

இந்த மூன்று முறைமைகளையும் பயன்படுத்தாமல் மிக எளிமையாக நமது கைப்பேசியைப் பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பிக்க அரசானது Parivahan என்ற பிரத்தியேக செயலியைக் கொண்டுவந்துள்ளது.

LLR விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் நுழைந்தவுடன் திரையில் தோன்றும் பத்தியில் License Related Services  ல் உள்ள Drivers/Learners License என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  2. அதில் மாநிலத்தின் பெயரை உள்ளிடவும். இவை தமிழக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு செல்லும்.
  3. இத்தளத்தில் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். கற்றல் உரிமம், ஓட்டுநர் உரிமம்  விண்ணப்பிப்பது மட்டும் அல்லாமல் DL புதுப்பித்தல், DL நகல் பெறுதல், முகவரி மாற்றம் செய்ய,சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெற, கட்டணம் செலுத்துதல் உள்பட பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.
  4.  இதில் Apply for Leaner License ஐ தேர்ந்தேடுக்கவும். இப்பக்கத்தில் மொழியை மாற்றிக் கொள்ள இயலும்.
  5. பின் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
  6. அதனைத் தொடர்ந்ததும் கற்றுக்கொள்ள வேண்டிய வாகனத்தின் வகையைத் தேர்வு செய்யவும். இதில் விண்ணப்பத்தாரர் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சமர்பிக்கவும்.
  7. அடுத்த பத்தியில் விண்ணப்பிக்க ஆதார் அல்லது ஆதார் இல்லாமல் என இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும். இதில் ஆதார் பயன்படுத்தி சமர்பித்தால் மட்டுமே RDO அலுவலகத்திற்கு செல்லாமல் விண்ணப்பிக்க இயலும்.
  8. பின் ஆதார் எண்ணை உள்ளிட்டதும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசிக்கு அனுப்பப்படும் OTP ஐ உள்ளிடவும். அதற்கு கீழ் உள்ள தகவல்களைப் படித்து Tic  செய்து கொள்ளவும். Authenticate ஐ Click செய்யவும்.
  9. அடுத்த பத்தியில் விண்ணப்பத்தாரரின் ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் புகைப்படம் உட்பட அனைத்தும் திரையில் தோன்றும். அவை சரியாக இருக்கும் பட்சத்தில் Proceed ஐ Click செய்யவும்.
  10. பிறகு விண்ணப்பதாரரின் கூடுதல் விபரங்களை உள்ளிட வேண்டும் (உதா; பிறந்த இடம், வசிக்கும் இடம், இரத்தவகை, கல்வித்தகுதி, அங்க அடையாளங்கள், …). இப்பக்கத்தில் குறிப்பிட்ட முகவரியில் பச்சை வண்ணத்தில் மேற்க்கோள் காட்டப்பட்ட வரிகள் மட்டுமே உரிமத்தில் எழுதப்பட்டிருக்கும்.
  11. எந்த வாகனத்தை ஓட்ட பயிற்சி மேற்கொள்ள உரிமம் கேட்கிறாரோ அதனைப் பற்றிய விபரம் உள்ளிட்டு, பின் Self Declaration Form ஐ படித்து உடற்தகுதியின் நிலையைக் கருத்தில் கொண்டு Tic செய்து சமர்பிக்கவும்.
  12. உடலுருப்பு தானம் செய்ய விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு தங்களின் விருப்பத்தை உள்ளிட்டதும் Captcha codeஐ உள்ளிடவும்.
  13.   வெற்றிகரமாக விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது என்ற தகவலை அனுப்பியதும், அதனை பதிவிறக்கம் செய்து  பின் Next ஐ தேர்வு செய்தால் Application number மற்றும் பிறந்த தேதி குறிப்பிட்டிருப்பதை சரிபார்த்து சமர்பிக்கவும்.
  14. இந்த திரையில் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளமுடியும்.

பணம் செலுத்த வேண்டிய முறை;

  1. மேற்கூறியவற்றை செய்து முடித்ததும்  Proceed ஐ Click செய்யவும். இத்திரையில் மேலே குறிப்பிட்ட தகவல்களுடன் கட்டணம் எந்த வங்கி வழியே செலுத்த வேண்டுமோ அந்த தகவல்களை உள்ளிடவும்.
  2. உள்ளிட்ட தகவல்களை சரிபார்த்ததும், பணம் கட்ட வேண்டிய தளத்தில் ரூ.230 ஐ செலுத்தி முடிக்கவேண்டும். அதனுடைய நகலை சேகரிக்கவும்.

விண்ணப்பத்தின் நிலையை அறிய;

  1. Home பக்கத்தில் Application Status என்ற தேர்வுக்குள் கேட்கப்பட்டிருக்கும் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டதும்  புகைப்படத்துடன் கூடிய அனைத்துத் தகவல்களும் திரையிடப்படுவதுடன் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையும் குறிப்பிட்டிருக்கும்.

விண்ணப்பத்தில் LLR தேர்வு எழுத :

  1. Online ல் LLR தேர்வு எழுதினால் தான் இவ்விண்ணப்பம் செல்லுபடியாகும். அதற்கு முதலில் அரசின் போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அதன் விதிமுறைகளைக்கொண்ட ஒரு விளக்கப்படம் Youtube ன் Link ஐ தொடர்வதால் திரையிடப்படும். 13 நிமிட காட்சிகளுக்குப் பின்னர் Confirmation ஐ Click செய்து Submit செய்யவும்.
  2. Home பக்கத்தில் உள்ள Tutorial for LL Test  என்பதைத் தேர்வு செய்து அதே போன்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். அதனைத் தொடர்ந்து வரும் 60  வினாடித் தேர்வுக்கு பதில்களை உள்ளிடவும்.
  3.  கடைசியாக LLR தேர்வில் வெற்றி என்ற அறிக்கையோடு LLR உரிம எண்ணும் திரையில் தோன்றும்.

LLR ஐப் பதிவிறக்கம்  செய்ய:

  1. Home Page ல் நுழைந்ததும் —> Learner Licence —> Print Leaner Licence(Form 3) —>Proceed—> Application Number (or) Licence Number (or) Mobile Number இவ்வாறு நுழைந்து தேவையான தகவல்களை உள்ளிட்டு Submit செய்து OTP உள்ளிட்டதும் விண்ணப்பதாரரின்   LLR உரிமம்  Mobile ல் Download ஆக ஆரம்பித்துவிடும்.

மேற்கண்ட வழிகளைப் பயன்படுத்தி முறையாக LLR ஐ பெற்ற 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

 அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:

https://parivahan.gov.in/parivahan//en/content/vehicle-related-services

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *