மாணவர்களின் வாழ்கைக்கு சிம்ம சொப்பனமான அந்த ஒற்றை வார்த்தை “NEET”. இந்த தேர்வைப் பற்றிய தகவல்களுடன் இந்தப் பதிவு…| Tricks Tamizha

மாணவர்களின் வாழ்கைக்கு சிம்ம சொப்பனமான அந்த ஒற்றை வார்த்தை “NEET”. இந்த தேர்வைப் பற்றிய தகவல்களுடன் இந்தப் பதிவு…| Tricks Tamizha

  1. NEET (National Eligibility cum Entrance Test), இந்த வார்த்தையை நினைத்தாலே சிலருக்கு நல்ல நினைவுகளும் பலருக்கு ஏக்கம் நிறைந்த கனவுகளும் தான் நினைவுக்கு வரும். அப்படி இதில் என்ன இருக்கிறது? இதனைச் சுற்றி  ஏன் இவ்வளவு சர்ச்சைகள்? இதை மாணவர்கள் எவ்வாறு அனுக வேண்டும்? என்ற பல புரியாத வினாக்களுக்கு விடையாக இந்த பதிவை வழங்க உள்ளோம்.

பழைய நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்விற்கு மாற்றாக புதிய தேர்வினை அரசு நடைமுறைப் படுத்தியதால் இதில் பல குழப்பங்களும் கேள்விகளும் மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு சற்று சவாலாக இருந்தது.

அது மட்டுமின்றி இந்த புதிய நடைமுறையில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அதனை பல மாணவர்களால் எதிர்கொள்ள முடியாமல் இருந்தது. இதன் காரணமாகவே தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இத்தேர்விற்கு எதிர்ப்புகள் இன்றளவும் வருகின்றது.

இத்தேர்வின் போது நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளை பற்றி ஆராய 7 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும்  சென்ற ஆண்டு (2024) நியமித்துள்ளனர்.அதனை கே. இராதாகிருஷ்ணன் தலைமையில்  ரந்தீப் குலோரியா, பிஜே ராவ், கே. ராமமூர்த்தி, பங்கஜ் பன்சால், ஆதித்யா மிட்டல், கோவிந்த் ஜெய்ஷ்வால் போன்றோர் குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மருத்துவப் படிப்பின் ஆரம்ப நிலை:-

  • NEET தேர்விற்கு முன் நம் நாட்டில் அந்தந்த மாநிலங்கள் அவர்களின் பாடத்திட்டங்களுக்கு தகுந்த வண்ணம் தேர்வுகளை நடத்தியும் பல பிரபலமான தனியார் மருத்துவ நிறுவனங்களின் வரைமுறைக்குட்பட்ட நுழைவுத் தேர்வுகளைக் கொண்டும் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைகள் நடந்து வந்தன.
  • அதற்கு உதாரணமாக AIPMT- (All India Pre-Medical Test) என்ற அகில இந்திய முன் மருத்துவ தேர்வையும், AIIMS, JIPMER, IMS-BHU, KMC Manipal & Mangalore மற்றும் CMC Vellore போன்ற பல்கலைக் கழக நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகள் ஆகும். இந்தத் தேர்விற்கு அவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடித்தளமாக நிர்ணயிக்கப்பட்டது.
  • MCI (Medical Council of India) ஆனது  இவ்வாறு மாணவர்களை வெறும் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கைக்குள் அனுமதிப்பதைத் தவிர்த்து, இந்த தேர்வுகளை ஒரே தேர்வாக இணைத்து அதன் மூலம் திறமையான  மாணவர்களை  தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தது.
  • அதன் படி அகில இந்திய முன் மருத்துவத் தேர்வினை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வாக  2013 ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும் இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள  அரசு மற்றும் தனியார்  மருத்துவக் கல்லூரிக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்பின் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இந்தத் தேர்வினை NTA (National Testing Agency) எனும் தனிப்பட்ட அமைப்பு தான் தற்பொழுது  நடத்தி  அதற்கான முடிவுகளை வெளியிடுகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் உருவாக்கியது.

NEET தேர்வைப் பற்றிய பிற தகவல்கள்:-

இந்தத் தேர்வின் மூலம் பல்வேறு மருத்துவ பிரிவுகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அவை,

    • MBBS–  Bachelor of Medicine and Bachelor of Surgery
    • BDS  —  Bachelor of Dental Surgery
    • BAMS — Bachelor of Ayurvedic Medicine and Surgery
    • BSMS — Bachelor of Siddha Medicine and Surgery
    • BUMS — Bachelor of Unani Medicine and Surgery
    • BHMS — Bachelor of Homeopathic Medicine and Surgery
  • இந்தத் தேர்வின் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கவும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தேர்விற்கு அங்கிகரிக்ப்பட்டுள்ள மொழிகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா,அஸ்ஸாமி, குஜராதி, பஞ்சாபி, மற்றும் மலையாளம் போன்ற 13 மொழிகளிலும் எழுத முடியும்.
  • NEET தேர்விற்கான அதிகபட்சமாக 720  என்ற மதிப்பெண்ணை நிர்ணயித்துள்ளனர். இதில் மொத்தம் 200 கேள்விகள் வழங்கப்பட்டிருக்கும். இதில் அதிகபட்சமாக  180 வினாவிற்கு விடையளிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு சரியான விடைக்கும்  4 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் (180*4) 720 ஐ உச்ச வரம்பாக  நிர்ணயித்துள்ளனர். இதில்,
      • Physics– 180 Mark
      • Chemistry –180 Mark
      • Zoology — 180 Mark
      • Botony — 180 Mark
  • இந்த தேர்வு நடைபெறும் நேர வரையறை 3 மணி நேரமாகும்.

NEET தேர்விற்கான தகுதிகள்:-

  • இந்தத் தேர்வினை எழுதுவதற்காக NTA சில தகுதி வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அவை,
    • வயது வரம்பாக குறைந்தது 17 வயது என்றும் அதிக பட்ச வயது எதுவும் இல்லை எனவும் நிர்ணயித்துள்ளனர்.
    • 12 ஆம் வகுப்பில் Physics, Chemistry, Biology/Biotechnology போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் Category அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அவை,
      • General                                                           50%
      • SC/ST/OBC                                                   40%
      • Physical Disabled – General                   45%
      • Physical Disabled – SC/ST/OBC            40%

குறிப்பு: 2024 முதல் 12 ஆம் வகுப்பில் Biology பாடத்தை எடுத்து படிக்காமல் Physics, Chemistry படிக்காதவர்களாயின் (Ex: Computer Science)  அவர்கள் Biology ஐ ஒரு தனிப்பாடமாக படித்து முடித்த பிறகு இத்தேர்வினை எழுத முடியும்.

    • இத்தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும்.
  • இத்தேர்விற்கான பாடத்திட்டம் பற்றிய தகவல்கள்  தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளமான https://www.nmc.org.in என்பதில் வழங்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:-

  • இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன் நாம் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு,
    • Passport Size Photo
    • Postcard Size Photo
    • Signature
    • 10 விரல்களின் கைரேகை

போன்றவற்றை Scan Copy எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .

    •  10 th Mark Sheet பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
    • id Proof: Aadhar Card, Pan Card, Digi Locker, Driving Licence, Voter Id, 12 th Admid Card அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் இதில் ஏதாவதொன்றை பயன்படுத்தலாம்.
    • Category Certificate

NEET தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை:-

  • NEET தேர்விற்கு விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இதனை விண்ணப்பிக்க மூன்று வகை செயல்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். அவை,
      1. Registration Process
      2. Application Form
      3. Fees Payment

Registration Process:-

  • இத்தளத்தில் நுழைந்ததும் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு கீழே ” NEET (UG)- 2025 REGISTRATION AND ONLINE APPLICATION FORM” என்பதை Click செய்ய வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் மூன்று காரணிகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
      • Steps to Apply Online
      • Already Existing Candidate
      • Register your Profile
  • இதில் Register Your Profile ல் உள்ள New Registration என்பதை தேர்ந்தெடுத்து உள்நுழையவும்.
  • அங்கு தரப்பட்டுள்ள Download information Bulletin, View Examination Cities போன்ற தேர்வுகளைப் பயன்படுத்தி இத்தேர்வைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அதே பக்கத்தில் இத்தேர்விற்கு கட்டண விபரங்கள் மற்றும் இதை விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்தையும் படித்த பின் அதை உறுதி செய்ய கீழே உள்ள கட்டத்தை டிக் செய்து  Click to Proceed ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • இங்கு கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விபரங்களை உள்ளிட வேண்டும். அத்தோடு இத்தளத்திற்கான ஒரு தனித்துவமான கடவுச் சொல்லை தேர்ந்தெடுத்து உள்ளிட வேண்டும். அதிலிருக்கும் Security Question கடவுச் சொல்லை மறந்து விட்டால் அதனை மீட்டு எடுக்க உதவும்.
  • இதனை நிறைவு செய்து Submit ஐ Click செய்ய வேண்டும். அதில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் Edit Registration Form என்பதை தேர்வு செய்து திருத்தம் செய்யலாம்.
  • இல்லையேல் மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக உள்ளிட்டதை உறுதி செய்ய அவற்றிற்கு உரிய கட்டத்தில்  டிக் செய்ய வேண்டும்
  • அல்லது Submit And Send OTP என்பதை Click செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து உங்களின் தனிப்பட்ட விபரத்தில் உள்ளிட்ட Mobile எண்ணிற்கு அனுப்பப்டும் OTP எண்ணை உள்ளிட்டு Submit Registration Form என்பதை Click செய்ய வேண்டும்.
  • இப்பொழுது Registration  செய்யும் செயல் நிறைவடைந்தது.

Application Form:-

  • அடுத்த தேர்வான Complete Application Form என்பதை Click செய்து உள்நுழையவும்.
  • இதில் 10 படிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை,
      1. Register Contact Details
      2. Register Personal Details
      3. Register Identity Details
      4. Register APPAR ID (Not Compulsory)
      5. Register Exam & Exam Center Details
      6. Register Qualification Details
      7. Register Additional Details
      8. Register Emergency Contact Details
      9. Upload Documents
      10. Final Submit
  • இதில் Contact Details பற்றிய தகவல்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதால் நேரடியாக Personal Details பக்கத்திற்கு சென்று விடும்.
  • Personal Details ல் உள்ள அனைத்து தகவல்களும் ஏற்கெனவே குறிப்பிட்டது தவிர மற்ற அதைத்து தகவல்களும் உள்ளிட வேண்டும்.
    • Category Certificate நடப்பில் செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டும். புதிதாக பதிவு செய்து தாசில்தாரரின் கையொப்பத்துடன் பெற வேண்டும்.  இந்த தகவலை உள்ளிட வேண்டும்.(01/ April / 2024  பிறகு வாங்கியதும் அதனுடைய செல்லுபடியாகக்கூடிய தேதி 31/ March/ 2025 ற்குள் இருக்க வேண்டும்.)
    • அல்லது அதற்காக விண்ணப்பித்ததற்கான தகவலை உள்ளிட வேண்டும்.
    •  இதில் மாற்றுத் திறனாளி எனில் உதவியாளர் தேவைப் பற்றிய தகவலை உள்ளிடவும்.
    • இது தவிர மற்ற தனிப்பட்ட அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு Submit செய்து கொள்ளவும்.
  • Identity Details ல் மேலே குறிப்பிட்ட படி ஏதாவதொரு அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் தகவலுடன் அதன் மின் நகலை உள்ளிட வேண்டும்.
    • அதில் மற்ற அடையாள அட்டையைப் பயன்படுத்தினால் கீழே Aadhar Number ஐ உள்ளிடும் பகுதியில் கட்டாயம் உள்ளிட வேண்டும்.
    • Captcha குறியீட்டை உள்ளிட்டு Submit &Save கொடுத்து அடுத்த பத்தியை அடையவும்.
  • APPAR ID என்பதில் பதிவு செய்த எண் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை உள்ளிட வேண்டும். இல்லையென்றால் தவிர்த்து விடலாம்.
  • Register Exam & Register Exam  என்பதில் தேர்வு எழுதக்கூடிய மொழி, தேர்வின் மையம் போன்றவற்றை இங்கு தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்த பத்தியில் Qualification Details ஐ உள்ளிட வேண்டும். இதில் 1940 ல் படித்தவர்கள் முதல் இதில் விண்ணப்பிக்க முடியும். அத்தோடு 10, 12 ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி பெற்ற அனைத்து தகவல்களுளையும் உள்ளிட வேண்டும்.
  • Additional Details ல் மற்ற இதர தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • Emergency Contact Details ல் ஏற்கெனவே குறிப்பிட்ட Mobile எண்ணைத் தவிர்த்து வேறு எண்ணை உள்ளிடவும். அத்தோடு Mobile Number மற்றும் E- Mail id ஐ OTP Process மூலம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறான செயல்பாடுகளைத் தொடர்ந்து Upload Documents என்ற தேர்வுக்குள்  தேவையான அனைத்து கோப்புகளையும் விதிமுறைகளுக்குட்பட்டவாறு உள்ளிடவும்.
    • ஒவ்வொரு File Name ஐயும் இதன் பரிந்துரைப்படி சேமித்து அதனை உள்ளிட வேண்டும்.(உதா. AB_ Photo, AB_ Finger Print)
  • இறுதியாக இதற்கான Payment ஐ இணையதளம் வழியாக செலுத்திய பின் இந்த செயல்பாடுகள் முடிவடைந்து விடும்.
  • குறிப்பு:  ஒவ்வொரு செயல்பாடுகள் நிறைவடைந்ததும் Save & NextClick செய்ய வேண்டும்.

இப்போது வெற்றிகரமாக உங்களுடைய NEET தேர்விற்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கப்பட்டது.

NEET தேர்விற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்:-

http://neet.nta.nic.in

இந்த ஆண்டிற்கான NEET தேர்வு அறிவிப்பு தேதி மே 4 , 2025 ஆக அறிவித்துள்ளனர்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *