இன்னும் நீங்க Voter ID வாங்காமல் இருக்கீங்களா? சுலபமா Mobile-லயே அப்ளே பண்ணலாமே!…| Tricks Tamizha

இன்னும் நீங்க Voter ID வாங்காமல் இருக்கீங்களா? சுலபமா Mobile-லயே அப்ளே பண்ணலாமே!…| Tricks Tamizha

18 வயது நிறைவடைந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டிய கடைமைகளில் முக்கியமானது நமக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான். இத்தகைய வழக்கம் நம் நாட்டில் மன்னர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. அப்பொழுது குடவோலை முறையிலேயும், கைகளை உயர்த்தியும் வாக்களித்த மக்கள் இக்காலத்தில் EVM (Electronic Voter Machine)  Machine மூலம் வாக்களித்து வருகின்றனர்.

இவ்வாறு வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படும். அத்தகைய அட்டையே வாக்காளர் அட்டை ஆகும். இந்த வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் முறையை 1993 ல் இருந்தே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையை ஒரு தனி மனித அடையாள ஆவணமாகவும் எடுத்துக் கொள்வர்.

இத்தகைய வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணையம் 2015 ல் வண்ணப்படத்துடன் ஒரு PVC  வாக்காளர் அட்டையாக புதுப்பித்தது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கான வழிமுறைகளை காண்போம்.

தேவையான ஆவணங்கள்:-

  1. ஆதார் அட்டை
  2. புகைப்படம்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:-

  • கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி Voters Service Portal எனும் தளத்தில் நுழையவும்.
  • இந்தத் தளத்திற்கு நீங்கள் புதியவர் எனில் Sign Up ஐத் தேர்ந்தெடுத்து இதில் கைப்பேசி எண் மற்றும் விலாசத்தை உள்ளிட்டு இப்பக்கத்தில் உங்களுக்கான புதிய கணக்கை தொடங்கவும்.
  • பதிவிட்ட கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிட்டு சரிபார்தலுக்குப் பின் முகப்பு பக்கத்தில்  User ID, Password ஐ பயன்படுத்தி உள்நுழையவும். பின் பயனருடைய பெயருடன் அத்தளம் திரையில் தோன்றும்.
  • FORMS—>New Registration For General Election —->Form 6 என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான பக்கம் திரையில் தோன்றும்.
  • இதில் விண்ணப்பத்தின் வகைகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
  1. Personal Details [Name, Photo Upload with 4.5*3.5 cm(.jpg,.jpeg)]
  2. Relatives Details [Father Name, Mother Name]
  3. Contact Details [Mobile no, E-Mail ID]
  4. Aadhar Details [Aadhar Number]
  5. Gender
  6. Date Of Birth Details [dd/mm/yyyy, Age Proof Document Upload]
  7. Present Address Details [Full Address]
  8. Family Member [Any Family Members Name, EPIC No, Relationship]
  9. Declaration
  10. பதிவிட்ட முகவரியின் கீழ் தங்கியிருந்ததற்கான  நாட்களின் தகவல்
  11. Enter Place, Date —> Next
  12. Enter The Captcha Code, Verify OTP
  13. Preview And Submit  எனபதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு மேற்கண்ட அனைத்து தகவல்களையும் சரியாக உள்ளிட்டதும் அதனை சமர்பிக்கவும்.
  • விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும் ஒரு தனிப்பட்ட குறிப்பு எண் வழங்கப்படும். அந்த எண்ணை சேமித்துவைத்துக் கொள்ளவும்.
  • இந்த குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளமுடியும்.

விண்ணப்பத்தின் நிலையை அறிய:-

  • மீண்டும் அதே தரவுத்தளத்தின் வழியே User ID, Password ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • திரையில் தோன்றும் முகப்பு பக்கத்தில் இருக்கும் Track Application Status என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் குறித்து வைத்துள்ள குறிப்பு எண்ணை உள்ளிட்டு பின் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு இத்தகவல்களை உள்ளிட்டதும் இதனை சமர்பிக்கவும்.
  • இப்பொழுது திரையில் விண்ணப்பித்தவரின் பெயர், குறிப்பு எண், Form Type, சமர்பிக்கப்பட்ட தேதி மற்றும் விண்ணப்பத்தின் நிலை குறிப்பிடப்பட்டிருக்கும். இவை நான்கு நிலைகளில் ஏதாவதொன்றை குறிப்பிட்டு இருக்கும். அவை,
      1. Submit
      2. BLO Appointed
      3. Field Verified
      4. Accept or Reject
  • இவ்வாறு புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்த 7-45 நாட்களுக்குள் உங்கள் அட்டைக்கு ஒப்புதல் வழங்கி அவை  அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய:

  • அதே தரவுத்தளத்தில் User ID, Password ஐ உள்ளிட்டு உள்நுழையவும்.
  • இதில் E-EPIC Download என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பக்கத்தில் “Download Electronic Copy Of EPIC Card” என்ற தகவல் திரையில் தோன்றும்.
  • அதில் மேலே குறிப்பிட்டு இருந்த குறிப்பு எண்ணை உள்ளிடவும். பின் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • இறுதியாக தளத்தை சமர்பித்ததும் திரையில் உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தகவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து உள்ள Download ஐ பயன்படுத்தி OTP ன் சரிபார்தலை நிறைவு செய்ய வேண்டும்.
  • பின் Download e-EPIC–>Download Confirm தேர்வுகளைத் தொடர்ந்து உங்கள் வாக்காளர் அட்டை PDF Format ல் உங்கள் Mobile ல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும்.

அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:

https://voters.eci.gov.in

மாற்று வழி:

இந்த வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றுமொரு மாற்று வழியும் உண்டு. அதற்கு  கீழே உள்ள தரவுத்தளத்தை பயன்படுத்தலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *