Red Bus தளத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்:-
- Red Bus இந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தரவுத் தளத்தின் மூலம் பேருந்து மற்றும் இரயிலிற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை இணையதளத்தின் வழியே பதிவு செய்து கொள்ள முடியும்.
- இந்நிறுவனமானது 2006 ம் ஆண்டு பனேந்திரஷாமா, சுதாகர் பசுபுனுரி மற்றும் ஷரன் பத்மராஜு போன்ற பொறியாளர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
- இத்தளத்தை ரூ. 5,00,000 முதலீட்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனமானது தற்பொழுது அமெரிக்க மதிப்பில் 85 மில்லியன் வருமானத்துடனும் 36 மில்லியன் பயனர்களுடனும் இணையதளம் மூலம் பேருந்து மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் ஆனது தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளின் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
- மேலும் இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்நிறுவனம் Make My Trip-ன் கிளை நிறுவனம் ஆகும்
- இத்தளத்தின் வழியே முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு சலுகைகளும் கூப்பன்களும் வழங்கப்படுவதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றனர்.
- மேலும் இந்த Red Bus தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பொழுது பின்வரும் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது. அவை,
- பேருந்தின் நேர அட்டவணை
- பயணச்சீட்டின் விலை
- பேருந்தின் வகை
- பேருந்தில் குறிப்பிட்ட நாட்களில் இருக்கைகள் உள்ளதா
- பேருந்தின் மற்ற சேவைகள் போன்றவை ஆகும்.
- பேருந்தில் கிடைக்கக்கூடிய மற்ற வசதிகள்:
- CCTV
- Water Bottle
- Charging Point
- Reading Light
- மேலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை எளிமையாக ரத்து செய்யவும் முடிகிறது.
- இப்பொழுது இந்தத் தளத்தில் எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்வது என்பதைப் பற்றி தெளிவான முறையில் பார்க்கலாம்.
Red Bus-ல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறைகள்:-
- Red Bus ன் அதிகாரப்பூர்வ தரவுத் தளத்திலோ அல்லது IOS, Android போன்றவற்றையோ பயன்படுத்தி இந்தத் தளத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- இந்தத் தளத்தை Open செய்வதுன் திரையில் தோன்றும் பக்கத்தில் Country மற்றும் உங்களின் மொழியைத் தேர்ந்தெடுத்து பின் Continue என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்தத் தளத்தில் உங்களுக்கு ஏற்கெனவே கணக்கு இருக்குமாயின் LogIn ஐ தேர்வுசெய்து உள்நுழையலாம். அல்லது இத்தளத்திற்கு புதியவர் எனில் கணக்கை தொடங்க பின்வரும் வழிகளை முதலில் முடிக்க வேண்டும். அவை,
- Join எனபதை Click செய்து உள்நுழைந்ததும் அதில் உங்கள் Mobile Number அல்லது E-Mail ID ஐ உள்ளிட வேண்டும்.
- இந்த எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை உள்ளிடவும். அதன் பின் Verify OTP என்பதை Click செய்து Login செய்துகொள்ளவும்.
- இப்பொழுது உங்களின் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது
- முகப்புப் பக்கத்தில் நுழைந்ததும் இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களைப் பெற உங்கள் மொபைலில் Location ஐ ON செய்து கொள்ள வேண்டும்.
- திரையில் தெரியும் குறுஞ்செய்திகளை படித்த பின் Allow என்பதை Click செய்து கொள்ளவும்.
- இப்பொழுது தளத்திற்குள் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் திரையிடப்படும். அதில்,
From: என்பதில் உங்கள் பயணத்தின் ஆரம்ப இடத்தையும்
To: என்பதில் பயணத்தின் இறுதி இடத்தையும் தேர்ந்தெடுத்து உள்ளிட வேண்டும்.
- அதன் பின் உங்கள் பயணத்தின் தொடக்க தேதியை உள்ளிடவும். அடுத்து Search Buses என்பதை Click செய்யவும்.
குறிப்பு:-
- மகளிர் மட்டும் பயணிக்க இருந்தால் Booking For Women என்பதை On செய்து கொள்ள வேண்டும்.
- ஏனென்றால் பெண்களுக்கான தனிஇருக்கைகள் பரிந்துறைக்கப்படும்.
- அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் நீங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் தொடர்புடைய அனைத்து பேருந்து சேவைகளும் நேரத்தின் அடிப்படையில் திரையிடப்படும். அதில் இள்ள தகவல்களாக,
- நேரம்
- விலை
- பேருந்தின் வகை
- பேருந்தின் இருக்கை வகை
- இதற்கு மக்களால் வழங்கப்பட்ட Ratings போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்
- இதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்த பின் அந்த பேருந்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
- இதில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கும் தகுந்த தனித்தனி விலை வழங்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின் உங்களுக்கு வேண்டிய இருக்கையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இருக்கையின் வகைகள்:-
- பச்சை வண்ண இருக்கை – கிடைக்கக்கூடியது
- இளஞ்சிவப்பு வண்ண இருக்கை -பெண்களுக்கு மட்டும்
- நீள வண்ண இருக்கை – ஆண்களுக்கு மட்டும்
- மங்களாக இருந்தால் அந்த இருக்கை ஏற்கெனவே Book ஆகி விட்டதை குறிக்கும்.
- அதற்கு கீழே Select Bording Points & Droping Points என்பதைக் Click செய்து Passenger Information தளத்திற்குள் நுழைய வேண்டும்.
- இதில் உள்ள தகவல்களை சரிபார்த்து பின் Passenger பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக உள்ளிடவும்.
- அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து Yes/No என்பதை Click செய்யவும். பின் Proceed என்பதை Click செய்யவும்.
- அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் தொகையைச் செலுத்தும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இங்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கீழே வழங்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு முறைமையை பயன்படுத்தி பணத்தை செலுத்த வேண்டும்.
- இப்பொழுது உங்களின் பேருந்து பயணத்திற்கான முன்பதிவு நிறைவடைந்தது. அதற்கான தகவல்கள் நீங்கள் உள்ளிட்ட Mobile Number க்கு அனுப்பப்பட்டிருக்கும்.
தரவுத்தளம்:-
https://play.google.com/store/apps/details?id=in.redbus.android
உதவி எண்: 09945600000
E-Mail ID:-