Zomato நிறுவனத்தின் புதிய ஆரம்பம் “District” Ticket Booking App. இனி அனைத்து வகையான பொழுது பொக்கு நிகழ்ச்சிக்கும் இங்கயே Book செய்து கொள்ளலாம்…| Tricks Tamizha

Zomato நிறுவனத்தின் புதிய ஆரம்பம் “District” Ticket Booking App. இனி அனைத்து வகையான பொழுது பொக்கு நிகழ்ச்சிக்கும் இங்கயே Book செய்து கொள்ளலாம்…| Tricks Tamizha

  • ZOMATO என்றால் பட்டி முதல் சிட்டி வரை அனைவருக்கும் தெரிந்தது உணவு விநியோகிக்கும் நிறுவனம் என்று மட்டும் தான். ஆனால் அவர்கள் தற்பொழுது ஒரு புதிய களத்தில் கால்பதித்து அதன் மூலம் Zomato நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய செயலியை சந்தைப்படுத்தி உள்ளது.
  • அது “DISTRICT” என்னும் இணையதள டிக்கெட் முன்பதிவு செய்யும் தளமாகும். இதனை ZOMATO நிறுவனம் ரூ. 2,048 கோடிக்கு Paytm த்திடமிருந்து வாங்கியியுள்ளதாக 2023 ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வழங்கி இருந்தது.
  • இதன் மூலம் தற்பொழுது சந்தையிலிருக்கும்  பல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களுக்கு மத்தியில் புதிய போட்டியாக இந்த District என்னும் தளத்தை Zomato நிறுவனம் 2024, நவம்பர் 13 ல் Android மற்றும் IOS பயனர்களுக்கு வெளியிட்டது.
  • அறிமுகப்படுத்திய குறுகிய காலத்திலேயே 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைப் பெற்று 4.6 என்ற நட்சத்திரக் குறியீட்டையும் பெற்றுள்ளது.
  • இத்தளத்தின் மூலம் பயனர்களால் பல செயல்பாடுகளை செய்ய முடிகிறது. அதுவும் சிறந்த சலுகைகளுடன் . இதைப் பற்றிய சில தகவல்களுடன் இப்பதிவை வழங்கியுள்ளோம்.

District: Movies Events Dining:

  • இத்தளத்தைப் பயன்படுத்தி  டிக்கெட் முன்பதிவு செய்யும் பல்வேறு பயன்பாடுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அவை,
    1. திரைப்படங்கள்
    2. நேரடி இசை நிகழ்ச்சிகள்
    3. விளையாட்டுப் போட்டிகள்
    4. பிரபலமான உணவகங்களில் இருக்கை முன்பதிவு

For Movie Ticket:

  • இவற்றில் திரைப்படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளுக்கு மாதம் ஒருமுறை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையுடன் Credit Card  பயனர்களுக்கு வழங்குகின்றனர்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுத் தளத்தைப் பயன்படுத்தி அல்லது Play store மூலமாகவோ DISTRICT ன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பதிவிறக்கம் செய்து  நுழைந்தவுடன் மொபைல் எண்ணை உள்ளிட்டு அதற்கு அனுப்பப்படும் 4 இலக்க OTP எண்ணை உள்ளிடவும்.
  • அதனைத் தொடர்ந்து Use Current Location அல்லது  Select Location Manually என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களின் இருப்பிடத்தை அடையாளப் படுத்தவும்.
  • அதன் முப்புப் பக்கத்தில் ” Movies, Dining, Events போன்ற தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.
  • அவற்றில்  Movies  என்பதற்குக் கீழே நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தில் திரையிடப்படும் அனைத்து புதுப் படங்களையும் வரிசைப் படுத்தி காட்டியிருக்கும்.
  • அதில் விருப்பமான படத்தை தேர்ந்தெடுத்து உள்நுழைந்தால் அதை திரையிடும் திரையரங்குகள், நாட்கள், நேரம், விருப்பமான இருக்கைகள் போன்ற தகவல்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப பதிவு செய்ய வேண்டும்.
  • மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் சரிபார்தலுக்கு திரையிடப்படும் . அதனைத் தொடர்ந்து பணம் செலுத்தும் தளத்திற்கு செல்ல “Add Payment Method” என்பதை தேர்ந்தெடுத்து உள்நுழையவும்.
  • இதில் உங்களின் இணையதள பணப் பரிமாற்றத்துக்கு தேவையான அனைத்து UPI, Card  Payment தேர்வுகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
  • டிக்கெட்டிற்கான தொகையை சரிபார்த்த பின் Pay Now என்பதை Click செய்து பணத்தை செலுத்திய பின் உங்களின் டிக்கெட் முன்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கும்.
  • இப்பொழுது அதனை சரிபார்கவும் உங்களின் டிக்கெட்டை பெறவும் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள Profile ஐ Click  செய்யவும்.
  • அதனுள் இருக்கும் Movie Tickets என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கான டிக்கெட் திரையில் தோன்றும். அத்தோடு நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணிற்கு  Whatsapp மூலமாகவும் அனுப்பப்பட்டிருக்கும்.

For Event Booking:

  • மேலே குறிப்பிட்ட வழிகளைப் பயன்படுத்தி உள்ளூரில் நடக்கக்கூடிய இசை நிகழ்ச்சிகள் போன்ற நேரடி நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளளலாம்.
  • அதற்கு முகப்புப் பக்கத்தில் உள்ள Events என்பதை Click செய்து அதில் இனி நடக்க இருக்கும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான தகவல்களில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் இந்த நகழ்ச்சியைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும் அதனை சரிபார்த்த பின் Book tickets என்பதை Click செய்யவும்.
  • அதில் டிக்கெட்டுகளின் வகைகள் திரையில் தோன்றும் (உ.தா; Elite, Fanpit (Standing), Diamond, Gold, Silver, Bronze).
  • அதில் CheckOut என்பதை தொடர்ந்து Add Billing Details ல் நுழைந்துஅங்கு உங்களின் தகவலை உள்ளிட வேண்டும். அதை Confirm செய்து Add Payment வழியே உங்களுக்கான தொகையை செலுத்தி அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • அறுதியில் உங்களின் பெயருடன் கூடிய டிக்கெட் Profile ல் காண்பிக்ககப்படும்.

For Dining:

  • மேற்குறிப்பிட்ட வழிகளைப் பயன்படுத்தி முகப்புப் பக்கத்தை அடைந்ததும் அதில் உள்ள Dinning என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில்,
    • Party Vibes
    • Romantic Dining
    • Buffet
    • Premium Dining
    • Cozy Cafes
    • Family Dining

போன்ற தேர்வுகளுடன் உங்களுக்கு விருப்பமான உங்களின் அருகில் உள்ள உணவகங்களின் தகலவல்களை தேர்ந்தெடுத்து மேலே குறிப்பிட்டுள்ள வழிகளைப் பயன்புடுத்தி இந்த உணவகங்களுக்கான இருக்கைகளை வீட்டிலிருந்தே Book செய்து கொள்ளலாம்.

தளத்தைப் பற்றிய தகவல்களுக்கு;

Version –>  1.5.2

Offered By —> ZOMATO

Download Size—> 41.80 Mb

இது போன்ற பல சிறந்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Tricks Tamizha வின் தளத்தை பின்தொடரவும்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *