பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அப்போ Book My Show பற்றி தெரிஞ்சு வெச்சுருப்பீங்களே! இல்லையென்றால் வாங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்…| Tricks Tamizha

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அப்போ Book My Show பற்றி தெரிஞ்சு வெச்சுருப்பீங்களே! இல்லையென்றால் வாங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்…| Tricks Tamizha

இந்த விறுவிறுப்பான காலத்தில் நம்மை சற்று உற்சாகப்படுத்துவது, அவ்வப்போது நம்மை மகிழ்விக்கும் சில பொழுது போக்கு நிகழ்சிகள் தான். ஆனால் அது நமக்கு மட்டுமா என்பது போல புதுப்படங்கள் திரையிட்டாலும் , கிரிக்கெட் போட்டியானாலும் அல்லது ஏதாவது இசை நிகழ்சியானாலும் மக்கள் கூட்டம் அதைக் காண அலைமோதுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவ்வாறு அவற்றைக் காண டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது மக்களிடையே பிரபலமாகிவிட்டது. அந்த வகையில் இது போன்ற நிகழ்சிகளுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள உதவும் ஒரு நட்பு தளமாக இந்த Book My Show  உள்ளது.

Book My Show பற்றிய அறிமுகம்:

  • India Ticketing” என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த அந்த இணையதள டிக்கெட் புக்கிங் தளமானது தற்பொழுது Book My Show என்ற பெயரில் இந்தியாவின் இணையதள டிக்கெட் புக்கிங்கில்  முன்னனி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டு உள்ளது.
  • ஆஷிஷ் ஹேம்ரஜனி ,பரீக்ஷித் தார் மற்றும் ராஜேஷ் பால்பாண்டே போன்ற இளம் தொழில் முனைவோர்கள் இணைந்து இந்நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
  • இந்நிறுவனம் முதலில் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தளமாகவே இருந்தது.
  • அதன் பின்னர் இவை,
      1. திரைப்படங்கள்
      2.  கச்சேரிகள்
      3. நாடகங்கள்
      4. விளையாட்டு(உதா, கிரிக்கெட், கால்பந்து) போன்ற நேரடி பொழுது போக்கு நிகழ்சிகளுக்கும்  இணையதள டிக்கெட்டுகளை வழங்கினர்.
  • புலக்கத்தில் வந்த மூன்றே ஆண்டுகளில் அதாவது 2010 ல் IPL கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் அதிகாரப்பூர்வ டிக்கெட் பங்குதாரராக மாறியது.
  • இந்தியாவில் மட்டுமல்லாமல் இதன் செயல்பாட்டை இந்தோனேஷியா,இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
  • இவ்வாறு குறுகிய காலத்தில் மக்களிடையே பிரபலமான இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தை 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதுடன் இந்தியாவில் மட்டும் 5000 க்கும் அதிகமான திரைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுள்ளனர்.
  • இத்தகைய தளத்தில் எவ்வாறு திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பதிவு செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்

Ticket முன்பதிவு செய்யும் வழிமுறைகள்:-

  1. முதலில் Play store ல் இருந்து அதிகாரப்பூர்வ தளத்தை பதிவிக்கம் செய்து கொள்ளவும்.
  2. இத்தளத்தில் உங்களின் Mobile Number அல்லது Google account ஐப் பயன்படுத்தி Login செய்து உள்நுழையவும்
  3. அடுத்த பக்கத்தில் உங்களின் நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.
  4. பின் வரும் பக்கத்தில் Movies என்பதை Click செய்யவும்.
  5. அதனைத் தொடர்ந்து அந்த நகரத்தில் திரையிடப்படக்கூடிய மொழிகள் சில வழங்கப்பட்டிருக்கும். அவற்றில் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  6. குறிப்பிட்ட நகரத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் திரைக்கு வந்துள்ள திரைப்படங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
  7. அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து Book Tickets ஐ Click செய்யவும்.
  8. அடுத்த பக்கத்தில் அந்த வாரத்தின் தேதிகள் குறிப்பிட்டு இருக்கும். அதை தேர்ந்தெடுக்கவும்.
  9. அதற்கு கீழே அந்த தேதியில் எந்தெந்த திரையரங்குகளில் அந்த குறிப்பிட்ட படம் திரையிடப்படுமோ அதன் தகவல்கள் Show Time உடன் வழங்கப்படும்.
  10. இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்த பின் How Many Seats? என்ற கேள்விக்கு எத்தனை இருக்கைகள் வேண்டுமோ அதனை கீழே குறிப்பிடவும். Select Seats என்பதை Click  செய்யவும்.
  11.   அடுத்து  பக்கத்தில் இருக்கைகளின் முழு தகவ்களும் வரைபடத்தின் வழியே தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். அதில் கிடைக்கக்கூடிய இருக்கைகளை பச்சை வண்ண சதுரத்தில் குறிப்பிட்டிருக்கும்.
  12. அதைத் தேர்ந்தெடுத்ததும் அதற்கான விலை உடனே திரையில் தோன்றும்.
  13. சிற்றுண்டி தேவைப்பட்டால் இந்த இடத்தில் குறிப்பிட்டு கொள்ளலாம். அல்லது Skip செய்து கொள்ளலாம்.
  14. அதைத் தொடர்ந்து உங்களின் E-mail, Phone Number போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  15. அடுத்த பக்கத்தில் இதுவரை நூங்கள் வழங்கிய தகவல்களின் தொகுப்பாய் அனைத்தும் திரையில் தோன்றும்.  அதனோடு அதற்கான விலைப்பட்டியல், இந்த சேவைக்கான தொகை மற்றும் அதற்கான GST தொகை உள்பட அனைத்தையும் சரிபார்த்த பின் Continue வை Click செய்யவும்.
  16. பின் தொகையை செலுத்த வழங்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் எதாவதொன்றின் வழியே பணத்தை செலுத்த வேண்டும்.
  17. இந்த செயல்பாடுகள் முடிவடைந்ததும் உங்களுக்கான டிக்கெட் திரையில் தோன்றும்.
  18. அதனை Screenshot எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது அதில் உள்ளிட்ட Mobil Number க்கோ, E- Mail ற்கோ SMS வாயிலாக டிக்கெட்டானது அனுப்பப்படும்.

இப்பொழுது உங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

தரவுத்தளம்:

https://play.google.com/store/apps/details?id=com.bt.bms

https:/lk.bookmyshow.com

உதவிக்கு:

+91(022)-61445050

[email protected]

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *