பொதுவாகவே இரயில் பயணம் என்றாலே அலாதி இன்பம் தான். ஆனால் அது தற்பொழுது பெருகி வரும் மக்கள் தொகையால் சற்று துன்பமாகவும் மாறி வருகிறது. இரயிலின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டு சுகமாக பயணிக்கும் காலம் போய் இப்பொழுது நிற்க இடமில்லாமல் கடினப்பட்டு தான் பயனிக்க வேண்டியுள்ளது. ஏனெனெறால் நாளுக்கு நாள் இரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் சில விழாக்கால நாட்களில் அதற்கான பயணச்சீட்டைப் பெறுவது கூட கடினம் தான்.
அதற்காகவே 1981 முதல் இரயிலிற்கான முன்பதிவு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருப்பதாலும் இரயில் நிலையத்தின் தொலைவுகள் காரணமாகவும் இதுவரை 12 முறை இதன் முன்பதிவு கால அமைப்பை அரசு திருத்தி அமைத்துள்ளது.
அதனை சரி செய்யவே IRCTC (Indian Railway Catering and Tourism Corporation ) நிறுவனம் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ல் இந்திய இரயில்வேக்கான இணையதள பயணச்சீட்டை வழங்க ஆரம்பித்தனர்.
IRCTC:
இந்நிறுவனமானது 1999 திலிருந்து இந்திய இரயில்வேயின் ஒரு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரயில் நிலையங்கள், இரயில்கள் மற்றும் பிற இடங்களில் தங்களது கேட்டரிங் தொழிலின் மேம்பாட்டிற்காக களம் இறங்கிய இந்நிறுவனம் தற்பொழுது சுற்றுலா ஏற்பாடு, தங்கும் விடுதிகள், பயணச்சீட்டு முன்பதிவு , தகவல் விளம்பரங்கள் போன்ற பவ்வேறு வழிகளில் சேவைகளை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த வகையில் இப்பதிவில் இரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவைப் பற்றியே வாசிக்க உள்ளோம்.
முன்பதிவு செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ தரவுத் தளத்தில் நுழைந்தவுடன் PLAY STORE ன் மூலம் Application பதிவிறக்கம் செய்ய முடியும்.
- அதில் Register User என்பதை தேர்வு செய்து , கேட்கப்பட்டுள்ள தகவல்களை(e.g: Name, Mobile Number, e-mail ID, User Name, Password) உள்ளிடவும்.
- அதை உறுதிப்படுத்த கேட்கப்படும் தனித்துவ கேள்விக்கு விடையளிக்கவும். இது நமது Password ஐ தவறவிட்டால் அதை மீட்டெடுக்க உதவும்.
- இப்பொழுது இந்த Application ல் கணக்கு தொடங்கப்பட்டு விட்டது.
- இந்த User ID மற்றும் Password ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- பின் Booking With OTP என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட Mobile Number ஐப் பயன்படுத்தி உள்நுழையமுடியும்.
- அதன் பின் நமக்கு விருப்பமான 4 இலக்க எண்ணை உள்ளிடவும்.
- இத்தளத்தின் முகப்பை அடைந்ததும் இரயிலின் குறியீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
- இதில் உங்களது பயணத்தைப் பற்றிய தகவல்களை (e.g: From,To, Date)உள்ளிடவும்.
- தேடுதலைத் தொடர்ந்து உங்களின் தகவலிற்குட்பட்ட நேரத்தில் இயங்கக்கூடிய இரயிலின் இருக்கைப் பற்றிய தகவல்கள் திரையிடப்படும்.
- இதில் உங்களின் தேர்வைக் கொடுத்ததும் அதற்கான விளைப்பட்டியல் வழங்கப்படும்.
- இவற்றில் பயணச்சீட்டின் தகவல்களை காண முடியும்.
- அடுத்த பக்கத்தில் பயணம் செய்பவர்களின் தகவல்களை உள்ளிட வேண்டும். “Add New” கொடுத்து புதிய நபர்களின் தகவலையும் உள்ளிடலாம் . இவ்வாறு ஒரு பயணச்சீட்டில் 6 நபர்களுக்கு வரை பதிவு செய்ய முடியும்.
- இறுதியாக உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சரியானதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
- பயணம் செய்பவரின் Mobile Number ஐ உள்ளிடவேண்டும். அதன் பின் அந்த எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை உள்ளிடவும். அதன் பின் ” Proceed to Pay ” என்பதை Click செய்யவும்.
- எச்சரிக்கைத் தகவலை கவனமாக வாசித்தவுடன் பணம் செலுத்தும் தளத்தை அடையும்.
- இதில் உங்களின் விருப்பமான தளத்தைப் பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம்.
- இவ்வாறு பணத்தை செலுத்தியதும் IRCTC ல் வரவு வைக்கப்பட்டு பயணச்சீட்டு உறுதிப்படுத்தப்படும்.
- இதனை நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:
https://play.google.com/store/apps/details?id=cris.org.in.prs.ima