தங்கமயிலின் Digi Gold App -ல் நகை வாங்கனுமா ? லாபமா இல்ல நட்டமா ? Thangamayil Best Gold Saving Scheme | Tricks Tamizha

தங்கமயிலின் Digi Gold App -ல் நகை வாங்கனுமா ? லாபமா இல்ல நட்டமா ? Thangamayil Best Gold Saving Scheme | Tricks Tamizha

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தங்கத்தின் மதிப்பு இன்றளவும் உயர்வாகவே கருதப்படுகிறது. பல காலங்களுக்கு முன்பு இந்த தங்கத்தையே பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி இருந்தனர்.

ஆனால் எப்பொழுது இதனை ஒரு ஆடம்பர பொருளாகவும் அணிகலன்கலாகவும் மக்கள் மனது விரும்ப ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இதன் மதிப்பும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் இந்த ஒரு சாதாரண உலோகமானது எத்தனை காலங்களானாலும் அதன் தரமும் மதிப்பும் அப்படியே இருக்கும் என்பதால் தான்

அது மட்டுமின்றி தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் நாணயச் செலாவணியை நிர்ணயிப்பதில் இந்த தங்கத்திற்கு பெறும் பங்கு உள்ளது.ஒரு நாட்டினுடைய செலாவணியை அவர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் எடைக்கு மதிப்பிடுவார்கள். அவ்வாறு அவர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பிற்கு ஏற்றவாறு அந்நாட்டின் அரசு நாணயம் மற்றும் பணத்தினை அச்சிட்டு வெளியிடுவர்.

சைனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கம் உற்பத்தியாளர்களாக இருந்தாலும் இந்த தங்கத்தை அதிக அளவில் வைத்திருப்பவர்களில் 8133.46 டன் எடை கொண்டுஅமெரிக்கா முதலிடத்திலும் , அதனை தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள்தான் முன்னனியால் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பாக 822.9 டன் உள்ளது என RBI தெரிவித்துள்ளது.

தங்கத்தின் மதிப்பை அளவிடும் முறை;-

தங்கத்தின் தரத்தைப் பொருத்து அதன் மதிப்புகள் மாறுபடும். அதன் தூய்மையை காரட்(K) என்ற அலகால் குறிப்பர்.  இதன் தரத்தை அளக்க பயன்படும் கருவி கரோரா மீட்டர்.

தங்கத்தின் மதிப்பை பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். அவை,


தங்க நகையின் மதிப்பு = தங்கத்தின் விலை ( அப்போதைய தேதிக்கு ) * தங்கத்தின் எடை ( கிராமில் ) + செய்கூலி +GST


  • 24 காரட்  தங்கம் என்பது 100% தூய தங்கம் – இதுவே தங்கத்தின் அதிகபட்ச காரட் மதிப்பாகும். இவ்வகை தங்கம் எப்பொழுதும் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும்.
  • 22 காரட் தங்கம் என்பது 91.6% தூய தங்கம்
  • 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கம்
  • 14காரட் தங்கம் என்பது 58.3% தூய தங்கம்
  • 10காரட் தங்கம் என்பது 41.7% தூய தங்கம்
  • 9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம்

பவுன் கணக்கில் குறிப்பிட்டால்,

  • 1 கிராம் தங்கம் 0.125 பவுன்
  • 4 கிராம் தங்கம் 0.5 அல்லது 1/2 பவுன்
  • 8கிராம் தங்கம்1 பவுன்
  • 20கிராம் தங்கம் 2.5 பவுன்
  • 30 கிராம் தங்கம் 3.75பவுன்
  • 40 கிராம் தங்கம் 5 பவுன்
  • 50 கிராம் தங்கம் 6.25 பவுன்
  • 100 கிராம் தங்கம் 12.5 பவுன்
  • 500 கிராம் தங்கம் 62.5 பவுன்
  • 1000 கிராம் தங்கம் 125 பவுன்

தங்கம் கடந்து வந்த விலை மாற்றங்கள்:-

தங்கத்தின் விலையில் இதுவரை நாம் கண்ட மாற்றங்களைப் பற்றிய பட்டியல் 24 கிராம் கணக்கில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

    • 1965                                     ரூ. 71.75
    • 1970                                     ரூ. 184
    • 1975                                     ரூ. 540
    • 1980                                    ரூ. 1330
    • 1985                                     ரூ. 2130
    • 1990                                     ரூ. 3200
    • 1995                                     ரூ.4680
    • 2000                                    ரூ.4400
    • 2005                                    ரூ.7000
    • 2010                                     ரூ.18,500
    • 2015                                     ரூ.26,343.50
    • 2020                                    ரூ.48,651
    • 2021                                     ரூ.48,720
    • 2022                                    ரூ.52,670
    • 2023                                    ரூ.65,330
    • 2024                                    ரூ.77,913
    • 2025                                    ரூ.79,200

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தங்கத்தைக் கருத்தில் கொண்டு அதில் பலர் முதலீடு செய்கின்றனர்.

அதிலும் சிலர் நகைக்கடைகளில் வழங்கும் பல புதிய திட்டங்களைப் பயன்படுத்தி சேகரிக்கின்றனர். அந்த வகையில் நமது தங்க மயில் நகைக் கடைகளில் வழங்கப்படும் சிறப்புத் திட்டங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சுலபத்தவணையில்தங்கத்தை சேமிப்பது  என்பதைப் பற்றிய தகவல்களைக் காணலாம்.

தங்கமயில்  சேமிப்பு திட்டங்கள்:-

2007 ல் இருந்து மக்களின் நம்பகமான நகைக் கடைகளில் ஒன்றான தங்கமயில் ஜிவல்லரி தற்பொழுது அதன் கிளைகளை 60 ற்கும் மேற்பட்ட இடங்களில்  விரிவடையச்செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வழியே நகை வாங்குவது மட்டுமின்றி சேமி்க்கவும் முடிகிறது. அப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களாக அவர்கள் வழங்குவது,

  • Digi Gold Savings
  • Super Gold
  • தங்கமகள் சேமிப்பு திட்டம்
  • Future Plus
  • Fixed Deposit
  • Smart Gold

மேற்கண்ட அனைத்து திட்டங்களையும் வீட்டிலிருந்த படியே Online மூலமாகவும்  சேமிக்கலாம். அதில் ஒன்றுதான் 2020 ல் இருந்து  Play Store ன் பயன்பாட்டில் உள்ள  Thangamayil Digi Gold App மூலம் வழங்கப்படும் Digi Gold சேமிப்புத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் 100 ரூபாயிலிருந்து கூட தங்கத்தை அன்றைய தேதிக்கு வரவு வைக்க முடிகிறது.

Digi Gold சேமிப்புத் திட்டத்தை பற்றிய தகவல்கள்:-

  • இந்த Digi Gold சேமிப்புத் திட்டத்தில்  இணைவதற்கு முதலில் கீழே வழங்கப்பட்டுள்ள தரவுத்தள முகவரியைப் பயன்படுத்தியோ அல்லது Play Store வழியாகவோ Thangamayil Digi Gold App ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ( DIGI GOLD APP DOWNLOAD செய்ய :- https://app.thangamayil.com/7jy1/9w275e8i )
  • இத்தளத்திற்கு புதியவர் எனில் Sign up ஐ தேர்வு செய்து Mobile Number ஐ உள்ளிட்டு அதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது உங்களின் பெயர், Mobile Number, E-Mail Id போன்றவற்றை உள்ளிட்டு அடுத்த பக்கத்தில் 4 இலக்க இரகசிய எண்ணை உள்ளிட்டால் அதன் முகப்புப் பக்கம் திரையில் தோன்றும்.
  • அதில் உங்களுக்கு தேவையான திட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகளுடன் திட்டம் பற்றிய அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும்.
  • Digi Gold என்பதை தேர்வு செய்தால் அதில் Address, Pin Code, Pan Card Number போன்ற தகவல்களை உள்ளிட்டு Submit செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது நீங்கள் செலுத்தும் பணத்திற்கு தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான நன்மைகள் எவ்வளவு  என்பதை சரிபார்த்து  Nick Name, மற்றும் உங்கள் திட்டத்தின் கால வரம்புகளை சரிபார்த்து Pay Now வை பயன்படுத்தி இதற்கான பணத்தை செலுத்தி விட்டால் நம்முடைய கணக்கில் அந்த பணத்திற்கு நிகரான தங்கம் வரவு வைக்கப்பட்டிருக்கும்.

இத்திட்டத்தால் பெறும் நன்மைகள்:-

  • இந்தத்திட்டத்தில் நகையைப்பெற குறைந்தது 1 மாத தவணைகளை செலுத்த வேண்டியிருக்கும்.
  • இந்த தளத்தைப் பயன்படுத்தி நாள் ஒன்றிற்கு குறைந்தது ரூ. 100 முதல் சேமித்து வைக்க முடியும். இதனால் சேமிப்பதை எளிமையாக்குகின்றது.
  • இத்திட்டத்தின் கால வரம்பு 11 மாங்கள் அதாவது 330 நாட்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.
  • முதல் 75 நாட்களுக்கு  நாம் செலுத்தும் தொகைக்கு 5% வரை அவர்கள் வழங்கும் சிறு தொகையும் சேர்ந்து கிடைக்கும்.
  • அதுவே அடுத்த 76-150 நாட்களுக்கு 3.75% நன்மையும்
  •  151-225 நாட்களுக்குள் 2% நன்மைகளும்
  • 226 -300 நாடுகளுக்குள் 0.75 % மும் நன்மைகள் கிடைக்கின்றது.
  • இறுதி 30 நாட்களுக்கு எந்த வித நன்மையம் வழங்கப்படுவதில்லை.

இவ்வாறு நாம் சேமித்த தொகையுடன் அவர்கள் வழங்கிய தொகையையும் சேர்த்து 330 நாட்களுக்குப் பிறகு தங்கமயிலின் எந்த கிளைகளில் வேண்டுமானாலும் நகையாகவோ அல்லது காயின்களாகவோ பெற முடியும்.

http://www.Thangamayil.com ல் கூட உங்களுக்கு விருப்பமான நகையை வாங்க முடியும்.

இத்திட்டத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு 1800 889 7080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

DIGI GOLD APP DOWNLOAD செய்ய :- https://app.thangamayil.com/7jy1/9w275e8i

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *