2nd Hand Mobile வாங்கப் போறீங்களா?அப்போ ஏமாறாமலிருக்க இத தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க…| Tricks Tamizha

2nd Hand Mobile வாங்கப் போறீங்களா?அப்போ ஏமாறாமலிருக்க இத தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க…| Tricks Tamizha

தற்பொழுது சந்தையில் நாளுக்கு நாள் பலவிதமான Model களில் Mobile Phone கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதிலும் ரூ.1000 முதல் ரூ. 100000 க்கும் மேல் விற்கப்படுகின்றன. பல சிறப்பம்சங்களும், புது Technology களும் நிறைந்தாக மக்களின் அத்தியாவசியமும், ஆடம்பரமும் கலந்ததாக உருவாக்கப்படுவதால் நாளுக்கு நாள் அதன் புது வித தயாரிப்புகளை பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் அவ்வாறு புதுப் புது  Mobile Phone வாங்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும்  அதற்கான பொருளாதாரம்  இல்லாமல் இருக்கும். அதனால்  பழைய Mobile ஐ அதுவும் நல்ல நிலையில் உள்ள Mobile ஐ வாங்க  மக்கள் அத்தகைய Mobile Phone ஐ வாங்க ஒரு வாய்ப்பாக கொண்டுள்ளனர்.

ஆனால் அதை நாம் எந்த நிலையிலும் ஏமாறாமல் வாங்க வேண்டும். அதற்கான சில யுக்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

Mobile வாங்கும்போது கவனிக்க வேண்டியது:

அதிக விலையுள்ள Mobile phone ஐ என்னதான் குறைந்த விலையில் வாங்குவது நமக்கு சாமர்த்தியமாக தோன்றினாலும் அதில் பல சிக்கலும் இருக்கிறது.

  • ஒரு வேளை அந்த Mobile phone யாரிடமிருந்தாவது திருடப்பட்டதாக இருக்கலாம்.
  • ஏற்கெனவே அந்த Mobile ஐப் பயன்படுத்தியவர் அதிக நாட்கள் பயன்படுத்தி அதில் பல கோளாறுகள் ஏற்பட்டிருப்பின் அது நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்.
  • நாம் செலவிடும் பணம் அந்த Mobile phone ன் தரத்திற்கு தகுந்ததா என்பதில் சந்தேகம் இருக்கலாம்.

இவ்வாறு ஏற்படும் சந்தேகத்தை சில எளிய வழிகளை பயன்படுத்தி தெளிவாக்கிக் கொள்ளலாம்.

திருடப்பட்ட Mobile லா என கண்டறிய:

ஒரு வேளை நாம் வாங்கியிருக்கும்  Second Hand Mobile திருடப்பட்டதாக இருக்குமோ ்என்ற சந்தேகம் இருந்தால் அதை தெளிவாக்க கீழ்கண்ட வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

  1. https://www.ceir.gov.in  என்ற மத்திய அரசின் தரவுத் தளத்திற்குள் நுழைய வேண்டும்.
  2. அதில் உள்ள “Web Portal” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  3. அதில் அந்த Mobile ன் IMEI எண்ணை உள்ளிட்டால் அந்த எண்ணிற்கு உட்பட்ட அந்த Mobile தொலைந்ததற்கான ஏதாவது புகார் வந்துள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.
  4. குறிப்பு: IMEI எண்ணை தெரிந்து கொள்ள *#06# என்னும் எண்ணிற்கு Call செய்ய வேண்டும்.

Mobile ன் பயன்பாடுகள் சரியாக வேலை செய்கிறதா என சரிபார்க்க:

நாம் வாங்க நினைக்கும் Mobile Phone களில் அனைத்து பயன்பாடுகளும் தற்பொழுது எப்படி வேலை செய்கிறது என்பதை சரிபார்க்க ஒவ்வொரு Company Phone ற்கும் ஒவ்வொரு சோதனை எண் வழங்கப்பட்டிருக்கும். அவை,

  • SAMSUNG  —->  *#0*#
  • OnePlus —> *#899#
  • Oppo —->  *#899#
  • Realme—> *#899#
  • Vivo —> *#558#
  • MI —> *#*6484*#*#

என்ற எண்ணிற்கு Call  செய்ய வேண்டும்.

  • Tips 1: ஒரு கடைகளில் வாங்கவுள்ளீர் எனில் முதலில் அந்த Mobile ற்கான Bill இருக்கிறதா என பார்க்க வேண்டும். பின் அந்த Bill லில் இதற்கு முன் வாங்கியவரின் தகலவல்களை சரிபார்த்து அந்த Bill ல் உள்ள IMEI எண்ணும் இந்த Mobile ல் உள்ள  IMEI எண்ணும் சரியானதா என சரிபார்க்க வேண்டும். அதோடு அந்த Mobile ற்கு வழங்கப்படும் Box, Charger, Head Phone அனைத்தும் முடிந்த அளவிற்கு கைவசம் இருப்பதாக வாங்குவது நல்லது.
  • Tips 2: வாங்க உள்ள Mobile Phone ல் Play store ல்  Phone Doctor Plus போன்ற  Appகளைப் பயன்படுத்தி இதில் உள்ள Hard Ware ன் அனைத்து செயல்களும் சரியாக செயல்படுகிறதா என சோதித்து பார்க்க வேண்டும்.
  • Display, Camera, Mic, Sensor, Battery போன்ற அனைத்தையும் Mobile ன் Setting ஐப் பயன்படுத்தி சோதித்து பார்க்க வேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *