Bank Loan க்கு Apply பண்ணப் போறீங்களா?  மாத EMI எவ்வளவு கட்டனும்னு தெரியுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

Bank Loan க்கு Apply பண்ணப் போறீங்களா? மாத EMI எவ்வளவு கட்டனும்னு தெரியுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்களுக்கு  அவர்கள் வழங்கிய பணத்திற்கு  ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி விதித்து  மாதாமாதம் தவணைத் தொகையாகப் பெறுகின்றனர். அவ்வாறு பெறப்படும் தொகையை கணக்கிட்டு பார்த்து வாங்குவது , கட்டாயம் நம்மை பணச்சிக்கலில் இருந்து காப்பாற்றும். இதனை தெலிவுபடுத்தும் பொருட்டே இப்பதிவை வழங்கியுள்ளோம்.

நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பெரும்பாலும் பணத்தை தான் நாடுகிறோம். வீடு, கார், நிலம் மற்றும் நமது பல தனிப்பட்ட அனைத்து தேவைகளுக்கும் பணம் மட்டுமே இன்றியமையாதது. ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் கையில் இருக்கும் இப்பணத்தைக் கொடுத்து மட்டுமே நமக்கு பிடித்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது அனைவராலும் இயலாத காரியம். ஆகையால் பெரும்பாலான மக்கள் வங்கிகள், பைனான்ஸ்கள் போன்ற நிதி நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. இங்கு மக்கள் கடன் பட்டவராகவும் வங்கிகள் கடன் வழங்குவோராகவும் உள்ளனர்.

வங்கிகளில் வழங்கப்படும் கடன்களின் வகைகள் :

  • தனி நபர் கடன்
  • வீட்டிற்கான கடன்
  • தங்க நகைக் கடன்
  • கல்விக் கடன்
  • வாகனங்களுக்காக கடன்  என இன்னும் பல தேவைகளுக்காக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய கடன்களை கூட்டு வட்டி மூலமாகவோ அல்லது தனி வட்டி மூலமாகவோ, அசலுடன் சேர்த்து கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது.

தனிவட்டிக்கான சூத்திரம்: – [தனிவட்டி= அசல்*மாதங்கள்*வழங்கப்படும் வட்டி சதவிகிதம்%]*1/100

கூட்டுவட்டிக்கான சூத்திரம்:-[கூட்டுவட்டி= அசல் *[(1+வழங்கப்படும் வட்டி சதவிகிதம்%)/100]]^மாதங்கள்

EMI- Equated Monthly Instalment

(சமமான மாதாந்திர தவணை)

  • அதாவது ஒருவர் வாங்கிய கடனை மாதாமாதம் பல தவனைகளாக வட்டியுடன் சேர்த்துக் கணக்கிட்டு திருப்பித் தருவதாகும்.

EMI= அசல்*வட்டி சதவிகிதம்%*(1+வட்டி சதவிகிதம்%)^மொத்த மாதங்கள்/((1+வட்டி சதவிகிதம்%)^ மொத்த மாதங்கள்-1)

  • அல்லது இதற்கு மாற்றாக https://emicalculator.net/ என்ற தரவுத் தளத்தினைப் பயன்படுத்தியும் EMI ஐ கணக்கிட முடியும்.
  •  இந்தத் தளத்தில் வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகனக்கடன் போன்றவற்றிற்கான சுலபமான கணக்கீட்டு முறை மூலம் தகவல்களை உள்ளிட்டு கணக்கிட முடியும்.
  • இப்பொழுது கணக்கீட்டின் முழுவிபரங்களும் வரைபடத்துடன் விளக்கப்படும்.

வட்டி சதவிகிதத்தை எப்படி ரூபாயில் கணக்கிடுவது:-

6% வட்டி =  6/12 = 0.5 பைசா

10% வட்டி = 10/12 = 0.83 பைசா

12% வட்டி = 12/12 = 1 ரூபாய்

அல்லது

80 பைசா =0.80*12 = 9.6%

60 பைசா =  0.60*12 = 7.2%

1 ரூபாய் = 1*12 = 12%

இந்த கணக்கீட்டில் 12 என்பது ஒரு வருடத்தின் மாதங்களைக் குறிக்கிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *