PF பணத்தை எப்படிப் பெறுவது. அதுவும் அலுவலகத்திற்கு போகாமல் வீட்டிலிருந்தே  விண்ணப்பிக்கலாம். EPF பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!…|Tricks Tamizha

PF பணத்தை எப்படிப் பெறுவது. அதுவும் அலுவலகத்திற்கு போகாமல் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். EPF பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!…|Tricks Tamizha

PF -Provident Funds

  • PF  நிறுவன சட்டத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தில்  20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தாலோ , அவர்களில்  மாதம் ரூ. 15000 கீழ் ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலோ அவர்களுக்கான  வருங்காள வைப்பு நிதி கட்டாயம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என  அரசு கூறுகிறது இச்சட்டம் 1952 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒரு நிறுவனத்தின்  கீழ் வேலை செய்யும் ஒவ்வொரு நபரும் அவரின் குறைந்த பட்ச ஊதியம், அதில் எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள், அதில் நமக்கான சேமிப்பு எவ்வளவு என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான்  EPFO  என்ற தொழிலார்களின் வருங்காள வைப்பு நிதி நிறுவனம் .
  • இந்நிறுவனம் மத்திய அரசால் நிர்வகித்து வரும் ஒரு அமைப்பாகும்.  நமது ஊதியத்தின் சேமிப்புத் தொகையானது இரண்டு பிரிவுகளாக பிரித்து கணக்கு வைத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு ஊழியருக்கு வழங்கப்படும்  ஊதியத்திலிருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு  இதில் Pension திட்டத்தின் கீழ் 8.33% மும் ,3.67% வருங்காள வைப்புத்திட்டத்தின் கீழும் செமித்து வைக்கப்படும்.
  • இந்தத் தொகையை வருங்காள வைப்பு ஆணையம் முதலீடு செய்யும்.  நமக்கான தொகையை மாதாமாதம்  பிடித்தம் செய்யப்பட்டு அதனை சேகரிப்பது எளிதாகத் தெரிந்தாலும் அதனை திரும்பப் பெறுவதில் மக்கள் அதிகம் சிரமப்பட்டு இருந்தார்கள். அவர்களின் நிலையை சுலபமாக்கும்  வகையில்  மத்திய EPFO (Employee’s Provident Fund Organisation) என்ற போர்டலை  இணைத்து அதனை  ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கப்படும் ஒரு தனித்துவமான 12 இலங்களைக் கொண்ட (UAN) உலகலாவிய கணக்கு எண் வழங்கப்பட்டு  அதனடிப்படையில் கணக்கு வைத்துக் கொள்வர்.
  • நமது சேமிப்பின் முழுத்தொகையாகவோ அல்லது அதில் கடன் பெறவோ, கணக்கின் கீழ் உள்ள சேமிப்பை சரிபார்க்கவோ எளிதாக்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வாறு தனது முழுத்தொகையையும் பெறுவது , அதில் எவ்வாறு நம் கணக்கை சரிபார்ப்பது பற்றி இப்பதிவில் காண்போம்.

UAN என்றால் என்ன?

ஒவ்வொரு ஊழியருக்கும் அவருடைய வருங்கால வைப்பு நிதியை சேமித்து வைக்க ஒரு கணக்கு தேவைப்படும். அந்த சேமிப்புக் கணக்கிற்கு வழங்கப்படும் எண் தான் உலகளாவிய கணக்கு எண் (UAN- Universal Account Number). இந்த எண் சம்பளச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது அதிகாரப்பூர்வ தரவுத்தளத்திலும் அந்த எண்ணை  தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.

EPFO வில் பயன்படுத்தப்படும் FORM கள் :-

  1. Form 31 —முன் தொகையைப்பெற—- காரணம் தேவை — Date of End  தேவையில்லை.
  2. Form 19 — பணியாளரின் பங்கு மற்றும் முதலாளியின் பங்கினைப் பெற— காரணம் தேவை—Date of End தேவை.
  3. Form 10C —பணி இறுதியில்  முழுப்பணத்தையும் பெற —காரணம் தேவையில்லை— Date of End தேவை.
  4. Form 10D—மாதாந்திர PF தொகையைப் பெற—58 வயதிற்கு பிறகு மட்டும்— குறைந்தது 9.5 வருடங்கள் பணியில் இருக்க வேண்டும்.
  5. Form 13 — பணியின் மாற்றத்தினால் உருவான PF கணக்குகளில் உள்ள பணத்தை ஒன்றிணைக்க.
  6. Form 15 G— Offline Form—>குறைந்த வருடம் பணியில் இருந்து ரூ.50,000 க்கு அதிகம் கணக்கில் பணம் வைத்திருப்பவர்.
  7. Form 15 H— 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தொகையைப் பெற.

EPFO வில் இருப்புத் தொகையை Mobile மூலம் சரிபார்க்க எளிய வழிகள்:-

இவ்வாறு நம் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க  உதவும் சில வழிகள் ,

  1. Play store–> Umang App–> dowload . Search For EKYC–> EPFO  Pass Book–> View PassBook–> Enter your UAN Number–> Submit–> பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும் –> Verify.
  2. Missed Call  —-> உங்கள் PF கணக்கில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணிற்கு Missed Call   செய்தால் உங்கள் எண்ணிற்க்கு  உங்கள் PF ன் இருப்பு பற்றிய அனைத்து தகவல்களும் அனுப்பப்படும்.
  3. Message —-> 7738299899 என்ற எண்ணிற்கு ”EPFOHO UNA “என டைப் செய்து அனுப்பினால் உங்கள் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

ஆனால் இந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் மற்றும் PF ACCOUNT ல் உங்கள் கைப்பேசி எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

PF பணத்தில் இருந்து முன்பணம் அவசரத் தேவைக்கு பெற முடியுமா?

கட்டாயம் பெற முடியும் . அதற்கான வழிகள் பின்வருமாறு வழங்கியுள்ளோம்.

  1. கொடுக்கப்பட்டுள்ள தரவுத்தளத்தின் வழியே உள் நுழைந்ததும்  UAN Number, Password, Captcha வை உள்ளிடவும்.
  2. Second Factor Authendication—> இந்தப்பத்தியில் ஊழியரின் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிடவும்.
  3. இதில் உங்களின் UAN Account Login செய்யப்படும்.
  4. Online Service —> Claim (FORM- 31,19,10C&10D) —> Online Claim Page
  5.  விண்ணப்பிக்கும் ஊழியருடைய தகவல்களை உள்ளிடவும்(உதா. பெயர், பிறந்த தேதி, KYC தகவல், ஆதார் எண், வங்கி எண், PAN எண், …) —> Proceed For Online Claim ஐ தேர்ந்தெடுக்கவும்.
  6. இதில் விண்ணப்பிப்பவரின் தகவல்களுடன் அதற்கான பக்கம் திரையிடப்படும். இதில் ” I Want to Apply For ” என்பதில் ”PF Advance (FORM-31)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7.  அதற்கான பக்கத்தில் உள் நுழைந்ததும் தேவையான தகவல்களை உள்ளிடவும். அதில் ” Select Services” என்பதில்  இந்தக் கணக்கில் உள்ளவருக்கு இதுவரை உள்ள அனைத்து PF கணக்குகளும் திரையிடப்படும்.
  8. எந்த கணக்கில் இருந்து முன் பணம் பெற விரும்புகிரீர்களோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. அதற்கு கீழுள்ள பெட்டியில் முன்பணம் கோறுவதற்கான காரணத்தை (உதா. Illness) உள்ளிடவும். பின் எடுக்க இருக்கும் பண்ணத்தின் மதிப்பை உள்ளிடவும்.
  10. பின் வீட்டின் முகவரி உள்ளிடவும். அடுத்து விண்ணப்பதாதரின் Bank Pass Book/ Cheque  ன் மின் நகலை கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி (உதா; jpg/jpeg .size: 100 kb- 500kb ) மட்டுமே உள்ளிட வேண்டும்.
  11. ஆதார் எண்ணை சரிபார்க்க அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும்.
  12. இதனை சரியாக செ்திருந்தால் இப்பொழுது விண்ணப்பிக்கப்பட்ட முன்பணத்திற்கான வேண்டுகோள் வெற்றிகரமாக சமர்பித்ததற்கான தகவல் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

EPFO கணக்கில் உள்ள முழுப்பணத்தையும் பெற வழிமுறைகள்:-

  1. கொடுக்கப்பட்ட தரவுத் தளத்தில் நுழைந்தவுடன்  அதில் Online Services  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2.  விண்ணப்பிக்கும் ஊழியருடைய தகவல்களை உள்ளிடவும்(உதா. பெயர், பிறந்த தேதி, KYC தகவல், ஆதார் எண்,  வங்கி எண், PAN எண், …) —> Proceed For Online Claim ஐ தேர்ந்தெடுக்கவும்.
  3. இதில் விண்ணப்பிப்பவரின் தகவல்களுடன் அதற்கான பக்கம் திரையிடப்படும். இதில் ” I Want to Apply For ” என்பதில் ”Only PF Withdrawl (Form 19)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “Upload Form 15G” என்ற தேர்வுக்கு மேலே குறிப்பிட்ட தகுதிகளுடையவராயின்  இங்கு  பதிவிறக்கம் செய்யவும்.
  5. பின் வீட்டின் முகவரி உள்ளிடவும். அடுத்து விண்ணப்பதாதரின் Bank Pass Book/ Cheque  ன் மின் நகலை கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி(உதா; jpg/jpeg .size: 100 kb- 500kb ) மட்டுமே உள்ளிட வேண்டும்.
  6. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண்ணிற்கு  அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும்.
  7. இறுதியாக Validate OTP and  Submit Form என்பதை  Click செய்யவும்.
  8. “OTP has been verified. eKYC updated and PF final Withdrawal claim form Submitted successfully on unified portal”  என்ற தகவல் காண்பிக்கப்படும். இப்பொழுது  Form 19 சமர்பித்தல் முடிந்தது. அதனைத் தொடர்ந்து  Form 10C  விண்ணப்பித்து பெற வேண்டும்.
  9. மேற்கண்ட அனைத்து வழிகளையும் மீண்டும் தொடர்ந்து அதில்  எண் 3 ல் குறிப்பிட்ட ” I Want to Apply For ” ல் ”Only pension Withdrawal(Form 10C)” என்பதை தேர்வு செய்ய வேண்டும். மற்ற அட்டவனைகளை அதே போன்று தொடர்ந்து பூர்த்தி செய்து நிரப்பவேண்டும்.
  10. ஆதார் எண்ணை உள்ளிட்டதும் Form 10c க்கான விண்ணப்பமும் சமர்பிக்கப்பட்டு விடும்.
  11. “OTP has been verified. eKYC updated and Pension Withdrawal claim form Submitted successfully on unified portal” என்ற தகவல் காண்பிக்கப்படும்.

இவ்வாறு உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் சரிபார்த்தலுக்குப் பின் குறைந்தது 15 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கட்களுக்குள் இந்த தொகையானது உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:

https://www.epfindia.gov.in

UMANG  தளத்திற்கான தரவுத்தளம்:

https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c