Instagram பற்றிய ஒரு அறிமுகம்:-
- Instant photo மற்றும் Telegram போன்ற பயன்பாடுகளின் இணைப்பே இந்த Instagram என்பதாகும். Facebook ன் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த செயலியை கெவின் சிஸ்ட்ராம் மற்றும் மைக் கிரிகேர் போன்றவர்கள் சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு 2010 அக்டோபர் மாதத்தில் உருவாக்கி வெளியிட்டனர்.
- 12.5 MB களைக் கொண்ட இந்த மென் பொருள் செயலியானது துவக்கத்தில் I-Phone, I-Pad, மற்றும் I-Pad touch போன்றவற்றில் மட்டுமே பயன்படுத்தகூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
- பின்னர் 2012 ல் Android Photography யுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. இது புர்பின் நிறுவனத்தின் வடிவமைப்பாகும்.
- Facebook ன் விரும்பிகளையும் சேர்த்து ஈர்க்கப்பட்ட இந்த Instagram தளத்தை தற்பொழுது 2.4 பில்லியன் பயனர்களுடன் அனைத்து வயது பயனர்களையும் ஈர்த்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயல்பாடுகளை வழங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட இத்தளத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொண்டு உருவாக்க முடியும்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட கணக்குகளில் தேவையற்ற கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர் எனில் அதற்கான தெளிவான வழிமுறைகளை வழங்கவே இந்தப் பதிவு.
Instagram ல் இருந்து உங்கள் கணக்கை நீக்கம் செய்யும் வழிமுறைகள்:-
- இந்த செயல்பாடுகளைத் தொடங்கும் முன் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Instagram செயலியை Play Store ல் சென்று Update செய்து கொள்ள வேண்டும்.
- அதன் பின் Open ஐ Click செய்து பக்கத்தைத் திறந்து கொள்ளவும். Instagram ன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் Profile ஐ திருத்தம் செய்யும் தளத்திற்குள் சென்று Accounts Center என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதில் Personal Details எ்பதின் வழியே உள் நுழைந்தால் இந்த கணக்கை தொடங்கும் பொழுது வழங்கப்பட்டிருந்த சுய விவரங்கள் திரையிடப்படும்.
- அதற்கு கீழே Account Ownership and Control என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் Deactivation or Deletion எனபதை Click செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் உங்கள் கணக்கில் உள்ள Instagram ID ன் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் உங்கள் கணக்கை தேர்வு செய்யவும்.
- பின் வரும் பக்கத்தில் இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
- Deactivate Account (Deactivating your account is temporary)
- Delete Account (Deleting your account is permanent)
- இதில் Deactivate Account என்பது உங்கள் Instagram கணக்கை சிறிது காலத்திற்கு செயல்படாமல் வைத்திருப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள தேர்வாகும்.
- அடுத்து உள்ள Delete Account என்பது நிரந்தரமாக உங்கள் கணக்கை நீக்குவதற்கான தேர்வாகும்.
- இவற்றில் Delete Account என்பதைத் தேர்வு செய்து Continue வை Click செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் கணக்கை நீங்கள் முடிப்பதற்கான காரணத்தை தேர்ந்தெடுக்கும் பக்கம் திரையிடப்பட்டு, அதில் சில பரிந்துரைக்கப்பட்ட காரணங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
- இதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்த பின் வரும் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனமாக படித்த பின் Continue வை Click செய்யவும்.
- அதனை தொடர்ந்து கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும். அதற்கான கடவுச் சொல் தெரியாத பட்சத்தில் Forget Password என்பதைப் பயன்படுத்தி கடவுச் சொல்லை தெரிந்து கொண்டு இதில் உள்ளிட்டு Continue ஐ Click செய்யவும்.
- ”Confirm Permanent Account Deletion ” என்பதற்குக் கீழே வழங்கப்பட்டுள்ள பத்தியில் வழங்கப்பட்டுள்ள தேதி வரை இந்த Account ஐ உபயோகிக்காமல் இருக்கவேண்டும். அப்படியில்லாவிடில் நீக்குவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும்.
- இறுதியாக Delete Account என்பதைத் தேர்வு செய்தால் அடுத்த 30 நாட்களுக்குள் இந்த கணக்கானது நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும்.
இவ்வாறு உங்களின் கணக்கை Instagram தளத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க முடியும். Instagram பக்கத்தைப் பற்றிய மேலும் சில தகவல்களைப் பற்றி இதே போன்று இனி வரும் பதிவில் வாசிக்கலாம்.