How To Download And Import Bus Mod In Tamil | Bus Simulator Indonesia | Download And Import Bus Mods In Bussid | Tricks Tamizha

How To Download And Import Bus Mod In Tamil | Bus Simulator Indonesia | Download And Import Bus Mods In Bussid | Tricks Tamizha

2017 ல் களமிறங்கிய இந்த BUSSID விளையாட்டானது இன்று வரை 10 கோடிக்கும் அதிகமானோரால் விரும்பி பதிவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்படும் ஒரு Simulator Game.  இந்த விளையாட்டை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி விளையாடும் வகையிலும் நிகழ்நிலையில் பேருந்தை ஓட்டும் சுவாரஷ்யங்களை உணரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விளையாட்டை நம் கையில் உள்ள Android Mobile மூலம் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதைப் பற்றிய முழு விளக்கமே இப்பதிவு.

விளையாட்டைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:-

  • BUSSID விளையாட்டை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட வழிகளை கையாளலாம்.
    1. Google ன் வழியே https://bussimulator.id  என்ற தரவுத்தளத்தினைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்யலாம்.
    2. Play Store ல் உள்ள தேடுதல் தளத்தில் Bus Simulator Indonesia என்று உள்ளிட்டு இந்த விளையாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு சில சுலபமான வழிகளைக் கையாண்டு நம்மால் இந்த விளையாட்டை நமது Android  Mobile-ல் பதிவிறக்கம் செய்து விளையாட முடிகியும்.

 Bus Mod-ஐ பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:-

இவ்வாறு விளையாட்டைப் பதிவிறக்கம் செய்த பின் கீழ்கண்ட வழிகளைப் பயன்படுத்தி Bus Mod-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

    1. Youtube Channel-களின் தகவல்களைப் பயன்படுத்தி (உதா. Dinesh Gaming )
    2. Play Store-ல் உள்ள Apps களின் மூலம் (உதா. Bussid Mod Apps  )
    3. Google Chrome களில் Search Bar ல் நேரடியாக உள்ளிட்டு தேடலாம் ( உதா. How to Download Bus Mod )
    4. Gaming Website மூலமாகவும் பதிவிறக்கம் செய்ய முடியும். ( Example – https://gamingdineshtamil.blogspot.com/ )

Download செய்த Mod-ஐ எப்படி விளையாட்டிற்குள் கொண்டு வருவது ?

    1. நேரடியாக Game-மை Open செய்து MOD என்பதன் வழியே Import-ஐ தேர்வு செய்து பின் உங்கள் Mobile Storage-ல் இந்த MOD-களை அனுமதிக்க
    2. Mod-யை Game-மில் இணைக்க கீழ்கண்ட வழிகளை கையாளலாம்.
    3. அதன் Gallery-களை அனுகலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் ”Device Gallery” என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் அதற்குள் நாம் Download செய்த அந்த Mod File ஐப் பயன்படுத்தி இந்த விளையாட்டினை தொடரலாம்.
    4. அதற்கு மாற்று வழியாக Download செய்த Mod FileCopy அல்லது Cut செய்து அதனை Mobile ன் Internal Storage  உள்ள Document —>BUSSID—>Mod என்னும்  பத்தியில் Paste செய்ய வேண்டும்.

குறிப்பு:ஒருவேளை Download செய்த File ஆனது Zip  Format-ல் இருந்தால், அதற்கு Play Store-ல் உள்ள “Z Archiver” App ஐப் பயன்படுத்தி இதனை பிரித்தெடுக்கலாம்.

Mod-களை விளையாட்டினுள் கண்காணிக்க:-

    1. இவ்வாறு Mod களை நமது Mobile Storage ல் பதிவிறக்கியதும் அந்த விளையாட்டிற்குள்  இருக்கும் Garage என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
    2. அதனுள் நுழைந்ததும் அனைத்து Bus Mod களும் சேர்ந்திருக்கும். இதன் மூலம் நமக்கு விருப்பமான Mod-களுடன் விளையாட முடியும்.
    3. இந்த விளையாட்டில் விருப்பமான Theme களை மாற்றும் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளதால் விளையாடுபவர்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க முடியும்.

விளையாடப்பற்றிய தகவல்கள்:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *