2025-ல் களம் இறக்கப்பட்ட புதிய Simulator விளையாட்டு “Truck Master: India Simulator” …| Tricks Tamizha

2025-ல் களம் இறக்கப்பட்ட புதிய Simulator விளையாட்டு “Truck Master: India Simulator” …| Tricks Tamizha

நாளுக்கு நாள் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் Simulator எனப்படும் நிஜ உலக செயல்பாடுகளை ஒத்திருக்கும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய விளையாட்டை பொழுதுபோக்கிற்காகவும், பயிற்சிக்காகவும் ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டு விளையாடி மகிழ்கின்றனர்.

இந்த வகை விளையாட்டினை விளையாடுபவர்கள் அந்த சூழ்நிலை, கதாப்பாத்திரம் மற்றும் அதில் இருக்கும் கருவிகளையும் ஒரு சுதந்திரமான கற்பனை உலகில் கையாளவும் கட்டுப்படுத்தவும் முடிகிறது.

அந்த வகையில்  ” Truck Master : India Simulator ” என்ற புதிய விளையாட்டைப் பற்றி அறிமுகப் படுத்தவே இந்தப் பதிவு.

Truck Master India Simulator:- 

  • Truck Master விளையாட்டை விளையாடுவதற்கு இணைய இணைப்பு தேவைப்படுகிறது.
  • இந்த வகை விளையாட்டு ஒரு டிரக் ஓட்டுநரின் அனுபவத்தை வழங்குவதுடன் பெரிய சாலைகளிலும் சவாலான மற்றும் குறுகிய பாதைகளிலும் டிரக்கை ஓட்டிச் செல்லும் அனுபவத்தை விளையாடுபவர்களுக்கு வழங்குகிறது.
  • மேலும் இந்த விளையாட்டை விளையாடும் ஓட்டுநரின் விருப்பத்திற்கேற்ப அந்த டிரக்கை கட்டுப்படுத்தவும் இந்தியாவில் உள்ள பல சவாலான நிலப்பரப்புகளில் ஓட்டிச் செல்வதைப் போன்றும் நிஜ உலக வாழ்க்கையை ஒத்தியிருக்கும் ஒரு கற்பனையான மெய் நிகர் அனுபவத்தை வழங்குகிறது.
  • ட்ரக்கை கட்டுப்படுத்த தேவையான Steering wheel, Acceleration, Break, lighting போன்றவை எளிமையாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 3D கிராபிக்‌ஸுடன் உருவாக்கப்பட்டுள்ள இதில் மழை, இரவு ,பகல், மூடுபனி, மற்றும் வெயில் போன்ற காலநிலை மாற்றத்தையும் உணரமுடிவதால் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
  • இந்த விளையாட்டில் நாம் பயன்படுத்தும் ட்ரக்கை நமக்கு பிடித்தவகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும். இதில் பல வகைப் பயன்பாடுள்ள ட்ரக்கின் வகைகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
      • Classic Indian Cargo Truck
      • Modern Lorries
      • Euro Truck Simulator- Inspired Models
      • Delivery Cargo ….
  • இதில் நாம் விரும்பும் ட்ரக்கை வடிவமைத்து பயன்படுத்துவதுடன் அடுத்தடுத்த நிலைக்கு Upgrade செய்யப்பட்டு அதற்கான Rewards களும் அவ்வப்போது வழங்கப்படும்.
  • Truck Master விளையாட்டானது இணையவழி மூலம் கையாளப்படுவதால் ஒருவருக்கு மேற்பட்டோரும் கூட வெவ்வேறு இடங்களில் இருந்தும் Multiplayer Mode ல் இணைந்து  விளையாட முடியும்.
  • இதன் வடிவமைப்பாளர் இந்தியாவில் உள்ள மாநிலங்களை அடிப்பைடையாக கொண்டு 100 க்கும் மேற்பட்ட நகரங்களை தேர்வு செய்யக் கூடிய வகையில் அதன்  சாலைகளை வடிவமைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல், Signal, சாலை விதிகள் போன்றவற்றுடன் நமக்கு உண்மையான ஒரு ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.
  • இவ்வாறு விளையாட்டுப் பிரியர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த விளையாட்டை 10 லட்சத்திற்கும் மேல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதுடன்  4.4 என்ற  நட்சத்திரக் குறியீடும் வழங்கி உள்ளனர்.
  • இத்தகைய நிஜ உலகை ஒத்திருக்கும் அனுபவத்தை வழங்கக்கூடிய இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்வதைப் பற்றி காண்போம்.

எப்படி விளையாடுவது?

  • Play Store அல்லது கீழே குறிப்பிட்ட தரவுத் தளத்தைப் பயன்படுத்தி Truck Master : India Simulator விளையாட்டை பதிவிறக்கம் செய்யவும்.
  • இணைய இணைப்பை சரிபார்க்க வேண்டும்.
  • இந்த விளையாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தி அந்த ட்ரக்கை வடிவமைத்து விருப்பமான நகரத்தை தேர்வு செய்து பயணத்தை தொடங்கலாம்.
  • இதில் ,
      • Master Level
      • Permit
      • Truck
      • Driver
      • PayLoad போன்ற தரவுகள் விளையாட்டில் அடுத்தடுத்த சிறப்பான பயன்பாட்டிற்கு வழிகாட்டும்.

விளையாட்டின் தளத்தைப்  பற்றிய தகவல்கள்:-

  • Version    :    2024.12.4
  • Download Size   :     345 MB
  • Required OS     :    Android 7.0 and Up
தரவுத்தளம்:-

https://play.google.com/store/apps/details?id=com.highbrowinteractive.truck.masters.india.highway.driving.simulator.game

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *