Electricity Bill ஐ Online மூலம் கட்டினாலும் அதற்கான Receipt ஐ Online லயே எவ்வாறு பெறுவது? இப்போ தெரிஞ்சுக்கலாம்…| Tricks Tamizha

Electricity Bill ஐ Online மூலம் கட்டினாலும் அதற்கான Receipt ஐ Online லயே எவ்வாறு பெறுவது? இப்போ தெரிஞ்சுக்கலாம்…| Tricks Tamizha

தமிழ்நாட்டிற்கான மின்சாரத்தை விநியோக்கிக்க கூடிய ஒரு பொதுத் துறை நிறுவனமாக TNPDCL ( Tamil Nadu Power Distribution Corporation Limited ) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் நடைமுறையில் இருந்த TANGEDCO என்பதின் மறுசீரமைக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த TNPDCL-ஐ ஜூலை 2024 TANGEDCO-விடம் இருந்து தமிழ்நாட்டு அரசு  பிரித்து அறிவித்தது.

இந்த TNPDCL எனும் புதிய நடைமுறை மின்சார விநியோக கழகத்தின் வழியே கட்டணத்தை  பல வழிகளில் செலுத்த முடிகிறது. அவை,

  • TNPDCL ன் அதிகாரப்பூர்வ தளத்தில்
  • மின் சேவை மையங்களில்
  • வங்கிகள்
  • தபால் நிலையங்கள்
  • TNPDCL-ன் அலுவலகத்தில்  போன்ற வழிகள் ஆகும்.

இவ்வாறு கட்டணத் தொகையை செலுத்தி மின் வாரியத்தால் பெறப்பட்ட ரசீதை பல வழிகளுக்கு ஒரு இருப்பிட ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அவற்றில் சில,

  • மின்சாரக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று
  • வாடகை வீட்டின் ஒப்பந்தங்களுக்கு
  • வீட்டின் மீது வாங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் ஆதாரங்களில் ஒன்று
  • மின் கட்டண நிலுவைகளை சரிபார்க்க
  • பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகைக்கு கேட்கப்படும் ஆதாரங்களில் ஒன்று

போன்ற  பல பயன்பாடுகளுக்காக இந்த மின்சார கட்டண ரசீதை பயன்படுத்தலாம்.

அதற்கு முன் இந்த ரசீதின் நகலை அஞ்சல் மூலமாகவோ அல்லது TANGEDCO அலுவலகத்திற்குச் சென்றோ இந்த ரசீதைப் பெற்றுக் கொள்ள முடியும்.

TANDCL

இந்த நிறுவனத்தின் இணையதளப் பயன்பாட்டிற்காக ஒரு அதிகாரப்பூர்வ  தரவுத் தளத்தை உருவாக்கி அதன் மூலம் கீழ்கண்ட சேவைகளை வழங்கி வருகிறது.

  •  புதிய மின்சார இணைப்பிற்கான விண்ணப்பத்தை  சமர்பிக்க
  • நுகர்வோர் இந்த தளத்தின் வழியே அவர்களுக்கான கட்டணத்தை செலுத்த
  • அத்தளத்தின் USRP என்ற போர்டல் வழியே புதிதாக சூரிய கூரை அமைப்பதற்கு  விண்ணப்பிக்க
  • பயன்படுத்திய மின்சாரத்திற்கு செலுத்திய தொகைக்கான ரசீதை பெற
  • புகார் தெரிவிக்க
  • பில்லின் நிலையை அறிய
  • HT புதிய சேவை இணைப்பு
  • அதனுடன் கீழுள்ள தகவல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.
      1. பிரதமரின் சூரிய சக்தி வீடு/ இலவச மின்சாரத் திட்டம் பற்றிய தகவல்கள்
      2. விண்ணப்பக் கட்டணங்களை கணக்கிட
      3. நுகர்வோரின் புகார்களைஅளிக்கவும்
      4. நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் பற்றிய தகவல்கள்
      5. திட்டமிடப்பட்ட மின் வெட்டு அறிவிப்பு நாட்கள் பற்றி
      6. கட்டணத் தகவல்கள்

போன்ற பயன்பாடுகளைத் இத்தளத்தின் வழியே மேற்கொள்ள முடியும்.

அந்த வகையில் ஏற்கெனவே Online மூலமாகவோ அல்லது G-Pay, Debit / Credit Card போன்ற UPI பண பரிவர்த்தனைகள் மூலமாகவோ  செலுத்திய மின்சார கட்டணத்திற்கான ரசீதைப் பெற, செய்ய வேண்டிய வழிமுறைகளை விளக்கவே இப்பதிவு.

TNPDCL ல் ரசீதைப் பெற  பின்பற்ற வேண்டியவை :-

  1. கீழே குறிப்பிட்ட இணையதளத்தை தேர்வு செய்தால் அதன் புதிய தளமான TNPDCL என்ற பதிய தளத்திற்கு அழைத்துச் செல்லும்.
  2. அதைத் தொடர்ந்து Billing Information  என்ற தலைப்புக்கு கீழுள்ளவற்றில் e- Receipts for Online Payment என்பதை Click செய்ய வேண்டும்.
  3. அதில் Consumer Number, Receipt number, கட்டணம் செலுத்தப்பட்ட தேதி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
    • ஒரு வேளை Receipt Number மற்றும் தேதி தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அதனைத் தெரிந்து கொள்ள இதற்கு முந்தையப் பக்கத்தில் உள்ள Bill Status என்பதைத் தேர்ந்தெடுத்து வேண்டும்.
    • அதில் உங்களின் மின் இணைப்பு எண் ( Region number- consumer number ) மற்றும் மின் வாரியத்தில் பதிவு செய்த கைப்பேசி எண் போன்ற தகவல்களை உள்ளிட்டு Captcha எண்ணை உள்ளிட்டு Submit செய்து கொள்ள வேண்டும்.
    • இப்பொழுது இந்த தகவல்களுடன் ஒத்த மின் இணைப்புப் பற்றிய அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
    • அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளலாம். அதில் இதுவரை online மூலம் செலுத்திய கட்டணத்தைப் பற்றிய வரலாறு அனைத்தும்  அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும்.
    • அதில் தேவையான தேதியில் செலுத்திய கட்டணத்திற்கான Receipt  எண்ணை  மற்றும் தேதியை குறித்து வைத்து அதனை பயன்படுத்தலாம்.
  • மேலே குறிப்பிட்ட படி தகவல்களை உள்ளிட்டதும் Receipt ஐப் பதிவிறக்கம் செய்யத் தேவையான தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
    1. Download In Tamil
    2. Download In English
  • இந்த தேர்வுகளின் மூலம் நமக்கு தேவையான Receipt , தேவையான மொழியில்  தியையில் தோன்றும். அதனை பயன்படுத்தி Print செய்து கொள்ள முடியும்.
  • (குறிப்பு: இந்த செயல்பாடுகள் இணைய வழி மூலம் கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.)

தரவுத்தளம் :- https://www.tnpdcl.org

  • மின்சாரம் தொடர்பான அனைத்து வித புகார்களை தெரிவிக்கவும் 94987 94987 என்ற 24  மணி நேர இலவச உதவி எண்ணைப் பயன்படுத்தலாம்,
  • வாடிக்கையாளர் சேவை எண்:  1912
  • பொதுவான உதவிகளுக்கு   :   +91 44 2852 0131, 044-28525713

இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு https://trickstamizha.com என்ற இணையதளத்தைப் பின் தொடரவும்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *