MS Word ஐப் பயன்படுத்தி BILL BOOK உருவாக்குவது எப்படி? அதற்கான Tricks and Methods உங்களுக்காக!…| Tricks Tamizha

MS Word ஐப் பயன்படுத்தி BILL BOOK உருவாக்குவது எப்படி? அதற்கான Tricks and Methods உங்களுக்காக!…| Tricks Tamizha

Microsoft :-

கணிணியின் மென்பொருள் மற்றும் வன்பொருளை உருவாக்கி சந்தைப்படுத்தும்  அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம்.இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் பில் கேட்ஸ் மற்றும் பால் ஏலென் போன்றோர்.  Micro Computer மற்றும் Software என்பதின் இணைவுகளையே Microsoft என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிறுவனத்தால் தற்பொழுது அதிகம் விற்பனையாகக் கூடியது :- Windows, Office, Xbox, Bing, Azure, Cloud Computing, Video Games, Computer, gaming Hardware

மைக்ரோசாஃப்டின் தொகுப்புகள்: 
  • Word
  • Excel
  • Outlook
  • Access
  • PowerPoint
  • Teams
  • Visio

 MS-Word :-

  • மைக்ரோ சாஃப்ட்  நிறுவனத்தால்  1983 ல் உருவாக்கப்பட்ட ஒரு உரை ஆவணம் தயாரிக்கும் மென்பொருள் தான் இந்த MS -WORD. இதனை சார்லஸ் சிமோனி மற்றும் ரிச்சர்ட் ப்ரோடி என்பவர்களால் உருவாக்கப்பட்டது.
  • இந்த மென்பொருளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளுக்கு மட்டுமின்றி நமது அன்றாட வேலைகளுக்குத் தேவையான  பயன்பாடுகளையும் செய்து முடிக்க  உதவும் WORD ன் சில பயனுள்ள தகவல்களை கற்றுத் தரவே இந்தப் பதிவு.
  • அந்த வகையில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி  செய்ய இயலும் சில பயன்பாடுகள்,
    • ஆவணத்தை உருவாக்குவது
    • உரையை எழுதி சேமித்து வைப்பது
    • புத்தகங்கள் உருவாக்க பயன்படும் ஒரு கருவியாக
    • பழைய ஆவணங்களை படிக்க புதுப்பிக்க திருத்த
    • படங்களுடன் கூடிய உரை ஆவணத்தை உருவாக்க
    • அட்டவணைகளைக் கொண்ட உரை ஆவணத்தை உருவாக்க
    • வலைப்பக்கங்களை உருவாக்க
    • கடிதங்களை சமர்பிக்க
    • பில்களை உருவாக்க
    • அடையாள அட்டைகள் உருவாக்க
  • தனிப்பயன்பாடு, கல்வி, வணிகம் போன்ற இன்னும் பல பயன்பாடுகளுக்காக இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.   மேலும் இதில் உரையை உருவாக்குவதுடன் அதை திருத்தி எழுதவும், அகராதி பிழைகளின்றி உருவாக்கவும் ,வடிவமைக்கவும், அட்டவணை, வரைபடங்கள், சூத்திரங்களைப் பயன்படுத்தி உரைகளை உருவாக்கவும் முடிகிறது.

HOW TO PREPARE A BILL BOOK IN MS-WORD ?

  • Microsoft – Word ஐப் பயன்படுத்தி வணிகப் பயன்பாட்டிற்கு தேவையான ஒரு Bill புத்தகத்தை உருவாக்கி நமது சொந்த தொழிலுக்கோ அல்லது அதனைப் பயன்படுத்தி சுய தொழில் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அதற்காக Microsoft  word ஐ உள்ளக்கிய Microsoft 365 ஐ இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் MS- Word ஐ திறந்ததும் முதலில் அந்த பக்கத்தை வடிவமைக்க வேண்டும். அதற்காக Tool Bar ல் வழங்கப்பட்டுள்ள பயன்பாடுகளை பின்வருமாறு செயல்படுத்தவும்.
    1. அதற்கு Page Layout என்ற Tab ற்கு கீழே Margin என்பதில் பக்கத்தின் ஓரத்தை வடிவமைக்கும்  பல தேர்வுகளில் Narrow என்பதை தேர்வு செய்ய வேண்டும்.                             
    2.  அட்டவணைகளை உருவாக்க :- Insert Tab ற்குள் உள்ள Table என்ற தேர்வுக்குள் இருக்கும் Insert Table என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
    3. அவற்றில் அட்டவணையை வடிவமைக்க தேவையான எளிய பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும்.  அதில் Number of Rows, Number Of Columns போன்றவற்றை பயன்படுத்தி வேண்டிய அட்டவணையை எண்களின் மூலம் இங்கு உறுதிப்படுத்தவும். இறுதியாக Ok வைத் தேர்ந்தெடுக்கவும்.                                                                         
    4. இப்பொழுது குறிப்பிட்ட Rows மற்றும் Column ன் எண்ணிக்கைக்கு ஏற்ப அட்டவணை திரையில் தோன்றும்.
    5. இந்த அட்டவணையில் Cursor ஐப் பயன்படுத்தி நம் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் அளவை விரித்தோ அல்லது சுருக்கியோ அமைக்கலாம்.
  • Bill Book ன் வண்ணத்தை அமைக்க :- Design –> Page Colour  என்பதைத் தேர்வு செய்து அதில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும் வண்ணங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
  • அட்டவணை ஓரக்கோடுகளை Design –> Page Border என்ற தேர்வுக்குள் சென்று அதில் வழங்கப்பட்டுள்ள தேர்வுகளைக் கொண்டு கோடுகளை வடிவமைக்கலாம்.
  • தலைப்பை உருவாக்க :- இந்த Bill Book எந்த நிறுவனத்திற்காக உருவாக்க இருக்கிறோமோ அதற்கான தகவல்களை எழுதுவதற்கு தேவையான இடத்தை அமைக்க இந்த அட்டவணையின் முதல் Row வை காலி செய்ய வேண்டும்.
  • அதற்கு எங்கு தலைப்பை எழுத வேண்டுமோ அந்த இடங்களை Cursor ன் உதவியால் தேர்வு செய்த பின் அதன் மீது வைத்து  Right Click செய்து Merge Cells என்பதை தேர்வு செய்தால் அந்த Row வில் உள்ள Cell இணைந்து ஒரே செல்லாக மாறிவிடும்.
  •  இந்த இடத்தில் நிறுவனத்தின் பெயர், கைப்பேசி எண், முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
  • Serial Number, தேதி, வாடிக்கையாளரின் பெயர், முகவரி போன்ற  சில தகவல்களை குறிப்பிட அடுத்த Row வையும் Select செய்து Right Click கொடுத்து Merge Cell என்பதை தேர்வு செய்தால் அந்த Row விற்குள் ஒரு இடைவெளியை உருவாக்கலாம்.                                           
  • முதல் Rows ல் கீழே குறிப்படும் தகவல்களை , S.No, Particular, Ouantity, Rate, Amount போன்ற தகவல்களை எழுத தேவையான இடத்தை அமைக்கவும்.
  • இதே போல் அடுத்தடுத்த தகவல்களை படத்தில் உள்ளது போல் வடிவமைத்துக் கொள்ளலாம்.
  • தேவையான குறிப்புகளை எழுதும் வண்ணம் உருவாக்கத்தை முடித்ததும் அதன் வரிசைகளை மாற்ற அதனை தேர்வு செய்து Home Tab உள்ள Line Spacing Icon ஐப் பயன்படுத்தி  1, 1.15, 1.5, 2, 2.5 போன்ற இடைவெளிகளில் இதற்கு தகுந்ததைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு  மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நமக்குத் தேவையான Bill Book ஐ நமக்கு பிடித்தாற் போல் எளிமையாக உருவாக்க முடியும்.

மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு https://trickstamizha.com ஐப் பின்தொடரவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *