வீட்டில் இருந்த படியே ZOMATO ல் Order செய்து விதவிதமாக சாப்பிடலாம். Come and Let’s Try the Tasty Food…| Tricks Tamizha

வீட்டில் இருந்த படியே ZOMATO ல் Order செய்து விதவிதமாக சாப்பிடலாம். Come and Let’s Try the Tasty Food…| Tricks Tamizha

” பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும் , மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது” எனும் ஒரு கவிஞரின் கற்பனைக்கிணங்க  இப்பொழுதெல்லாம் சமைக்க தெரியாதவர்களுக்கும் வேலைக்குச் செல்வோருக்கும்  பசி ஏற்படும் பொழுது சட்டென்று நினைவிற்கு வருவது உணவகங்கள் தான்.

அதிலும் இந்த அவசர உலகில் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைத்தால் இன்னும் வசதி தான்.

இதனை தான் தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா போன்றோர் 2008 ல் தனது வியாபார யுக்தி ஆக்கிக்கொண்டனர். அவர்கள் முதலில் ”Foodiebay” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டு உணவகத்தின் பட்டியல் மற்றும் இவற்றைப் பரிந்துறை செய்யும் ஒரு இணையதள போர்டலாக செயல்பட்டு வந்தனர்.  அதன் பின் 2010 ல் தான் Zomato என பெயர் மாற்றம் செய்தனர்.

அது மட்டுமல்லாமல் 2020 ல் நாம் சந்தித்த கொரோனா தொற்றுக் காலத்தில் மேலும் ஒரு வாய்ப்பாக அனைவரும் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் செல்ல முடியாத்தால் Zomato நிறுவனம் மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை Door Delivery செய்து மக்கள் மத்தியில் கூடுதல் பிரபலமானது.

இவ்வாறு நம்மிடையே உலாவிவரும் இந்த Zomato தளத்தில் நமக்குப் பிடித்த மிக ருசியான உணவுகளை வீட்டில் இருந்த படியே விருப்பமான உணவகத்தில் எவ்வாறு Order செய்து சாப்பிடுவது  என்பதைப் பற்றிய தகவல்களைத் தான் இப்பதிவில் பார்க்க உள்ளோம்.

How to Order Your Food In Zomato App:

இப்பொழுது Zomato செயலியில் உணவை Order செய்வதைப் பற்றிய முறைகளை வரிசையாக காணலாம்.

  • கொடுக்கப்பட்ட தரவுத் தளத்தின் வழியே நுழைந்ததும் Location ஐ Allow செய்ததும் கைப்பேசி எண்ணை உள்ளிட்டுContinue கொடுத்து Login செய்து கொள்ள வேண்டும்.
  • பின் கைப்பேசிக்கு அனுப்படும் OTP எண்ணை உள்ளிட்டு செயலைத் தொடரவும்.
  • உங்களின் தற்போதைய இருப்பிடத்தின் தகவலுடன் முகப்பு பக்கம் திரையிடப் படும்.
  • இந்த செயலியின் மூலம் மூன்று சேவைகளை  பயன்படுத்திக்கொள்ள முடியும். அவை ,
      • Delivery(உணவுகளை Order செய்ய)
      • Dinning (விருப்பமான உணவகத்தில் Table Book செய்து கொள்ள)
      • Money (இந்த தளத்தின் கணக்கில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள)

தேர்வு செய்ய உதவும் வழிமுறைகள்:

    1. இப்பொழுது இந்தத் தேர்வுகளில் இருந்து உணவை Order செய்வதற்காக Delivery என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
    2. மேலே இருக்கக்கூடிய தேடுதல் தளத்தில் (Search Bar) விருப்பமான உணவைத் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது கீழே வழங்கப்பட்ட பரிந்துறைக்கப்பட்ட  உணவுப் பட்டியலில் இருந்தும் கூட விருப்பமான உணவைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
    3. மக்கள் அதிகம் விரும்பி வாங்கக்கூடிய உணவுகள் மற்றும் அவை கிடைக்கும் அனைத்துக் கடைகளின் பட்டியல் , உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள உணவகங்களின் பட்டியல் போன்ற செயல்களில் இருந்து கூட விருப்பமான உணவைத் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு நமக்குப் பிடித்த உணவை தேர்வு செய்வதற்கு பல வழிகளில் இத்தளத்தின் வழியே வழிகாட்டும் வகையில் இத்தளத்தை வடிவமைத்துள்ளனர்.
  • இதை Order செய்ய இந்த தேர்வுகளில் இருந்து ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி அதன் உணவகதையும் குறிப்பிட்டு Order செயிதால் அந்த உணவின் புகைப்படம், விலை, அதற்காக மக்கள் வழங்கியுள்ள மதிப்பீடு, இந்த உணவு உங்கள் கைக்கு வந்து சேரும் தோராயமான நேரம் போன்ற அனைத்து தகவல்களும் திரையிடப்படும்.
  • தொலைவு காரணமாக எதாவது கருத்து இருந்தால் அவை message மூலம் தெரிவிக்கப்பட்டுவிடும்.
  • நீங்கள் தேர்வு செய்த உணவை உறுதி செய்ய அதன் புகைப்படத்திற்கு கீழே உள்ள ADD என்பதை Click செய்ய வேண்டும்.
  • அதனோடு சேர்த்து மக்கள் வாங்க விரும்பும் உணவுகளின் பரிந்துறைகளையும் வழங்கி இருப்பர்.
  • பின் Add Item எனபதை தேர்வு செய்ததும்  “1Item Added Congratulation your order is free” என்ற செய்தி திரையிடப்படும். இந்த குறுஞ்செய்தியே தொட்டதும் இதற்கான பணம் செலுத்தும் தளத்தினை சென்றடையும்.
  • இங்கு தேர்வு செய்யப்பட்ட உணவின் விவரம், கைப்பேசி எண், தறபோதைய முகவரி யுடன் பணம் செலுத்துவதற்கான தேர்வுகளும் வழங்கப்பட்டிருக்கும் . இதில் ஏதாவது ஒரு வழிகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்த வேண்டும்.
  • இறுதியாக ” Place Order “என்பதை தேர்வு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது Order செய்த உணவு கைக்கு வரும் வரை உணவை விநியோகிப்பவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும வகையில்  Trackers பயன்பாடும் வழங்கப்பட்டிருக்கும்.

தரவுத்தளம்:

https://play.google.com/store/apps/details?id=com.application.zomato

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *