வரி பற்றிய அடிப்படைப் புரிதல்களுக்காக;
நம் இந்திய நாட்டில் உள்ள அனைத்துக் குடிமகன்களுக்கும் இருக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்று வரி செலுத்துதல். அரசாங்கமானது இவ்வரிப்பணத்தின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவற்றின் கட்டமைப்புகளுக்கும் செலவலிக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சியோடு குடிமக்களின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைகிறது. இவை நாட்டின் வருவாயாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் இவை மூன்று வகை வருவாய்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
- வரி வருவாய்
- வரி இல்லாத வருவாய்
- மானியங்கள்
இதில் வரிவருவாயானது இரன்டு அங்கங்களைக் கொண்டுள்ளது.
- வீட்டுவரி/சொத்து வரி
- தொழில் வரி
இந்த இவ்வரிகளைச் செலுத்த இதுவரை மக்கள் அதற்கான அலுவலகங்களுக்குச் சென்று பணத்தைச் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்பொழுது தமிழக அரசானது இதனை மேலும் எளிமையாக்கும் பொருட்டு Vp Tax என்ற புதிய பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
VP வரி:
VP-Tax (Village Panchayat) – Tax— தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வரி மேலாண்மைக்கான Online Portal
2023 , செப்டம்பர் மாதம் தமிழக அரசால் வெளியிடப்பட்ட இந்த இணைய வழி சேவையின் மூலம் பல குறிப்பிட்ட வரி சேவைக் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்துள்ளது. மேலும் கிராமப் புறங்களின் அனைத்துப் பஞ்சாயத்துக்களிலும் POS (Point Of Sales) இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் மட்டுமே வரி வருவாயின் முக்கிய வரிகளை விதித்து அதனை வசூல் செய்யும் அதிகாரம் கொண்டது. அதற்கான வழிவகையாக
- Counter Collection
- POS
- Online Payment
போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த வரிகள் அரையாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையாகவோ வசூல் செய்யப்படுகிறது.
தரவுத்தளத்தில் உள்ள பயன்பாடுகள்:
இத்தரவுத் தளத்தில்,
- சொத்து வரி
- குடிநீர் வரி
- தொழில் வரி
- வரி அல்லாத
- வர்த்தக வரி போன்ற பயன்பாடுகளை செய்ய இயலும்.
வரி செலுத்தும் வழிமுறைகள்:
- கொடுக்கப்பட்டுள்ள தரவுத்தளத்தின் வழியே உள்நுழைந்ததும் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்தை அடையும்.
- அதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை
- உங்களின் நிலுவைத் தொகையைப் பார்க்க
- விரைவாக வரி செலுத்த
- வரி செலுத்திய விவரங்களை பார்க்க
- இதனைப் பயன்படுத்தி வரி செலுத்த முதலில் வரி விதிப்பு எண் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
- அதற்கு முதலில் ” உங்கள் நிலுவைத் தொகையைப் பார்க்க “என்பதைத் தேர்வு செய்து அந்த பத்தியில் கேட்கப்பட்டுள்ள இருப்பிடத்திற்கான சரியான தகவல்களை உள்ளிடவும். பின்பு தேடுதல் பொத்தானை கிளிக் செய்யவும்.
- அதன் பின் மேலே குறிப்பிட்ட பஞ்சாயத்திற்கு உட்பட்ட வார்டுகளின் நபர்கள் அல்லது உங்கள் தகவல்களை ஒத்த நபர்களின் விவரங்கள் பட்டியலிடப்படும்.
- அதில் உங்களின் தகவல்கள் இருந்தால் அதன் வரி விதிப்பு எண்ணை குறித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்களின் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அலுவலகத்தை அடைந்தும் வரி விதிப்பு எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
- பின் மீண்டும் முதன்மைப் பக்கத்தை அடையவும். அதில் ” விரைவாக வரி செலுத்த” என்பதை தேர்வு செய்து உள் நுழையவும்.
- அதன் பின் Pay Tax என்ற பொத்தானை கிளிக் செய்யவும். திரையிடப்படும் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிடவும். அதில் வரிவகையில் சொத்து வரியைத் தேர்வு செய்ய வேண்டும். பின் குறித்து வைக்கப்பட்ட வரி விதிப்பு எண்ணை உள்ளிடவும். அடுத்து தேடுதல் பொத்தானை கிளிக் செய்யவும்.
- அதில் வங்கிப் பயன்பாட்டுடன் கூடிய வரித் தொகை செலுத்தும் பக்கம் திரையிடப்படும். அதனைப் பயன்படுத்தி வங்கித்தகவல்களை உள்ளிட்டு வரியைச் செலுத்தலாம்.
- பணத்தை செலுத்தியதும் SUCCESS என்ற தகவல் பச்சை வண்ணத்தில் திரையிடப்படும்.
- இவ்வாறு இந்தாண்டிற்கான வரி விதிப்புக் கட்டணத்தை செலுத்தி முடித்ததற்குச் சான்றாக அதன் பிரதியை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அதற்கு Download Receipt என்ற தேர்வைப் பயன்படுத்தி அதற்கான பிரதியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப்பிரதியானது எதிர்கால தேவைகளுக்கு ஒரு அடையாளச் சான்றாகவும் எடுத்துக் கொள்ளப்பயன்படும்.
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்:
https://vptax.tnrd.tn.gov.in
E-Mail Id : [email protected]
உதவி எண்: 98849 24299