தலைப்பின் அறிமுகம்:-
- தற்போதைய நவீனம் நிறைந்த வாழ்க்கையில் பல நேரங்களில் நம் மூலையை விட அதிகம் பயன்படுத்துவது நம் கையில் இருக்கும் மொபைல் ஃபோனை தான்.
- அதிலும் பழைய நினைவுகளை நியாபகத்தில் வைத்துக் கொள்வதில் மனித மூலையை விட தற்போதைய தொழில் நுட்பங்கள் பல படி முன்னேறியே உள்ளன.
- பல தகவல்களை ஒரே நேரத்தில் தன்னுள்ளே சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு உண்டு.
- இத்தகைய வசதிகளை பயன்படுத்தி வரும் நாம் அந்த சூழலுக்குள் பொருந்தி வாழவும் பழகிவிட்டோம்.
- முன்பெல்லாம் ஒருவரின் தகவல்களை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டிருந்த நாம் இப்பொழுது அதை சுலபமாக நம் மொபைல் ஃபோனில் சேமித்து வைத்துக் கொள்கிறோம்.
- Camera மூலம் புகைப்படம் எடுத்து அதன் நகலைசேகரித்து வைத்துக் கொண்டிருந்த காலம் போய் தற்பொழுது நினைத்த நேரத்தில் பிடித்ததை எல்லாம் Photos, Videos எடுத்து பார்த்துக் கொள்கிறோம்.
- ஆனால் என்னதான் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவிகரமானதாக இருந்தாலும் அதிலும் சில தவறுகளின் காரணமாக அதனை இழக்கவும் நேரிடும்.
- அவ்வாறு நம் Mobile Phone களின் Memory-களில் இருந்து தவறுதலாக Delete செய்யப்பட்ட Photos, Videos களை எவ்வாறு திரும்பவும் மீட்பது என்பதைப் பற்றிய தகவல்களையே இப்பதிவில் வாசிக்க உள்ளோம்.
How To Recover Deleted Photos and Videos? :-
- நம் மொபைல் ஃபோனில் அழைக்கப்பட்ட தேவையான புகைப்படங்களை மீட்க பல வழிகளை முயற்சி செய்து பார்த்திருப்போம். அல்லது Play Store ல் இருக்கும் பல தெரியாத தளங்களை பதிவிறக்கம் செய்து அதனை மீட்கவும் முயற்சி செய்திருப்போம்.
- ஆனால் இவைகளைக் கையாளாமலேயே கீழ்காணும் வழிகளைப் பயன்படுத்தி Photos மற்றும் Videos ஐ மீட்டு எடுக்க முடியும்.
- உங்கள் Mobile Phone ல் நீங்கள் பயன்படுத்தி வரும் ஏதாவதொரு File Manager ல் நுழைந்ததும் அதன் Setting தேர்வுக்குள் இருக்கும் “Show Hidden Files” என்பதை தேர்ந்தெடுத்து On செய்து கொள்ள வேண்டும்.
- பின் Internal Storage க்குள் இருக்கும் DCIM (Digital Camera Images) ஐத் தேர்ந்தெடுத்தால் அதில் உங்கள் Mobile ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதன் தனித்தனியான கோப்புறைகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
- (குறிப்பு: DCIM – என்பது Mobile ன் Camera மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் Screenshot களை சேகரித்து வைக்கும் கோப்புறை ஆகும்.)
- அதில் புதிதாக “.thumbnail” என்ற கோப்புறையும் அடங்கும். அதனைத் தேர்வு செய்தால் அதற்குள் உங்களின் அனைத்து அழிக்கப்பட்ட Photos and Videos களும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் .
- அதில் வரும் ஒவ்வொரு Photos க்கும் அருகில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதால் வரும் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டு அதனை புதிப்பிக்கவோ, நிரந்தரமாக அழிக்கவோ அல்லது மற்றவருக்கு பகிரவோ முடிகிறது.
இவ்வாறு நம் Mobile Phone ல் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
மாற்று தேர்வு:-
- மேற்கண்ட பயன்பாடுகள் உங்கள் Photos மற்றும் videos களை மீட்க போதுமானதாக இல்லையெனில் இதே போன்று Backup மற்றும் Restores ஐப் பயன்படுத்தியும் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க முடியும்.
- அதைப் பற்றிய தகவல்களை இதைப் போன்ற மற்றுமொரு பதிப்பில் காணலாம்.