உங்க Facebook Password மறந்துபோச்சா? புது Password மாத்துறது எப்படினு இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க!…| Tricks Tamizha

உங்க Facebook Password மறந்துபோச்சா? புது Password மாத்துறது எப்படினு இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க!…| Tricks Tamizha

Facebook பற்றிய சில தகவல்கள்:-

  • 2004 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த Mark Zuckerberg  என்ற மாணவன் தொடங்கிய  ஒரு இணைய வழி சமூக வலையமைப்பே  இந்த Facebook என்னும் நிறுவனத்தின் ஆரம்பம்.
  • மிக குறுகிய காலத்திலேயே மக்களின் பயன்பாட்டின் முன்னனி இடத்தைப் பிடித்த இந்த Facebook எனப்படும்  முகநூல் செயலியை, 13 வயதிற்கு மேலுள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை முகம் தெரிந்த அல்லது தெரியாதவர்களிடம் கூட தங்கள் கருத்தை தெரிவிக்கும் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு தளமாக மாற்றிக் கொண்டு உள்ளனர்.
  • அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் இந்த Facebook பயனாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
  • இந்த ஆண்டின் புள்ளிவிவரத்தின் படி 3.07 பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களையும், 2.11 பில்லியன் தினசரி செயலில் உள்ள பயனர்களையும் கொண்டுள்ளது.
  • இவ்வாறு மக்களின் இடையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய இந்த முகநூல் பக்கத்தில் நம் கடவுச்சொல்லை பாதுகாப்பான முறையில் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
  • ஒரு வேலை அந்த கடவுச் சொல்லை மறந்துவிட்டால்  இந்தத் தளத்தில் எவ்வாறு அதை புதுப்பித்து புதிய கடவுச் சொல்லை மாற்றி அமைப்பது என்பதைப் பற்றிய தகவல்களுடன் இந்தப் பதிவை வழங்கியுள்ளோம்.

புதிய Password ஐ அமைப்பதற்கான வழிமுறைகள்:-

  1. நீங்கள் உங்கள் மோபைலில் பயன்படுத்தி வரும் Facebook அக்கவுண்ட்டின் முகப்பு பக்கத்தின் இடது புறத்தில் அமைப்பை மாற்றும் வசதிகளுடன் கூடிய மூன்று கோடுகளைக் கொண்ட தேர்வை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில் உங்களின்  Profile ஐ திறந்தகொள்ள வேண்டும்.
  2. அந்தப் பக்கத்தின் கீழே உள்ள Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின் அதில் உள்ள Password and Security எனபதை Click செய்து உள்நுழைய வேண்டும். இதில் Login என்பதற்குக் கீழுள்ள Change Password என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  4. அதனைத் தொடர்ந்து Change Password என்ற கடவுச் சொல்லை மாற்றியமைக்கும் பக்கத்தை திரையிட்டுக் காட்டும்.
  5. பழைய கடவுச் சொல்லை அறிந்திருந்த பட்சத்தில் அதனை உள்ளிட்டு புதிய கடவுச் சொல்லை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
  6. அவ்வாறு பழைய கடவுச் சொல் இல்லாத நிலையில் அதில் உள்ள Forgot Password? என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  7. இப்பொழுது இந்தத் தளத்தில் புதிய  கடவுச் சொல்லை மாற்றி அமைக்க பயன்படுத்துபவரின் அடையாளத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில்
      • Send Code Via email
      • Send Code Via SMS

போன்ற ஏதாவதொரு தேர்வினைப் பயன்படுத்தி Continue ஐ Click செய்தால், இந்த முகநூல் கணக்கை தொடங்கும் பொழுது பதிவிட்டிருந்த Mobile எண்ணிற்கோ அல்லது e-mail முகவரிக்கோ தனித்துவமான 6 இலக்க எண் அனுப்பப்படும்.

8.  Enter the 6-Digit Code என்பதற்கு கீழே இந்த எண்ணை உள்ளிட்டு Continue ஐ Click செய்யவும்.

9. இதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் Enter the New Password என்பதற்குக் கீழ் உங்களுக்கு மட்டுமே தெரிந்த தனித்துவமான, குறைந்தது 6 அல்லது அதற்கு மேல் உள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி Continue செய்து கொள்ளவும்.

இந்த கணக்கை மற்ற எந்த நபர்களும் நம் அனுமதியின்றி கையாள்வதைத் தடுக்க:-

      • மேற்கண்ட அனைத்து செயல்களையும் முடித்த பிறகு திரையில் ” Log Out Other Devices?” என்ற பக்கம் தோன்றும். அதில் 2 தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
        1.  Review Other Devices
        2. Stay Logged in
      • இவற்றில் Review Other Devices என்ற தேர்வின் மூலம் இந்த கணக்கை வேறு ஏதாவது Device ன் வழியே செயல்பட்டுக் கொண்டுள்ளதா என்பதை அறிந்து அதனை நீக்கிவிட வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.
      • அதற்கு Review Other Devices ஐ தேர்ந்தெடுத்து Continue ஐ Click செய்த பின் இந்த கணக்குகளைப் பயன்படுத்தும் Device களின் பெயர்கள், அவை செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடம் மற்றும் கடைசியாக பயன்படுத்திய நேரம் போன்ற தகவல்கள்  பட்டியலிட்டுக் காட்டப்பட்டிருக்கும்.
      • இவற்றை Logout செய்வதற்கு Log Out Of All Sessions என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
      • அடுத்த பக்கத்தில் Log Out என்பதைக் Click செய்யவும்.
      • இப்பொழுது மற்ற தளங்களில் இந்த கணக்கை பயன்படுத்துவதை தவிர்க்க்கபட்டிருக்கும்.

10. இவ்வாறு செயல்பாடுகள் தேவையில்லை எனில் நேரடியாக Stay Logged In என்பதைத் தேர்ந்தெடுத்து மேற்கண்ட செயல்பாடுகளை நிறைவுசெய்து கொள்ளலாம்.

11. இதனை சரிபார்க்க  இந்த கணக்கை Logout செய்து மீண்டும் புதிய Password ஐ உள்ளிட்டு முகநூலை திறந்து பயன்படுத்த தொடங்கலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *