G-Pay யில் தெரியாமல் வேறு எண்ணிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? அந்த பணத்தை திரும்ப பெற என்ன வழி? வாங்க நாங்க சொல்றோம்…| Tricks Tamizha

G-Pay யில் தெரியாமல் வேறு எண்ணிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? அந்த பணத்தை திரும்ப பெற என்ன வழி? வாங்க நாங்க சொல்றோம்…| Tricks Tamizha

தற்போதைய நவீன சூழலில் பணப்பரிமாற்றம் முதல் பண்டப் பரிமாற்றம் வரை அனைத்தும் இணையதளத்தை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

அவ்வாறு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் UPI செயலிகளாக PhonePe, Google Pay, Paytm, Navi, CRED, Amazon Pay, Whatsapp Pay, BHIM, Mobikwik போன்றவைகள் பயன்பாட்டில் உள்ளன.

UPI- Unified Payments Interface :- 

இதன் தமிழாக்கம் “ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம்” என்பதாகும். அதாவது பல வங்கிக் கணக்குகளை ஒற்றை மொபைல் பயன்பாட்டின் கீழ் கொண்டு வரும் மற்றும் பல வங்கிகளின் அம்சங்களை தடையின்றி செயல்படுத்தவும் பயன்படும் ஒரு மொபைல் வனிகக் கொடுப்பணவு  செயலி ஆகும்.

இதில் வங்கிகள், வாடிக்கையாளர்கள்  மற்றும் வணிகர்கள் போன்றோரின் நேரடிப் பங்களிப்பை பெற்றிருக்கும்.

இதன் மூலம் உடனடிப் பரிவர்த்தனையுடன் 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதால் அனைத்து வித கட்டணங்களை செலுத்த சிறந்த தேர்வாக உள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றிற்கு ரூ. 25,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பரிமாற்றத்திற்கான வரையறைகளை நிர்ணயித்துள்ளனர்.

ஆனால் ஒரே நாளில் 20 பரிவர்தனைகளுக்கு மேல் செய்ய முடியாது. இவ்வாறு உள்ள UPI களில் சிறந்த செயலிகளில் ஒன்றான Google Pay வைப் பற்றி இனி வாசிக்கலாம்.

Google Pay பற்றிய அறிமுகம்:-

இது Google நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஒரு மொபைல் கட்டண செயலி ஆகும். இந்த செயலியானது 2011ல்  துவங்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து பண பரிவர்தனைகளையும் மொபைல் மூலமே செய்து முடிக்க முடிகிறது.

தொலைபேசி மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மற்றும் கைக் கணிணி மூலமும் பணப்பரிவர்த்தனை செய்யக்கூடிய இந்த தளத்தை  இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளி்ல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடக்க வெளியீடு Android Pay(செப்டம்பர்11, 2015 ) மற்றும் Google Pay (அக்டோபர் 23, 2017) ஆகும். play Store வழியாக பதிவிறக்கம் செய்யும் இந்தளத்தை ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் பயனர்களுக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தளத்தின் வழியே  வங்கிக்கு செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி நேரடியாக பணம் செலுத்தவும், பெறவும், செலுத்திய பணத்தை சரிபார்கவும் முடிகிறது.

இச்சூழலில் தவறுதலாக, நாம் அனுப்ப வேண்டிய எண்ணிற்கு பதிலாக வேறு எண்ணிற்கு பணத்தை அனுப்பி விட்டால் எவ்வாறு அதனை எதிர்கொள்வது, மற்றும் அந்தப் பணத்தை திரும்ப மீட்பது என்பதைப் பற்றிய தகவல்களே இந்த பதிவு.

புகார் தெரிவிக்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:

  1. G-Pay மூலம் தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் முதலில் அந்த பரிவர்தனையை உங்கள் Mobile ல் Screen Shot
  2. உங்கள் வங்கிக் கணக்கின் பரிவர்தனைப் பற்றிய தகவல்கள்
  3. தேவைப்பட்டால் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததற்கான FIR பதிவு.

தவறுதலாக பணம் அனுப்பினால் செய்ய வேண்டிய வழிமுறைகள்:-

  • முதலில் பணம் அனுப்பிய UPI செயலியின் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
  • அல்லது உங்கள் கணக்கை மேற்கொள்ளும் வங்கியில் புகார் தெரிவிக்கலாம்.
  • இவ்வாறு புகார் தெரிவிப்பதன் மூலம் அதன் உண்மை நிலையை கண்டறிந்து 7 நாட்களுக்குள் பணம் திருப்பி அனுப்படும்.
  • ஒரு வேளை இதன் மூலமும் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் RBI ன் அதிகாரப்பூர்வ வளைத்தளத்தை கீழே குறிப்பிடும் வழிகளைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.
NPCI- National Payments Corporation Of India:-
  • இதன் அதிகாரப்பூர்வ தரவுத் தளமான https://www.npci.org.in வழியே உள்நுழையவும். அதன் முகப்புப் பக்கத்தில் பல பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும்.
  • அதில் What We Do? என்பதில் உள்ள UPI என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் அதற்கு கீழே உள்ள “Dispute Redressal Mechanism ” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதனைத் தொடர்ந்து Complaint என்பதற்குக் கீழே உள்ள Transaction என்பதைத் தேர்வு செய்து உள் நுழையவும்.
  • அதில் சில தகவல்களை உள்ளிட வேண்டும். அவை,
      1. பணப்பரிவர்தனை செய்யப்பட்ட வகை (உதா. Person to person or person to Merchant)
      2. Issues(பரிந்துறைக்கப்பட்ட சிக்கல்களில் ஏதாவது)
      3. Transaction ID
      4. வங்கிப் பெயர்
      5. UPI ID
      6. தொகை
      7. பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதி
      8. E-mail Address
      9. UPI ல் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்

போன்ற தகவல்களை உள்ளிட்டதும் இறுதியாக Choose File என்பதைப் பயன்படுத்தி பணப்பரிவர்தனைக்கு ஆதாரமாக  Mobile ல் எடுத்து வைக்கப்பட்ட Screen Shot ஐ பதிவேற்ற வேண்டும்.

  • இறுதியாக Submit என்பதை கிளிக் செய்தால் உங்கள் புகார் RBI இன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • அதனடிப்படையில் UPI உடன் இணைந்து உங்கள் கணக்கைத் தொடரும் வங்கி உங்கள் பணத்தை குறிப்பிட்ட கால வரையறைக்குள் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கும்.
  • 24 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப மீட்கப்படும்.
மற்ற வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ தரவுத் தளத்தை தெரிந்து கொள்ள:

https://www.npci.org.in/what-we-do/upi/3rd-party-apps

Toll Free Number:-

உதவி எண்:      1800 102 5624

 1800-419-0157

[email protected]

  • இதற்கு மாற்று வழியாக  புகார் தெறிவிக்க கீழே உள்ள எண்ணைப் பயன்படுத்தலாம்

18001201740

இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள https://trickstamizha.com  என்ற இணையதளத்தைப் பின் தொடரவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *