Amazon App-ல் வாங்கிய பொருட்களை எப்படி திருப்பி அனுப்புவது என தெரியவில்லையா? இப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

Amazon App-ல் வாங்கிய பொருட்களை எப்படி திருப்பி அனுப்புவது என தெரியவில்லையா? இப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…| Tricks Tamizha

ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் இணையதளப் பயன்பாட்டில் நம் மக்களின் விருப்பமான பொழுது போக்கான Shopping ஐயும் அடக்கிவிட்டோம். 5 ரூபாய் பொருட்களிலிருந்து  5 லட்சத்திற்கான பொருட்கள் வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்ள முடியும்.

இத்தகைய இணையதள வர்த்தகத்திற்கு முன்னோடியாக இருந்தவர் யுனைட்டெட் கிங்டம்மின் தொழில் முனைவோரான மைக்கேல் ஆல்டுரிச்(1979) என்பவரே.

அந்த வகையில் அமெரிக்காவின் பன்னாட்டு வணிக நிறுவனமான Amazon-ஐ 1995 ல் இருந்தே  இணையத்தில் Jeff Bezos  என்பவரால் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்நிறுவனம் ஒரு இணைய புத்தக விற்பனையாளராக இருந்தாலும் பிறகு பலதரப்பட்ட பொருட்களையும் விற்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் தற்பொழுது 500M  வாடிக்கையாளர்களுக்கும் மேல் பயன்படுத்தும் தளமாக Amazon உருவெடுத்துள்ளது.

இப்படிப்பட்ட தளத்தில் புதிதாக ஒருவர் ஒரு பொருட்களை வாங்க எண்ணினால் அதில் நமக்கு திருப்தி இல்லாமலும், பழுதடைந்திருந்தாலும் அந்த பொருட்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது பற்றிய தகவல்கள் பின்வருமாறு வாசிக்கலாம்

How To Cancel Order In Amazon :-

      • அதிகாரப்பூர்வ Amazon Appல் உள்நுழைந்ததும் அதில், You —-> Your Orders என்ற வழிகளில் உள்நுழையவும்.
      • அதில் இதுவரை நீங்கள் வாங்கிய பொருட்கள் , தவிர்த்த பொருட்கள் மற்றும் வாங்குவதற்காக Order செய்து உங்கள் கைக்கு வர ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் பொருட்கள் போன்ற அனைத்தும் திரையிடப்படும்.
      • அதில் View Items –என்பது நீங்கள் Ordered செய்த பொருட்களின் முழுத்தகவலையும் அறிந்து கொள்ளவும், Cancel Items— என்பது அந்த பொருளைத் தவிர்ப்பதற்காகவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
      • இவ்வாறு Cancel Items  க்குள் நுழைந்ததும் அதில் நீங்கள் Order செய்த பொருட்களை ஏன் திருப்பி அனுப்ப நினைக்கிறோம் என்கின்ற காரணத்தை உள்ளிட வேண்டும். ஆனால் இது கட்டாயம் அல்ல.
      •  பின் Cancel Checked Items என்ற பொத்தானை அழுத்தியதும் ” Your Order has been Cancelled Successfully” என்ற தகவல் திரையில் தோன்றும்.
      • இப்பொழுது நீங்கள் Order செய்த பொருள் முழுமையாக தவிர்க்கப்பட்டு விட்டது.

How to Return Or Replace Order:

இதுவரை Amazon Appல் Order செய்த பொருளை Cancel செய்வதைப் பற்றி படித்தோம். இனி ஒரு பொருளை ஆர்டர் செய்து, வீட்டிற்கு வந்த பிறகு அது நமது விருப்பத்திற்க்கு மாறாக இருக்குமாயின் திருப்பி அனுப்பவோ அல்லது அந்த பொருளுக்கு மாற்றாக வேறு பொருளை வாங்கக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

      • மேற்கூறியபடியேதரவுத் தளத்தில் நுழைந்தவுடன் menu —> Return & Refunds என்ற வழிகளை பின் தொடர வேண்டும்.
      • அதன் பின் அடுத்த பத்தியில் அந்த பொருளை திருப்பி அனுப்புவதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
      • அங்கு குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு சம்மதம் எனில் படித்து Tic செய்யவும்.
      • தேர்வு செய்த பின் Continue என்ற பொத்தானை அழுத்தவும்.
      • அடுத்த பக்கத்தில் இருக்கும் “ Conform  Your Return” என்பதை கிளிக் செய்யவும்.
      • இப்பொழுது Return செய்த பொருளுக்கான Replacement ID வழங்கப்பட்டிருக்கும்.
      • இதனைத் தொடர்ந்து “Continue Shopping ” பொத்தானின் மூலம் மீண்டும் முகப்பு பக்கத்திற்குள் செல்லும். அங்கு மீண்டும் நமக்கு விருப்பமான பொருளுடன் நமது Shopping ஐ தொடரலாம்.
      • குறிப்பிட்ட நாட்களுக்குள் Return செய்த பொருளை வாங்கிச் செல்ல Amazon முகவர்கள் உதவுவார்கள்.
      • அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு Order செய்து பொருளுக்கு பதிலாக பணமாகவோ அல்லது மற்ற விருப்பமான பொருளை புதிதாக Order செய்து வாங்கிக் கொள்ளலாம்.

Customer Care Number:

1800-1200-1637

தரவுத்தளம்:

https://play.google.com/store/apps/details?id=in.amazon.mShop.android.shopping

E-Mail :

[email protected]

முகவரி:

AMZN Mobile LLC 410 Terry AVE N Seattle, WA 98109.

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *