- நம் கைப்பேசியின் பயன்பாடுகளில் நாளுக்கு நாள் புலக்கத்தில் இருக்கும் புதுப் புது வசதிகளையும் அதன் யுக்திகளையும் Tricks Tamizha -வின் வழியே வாசித்து தெரிந்து கொண்டிருக்கும். நாம் இந்த பதிப்பின் மூலம் நம் கைப்பேசியில் சேமித்து வைத்திருக்கும் தொடர்புப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு பிடித்த பாடல்களை Ringtone-னாக எப்படி அமைத்துக் கொள்ளவது என்பதைப் பற்றி வாசிக்க உள்ளோம்.
1) Contact list உள்ள அனைவருக்கும் பொதுவான Ringtone அமைக்கும் முறை:-
அனைத்து வகையான கைப்பேசியிலும் Ringtone அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொதுவான வழிமுறைகள் பின்வருமாறு,
- ஏதாவதொரு கைப்பேசியின் வழியே Setting என்ற தேர்வுக்குள் நுழைந்து அதில் இருக்கும் Sound & Vibration என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த பக்கத்தில் இருக்கும் Ringtone என்பதைக் கிளிக் செய்தால் அங்குள்ள தேர்வினுள் இருக்கும் உங்களுக்கு விருப்பமான Ringtones களை தேர்வு செய்து கொள்ளலாம்.
- அல்லது Custom என்ற தேர்வின் கீழ் உள்ள On this Device ன் வழியே உங்கள் மொபைலில் ஏற்கெனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களின் விருப்பப் பாடல்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
- இப்பொழுது உங்கள் தொடர்பு எண்கள் அனைத்திற்கும் ஒரே பாடல் Ringtone ஆக அமைக்கப்பட்டிருக்கும்.
2) Contact List ல் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பிடித்த பாடல்களை Ringtone ஆக அமைப்பது:-
- இவ்வாறு தனிநபருக்கு மட்டும் நாம் பாடலை அமைக்க விரும்பினால் நம் Mobile ல் உள்ள Phone என்ற App ன் வழியே யாருடைய அழைப்புக்கு Ringtone அமைக்க விரும்புகிறோமோ அவரின் தகவலை திருத்தம் செய்யும் தளத்திற்குள் நுழைய வேண்டும்.
- அதில் அந்த நபரின் தகவல்களை SIM1 மற்றும் SIM2 ன் கீழ் சேமிக்க கூடாது. மாற்றாக Mobile Device அல்லது E-Mail ID ன் கீழ் மட்டுமே சேமிக்க வேண்டும்.
- தேர்ந்தெடுத்த நபரின் தகவலை திருத்தும் பக்கத்திற்கு கீழே Ringtone என்ற தேர்வு இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுத்து உள்நுழைந்தால் பாடலை அமைப்பதற்கான பல தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.
- அவை,
- Follow System Settings
- Custom Ringtone
- System Ringtone
- இதில் Follow System Settings என்பது இந்த வகை Mobile phone களுக்கென்றே அந்த நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருக்கும் Ringtone ஐ தேர்வு செய்ய வழங்கப்பட்டுள்ளது.
- System Ringtone என்பது கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும் சில பரிந்துரைக்கப்பட்ட Ringtone களைக் கொண்டிருக்கக்கூடிய தேர்வு.
- இதில் Custom Ringtone என்னும் தேர்வின் வழியே தான் நமக்கு பிடித்த பாடலை அமைக்க உள்ளோம்.
- அதற்கு முன்பு உங்கள் Mobile ல் விருப்பமான பாடலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது Custom Ringtone வழியே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் பாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்பொழுது அந்த பாடலின் பெயர் Custom Ringtone க்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும். இறுதியாக தகவலைத் திருத்தும் தளத்தை Save என்ற செயல்பாட்டுடன் நிறைவு செய்ய வேண்டும்.
இனி இந்த எண்ணிலிருந்து இந்த Mobile Phone-ற்கு எந்த அழைப்பு வந்தாலும் அவை நீங்கள் தேர்வு செய்த தனித்துவமான பாடலைக் கொண்டு அவர்களை அடையாளப்படுத்தும்.
இதே போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களின் தொடர்பிலுள்ள எத்தனை எண்ணிற்கு வேண்டுமானாலும் தனித்துவமான பாடல்களை Ringtone-களாக அமைக்க முடியும்.