BSNL- Bharat Sanchar Nigam Limited:-
- BSNL ஆனது ஒரு பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமாகும். இது அரசின் தொலைதொடர்பு அமைச்சகத்தில் ஒரு பகுதி. புது டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை அக்டோபர் 1, 2000 ஆம் ஆண்டில் நிறுவினர்.
- இந்த BSNL ஆனது GSM இயங்குதளத்தில் இரண்டு முக்கிய தொலைபேசி சேவைகளை வழங்குகின்றது. அவை,
- தரைவழித் தொலைபேசி
- மொபைல் தொலைபேசி
- தரைவழித் தொலைபேசியை 1990 களில் துவக்கப்பட்டது . தற்பொழுது இந்த தொலைத் தொடர்பு சேவையானது 97 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 47.20% சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.
- இந்தியா முழுவதும் Cell ONE மற்றும் BSNL எனும் பெயர்களில் GSM வலையமைப்புச் சேவையை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இதன் வழியே 121.82 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
- இதன் பிற சேவைகளாக,
- FTTH
- தரைவழித் தொலைபேசி
- நகர்பேசி சேவை
- அகலப்பட்டை இணையச் சேவை
- இணைய தொலைகாட்சி போன்ற பல சேவைகளை வழங்கும் ஒரு பொதுத் துறை
நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் அனைத்து செயல்பாடுகளும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
அந்த நிலையை இந்நிறுவனத்தை மேம்படுத்தும் வகையிலும் அதிக வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும் நோக்கிலும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. குறைந்த விலையில் அதிக DATA சேவைகளை வழங்குவதுடன் தற்பொழுது TEJAS NETWORK மற்றும் ITI LIMITED போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 4G, 5G சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இவ்வாறு பல சேவைகளை வழங்கி வந்துள்ள இந்நிறுவனத்தில் தேவையான சேவை வசதிகளைப் பெற My BSNL என்ற இணையவழிச் சேவை தளத்தை வழங்கியிருந்தது. ஆனால் சில செயல்பாட்டுக் குறைபாடுகளினால் தற்பொழுது அதனை மேம்படுத்தி BSNL Self Care என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL Self Care:-
BSNL வாடிக்கையாளர்களின் எளிமையான பயன்பாட்டிற்காக 2021 செப்டம்பர் 24 ல் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த தளத்தின் வழியே
- Land Line Bill,
- FTTH Bill,
- Mobile Recharge
- 4g Sim களை புதுப்பிப்பது
- நமக்கான புதிய எண்ணை நாமே தேர்ந்தெடுப்பது
- புதிய இணைப்பிற்கு விண்ணப்பிப்பது போன்ற பல பயன்பாடுகளை பெற முடியும்.
தளத்தின் செயல்பாடுகள்:-
- இந்த தளத்தில் நாம் உள்நுழையவோ, பயன்படுத்தவோ BSNL வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த ஒரு நெட்வொர்க் பயன்பாட்டினில் இருந்தும் BSNL நெட்வொர்கின் பயன்பாடுகளை செய்ய முடிகிறது.
- இதற்கு அதிகாரப்பூர்வ தரவுத் தளத்தில் நுழைந்தவுடன் Mobile எண்ணை பயன்படுத்தி அனுப்பப்படும் OTP ஐ உள்ளிட்டு Log In செய்து கொள்ள வேண்டும். பின் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
- முகப்பு பக்கத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுடன் இத்தளத்தின் பயன்பாடுகள் திரையில் தோன்றும்.
கணக்கை இணைக்க:-
- முகப்புப் பக்கத்தில் இருக்கும் Link Account என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
- உள்நுழைந்ததும் மூன்றுதேர்வுகள் வழங்கப்பட்டிருக்கும். அவை
- Prepaid
- Postpaid
- Landline
- இந்த தேர்வுகளைப் பயன்படுத்தி தேவையான தகவல்களை உள்ளிட்டதும் prepaid or Post paid சேவையாக இருந்தால் OTP எண்ணைப் பயன்படுத்தி இணைக்கவும்.
- Landline எண்ணாக இருப்பின் STD Code மற்றும் 6 இலக்க Landline எண்ணை உள்ளிட்டு உள்ளிட்டு கணக்கை இணைக்கலாம்.
- இப்பொழுது உங்கள் எண்ணுடன் கணக்கானது இணைக்கப்பட்டு முகப்பு பக்கத்தில் திரையிடப்படும்.
Recharge செய்ய :-
- இந்த தளத்தைப் பயன்படுத்தி செய்ய முகப்பு பக்கத்தில் உள்ள Recharge என்ற தேர்வைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- அதில் உங்களின் BSNL எண்ணை உள்ளிட்டதும், அடுத்த பெட்டியில் தற்போதைய புதிய Recharge திட்டங்கள் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.
- அதில் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். அதில் அந்த திட்டத்திற்கான சேவை பற்றிய அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும்.
- அதனைத் தொடர்ந்து Continue-வை தேர்வு செய்து Payment செய்து கொள்ள முடியும்.
இது போன்ற பல பயன்பாடுகளை இத்தளத்தைப் பயன்படுத்தி செய்து கொள்ள முடியும். இதனை கையாள்வதற்கு சுலபமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால் இத்தளத்தை 1 கோடி பயனாளர்களுக்கும் மேல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
தரவுத்தளம்:-
https://play.google.com/store/apps/details?id=com.digital.bsnl.selfcare
தளத்தைப் பற்றிய தகவல்கள்:-
Version —> 3.0.1
Required OS —> Android 6.0 and up
உதவிக்கு:-
E-Mail—> [email protected]
Call—> 1503,
1800-180-1503,
1800-4444,
1800-425-1957