நமது Tricks Tamizha பக்கத்தில் இனி வரும் நாட்களில் Cricket பற்றிய அனைத்து தகவல்களையும் வாசித்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கான இன்றைய பதிவில் இந்தியாவில் Cricket ன் துவக்கத்தையும் அதன் அடித்தளத்தையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
இங்கிலாந்தின் தேசிய விளையாட்டாக கருதப்படும் இந்த Cricket ஆனது மட்டையையும் பந்தையும் கொண்டு இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடும் விளையாட்டாகும். அதனடிப்படையில் ஒரு அணிக்கு 11 பேர் கொண்ட விளையாட்டு வீரர்கள் இருப்பர். சமநிலையான அணிக்கு 5 அல்லது 6 பேட்ஷ்மேன்களும் மற்றவர்கள் பந்து வீச்சாளர்களாகவும் இருப்பர்.
இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாட்டின் அறிமுகம் :-
இந்தியாவில் Cricket எனப்படும் இந்த துடுப்பாட்டத்தை அறிமுகப்படுத்தியதைப் பற்றி 1721- ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த கிளமெண்ட் டவுனிங் என்னும் மாலுமியால் எழுதப்பட்ட ” இந்திய போர்களின் விரிவான வரலாறு” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த குறிப்பில் காம்பே என்னும் துறைமுகத்தில் இருந்து கப்பல் வழியாக சரக்குகளை கொண்டு சென்ற வழியில் திடீரென ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் அந்த சரக்குகளுடன் வந்த மாலுமிகள் குஜராத்தில் உள்ள பாந்தர் எனும் இடத்தில் தங்க நேர்ந்தது. இந்நிலையில் அவர்களின் பொழுது போக்கிற்கான விளையாட்டுகளில் ஒன்றான இந்த Cricket விளையாட்டை விளையாடினர். இதனை உள்ளூர் வாசிகளின் ஆர்வத்தை தூண்டியது. இவ்வாறு தான் நம் இந்திய மண்ணில் இந்த Cricket விளையாட்டு அதன் காலடியை இந்தியாவில் ஊன்றியது.
ஆரம்ப காலத்தில் விதிமுறைகளின்றி விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டானது பின் 1744 ற்குப் பிறகு தகுந்த விதிமுறைகளுடன் விளையாட ஆரம்பித்தனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் மெட்ராஷ் கிளப், ஓரியண்டல் கிளப் போன்ற இந்திய வாழ் ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட விளையாட்டு கிரிக்கெட் குழுவும் அமைக்கப்பட்டது.
தற்பொழுது உலக நாடுகளின் மத்தியில் Cricket விளையாடும் அதி திறமையான வீரர்களில் பலர் நமது இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Cricket விளையாட்டில் தற்பொழுது உள்ள முக்கியமான போட்டிகள் :-
- 20-20
- One Day Internationals
- Asia Cup
- Deodhar Trophy
- ICC World Test Championship
- T10 Leagues
- Test Matches
- Twenty20 Internationals
- Women’s Cricket
- இளைஞர் மற்றும் மேம்பாட்டு போட்டிகள் (Youth and development matches)
- தொண்டு நிறுவனங்களுக்கான போட்டிகள் ( Exhibition Matches and Charity Games )
- Super Sixes
- 100 Ball Format
- Three Team Cricket
- Indoor Cricket
- Blind Cricket
- Wheelchair Cricket
இந்த விளையாட்டில் வழங்கப்படும் கோப்பைகளின் பெயர்கள் பின்வருமாறு,
- Asia Cup
- நிர்வாகம் : ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
- began in : 1984
- Format : குழு நிலை மற்றும் நாக் அவுட்
- Reliance Cup
- நிர்வாகம் : International Cricket Conference
- began in : 1987
- Format : ஒரு நாள் சர்வதேச போட்டி
- Coach Behar Trophy
- நிர்வாகம் : BCCI
- began in : 1945-1946
- Format : 19 வயதிற்குட்பட்டோருக்கான வருடாந்திர போட்டியாகும்.
- C.K.Naidu Trophy
- நிர்வாகம் : BCCI
- began in : 1973-1974
- Format : 23 வயதிற்குட்பட்டோருக்கான முதல் தர கிரிக்கெட்
- (Jawaharlal Nehru Cup)
- நிர்வாகம் :BCCI
- began in : 1989
- Format : ஒரு நாள் சர்வதேச போட்டி
- (ICC World Cup)
- நிர்வாகம் : ICC(International Cricket Council)
- began in : 1975
- Format : One Day International
- இரானி கோப்பை (Irani Trophy)
- நிர்வாகம் : BCCI
- began in : 1959-1960
- Format :முதல் தரம்
- ரஞ்சி கோப்பை (Ranji Trophy)
- நிர்வாகம்: BCCI
- Began in : 1934
- Format: முதல் தரம்
- பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் கோப்பை (Benson & Hedges Trophy)
- ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
- Began in – 1984
- விஜய் ஹஜாரே கோப்பை (Vijay Hazare Trophy)
- நிர்வாகம்: BCCI
- Format – முதல் தரம்
- Began in : 1993
- விஜய் மெர்சாண்ட் கோப்பை (Vijay Merchant Trophy)
- நிர்வாகம் : BCCI
- Format : Under 16 Domestic Tournament –
- Began in : 1998
- விஸ்டன் கோப்பை (Wisden Trophy)
- நிர்வாகம்: (ECB,WICB )/இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய தீவுகள்
- Began In : 1963
- Format: தொடர்
- வில்ஸ் கோப்பை-(Wills trophy)
- நிர்வாகம்: ITC –
- Began in: 1977-
- ஒரு நாள் கோப்பை
- போட்டி வடிவம்: நாக் அவுட்
- துலீப் டிராபி (Duleep Trophy)
- நிர்வாகம்: BCCI –
- Began In : 1961
- Vizzy Trophy
- நிர்வாகம்: BCCI-
- began in: 1966 –
- Format: Annual Tournament
ICC- International Cricket Council:
இந்த யர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்பது ஒரு உலகலாவிய கிரிக்கெட் நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பின் கீழ் 5 பிராந்திய அமைப்புளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது. அவை,
- ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
- ICC கிழக்கு ஆசியா- பசுபிக் கவுன்சில்
- ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம்
- ICC அமெரிக்காஸ் கவுன்சில்
- ICC ஐரோப்பா கவுன்சில்
போன்ற பிராந்தியங்களின் அடிப்படையில் அவற்றிற்கு இடையேயான போட்டிகளை கட்டுப்படுத்துகின்றனர். மேலும் இந்த கவுன்சில் உறுப்பினர்களின் பட்டியல் பிராந்தியங்கள் வாரியாக பின்வருமாறு,
- ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- இலங்கை கிரிக்கெட்
- ICC கிழக்கு ஆசியா- பசுபிக் கவுன்சில்
- கிரிக்கெட் ஆஸ்திரேலியா
- நியூசிலாந்து கிரிக்கெட்
- ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம்
- கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா
- ஜிம்பாப்வே கிரிக்கெட்
- ICC அமெரிக்காஸ் கவுன்சில்
- கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள்
- ICC ஐரோப்பா கவுன்சில்
- கிரிக்கெட் அயர்லாந்து
- இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் விளையாட்டை ஆதரிக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடுவதற்கான மைதானத்தை 22 Yards நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக
இது போன்ற பல பயனுள்ள தகவல்களை இனி அடுத்தடுத்த பதிவுகளில் https://trickstamizha.com என்ற நமது இணையவழிப் பக்கத்தில் வாசிக்கலாம்.