Bus Simulator விளையாட்டை விரும்பி விளையாடும் நம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு புதிய அறிமுகமான KAYESR Bus Mod ஐ எவ்வாறு உங்கள் விளையாட்டில் இணைப்பது என்பதற்கான வழிகாட்டுதலுக்காகவே இந்தப் பதிவு.
KAYESR Bus Services :-
இராஜபாளையத்தை மையமாக கொண்டு செயல்படும் Bus நிறுவனமான KAYESR Travels -ன் சேவைகள் சென்னை to சுரண்டை, சென்னை to இராஐபாளையம், இராஜபாளையம் to மதுரை, சென்னை to ஶ்ரீவில்லிப்புத்தூரின் வழித்தடங்கள் உட்பட மேலும் சில வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இவைகளில் A/C கருடா பஸ், Non A/C Express Bus வசதிகளுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய இந்த பேருந்தின் மாதிரியை நமது Bus Simulator Game -ல் எவ்வாறு செயல்படுத்திப் பார்ப்பது என்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு,
How To Download KAYESR Bus Livery :-
- இதற்குக் கீழே வழங்கப்பட்ட Link-ஐப் பயன்படுத்தி KAYESR BUS -ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள்நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு CREAT DOWNLOAD LINK என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ல் உள்ள ZACHIVER App என்பதில் உள்நுழைந்து Download–> Kayesr Bus Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக Password Required என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
Password :- TTMRS
How To Download KAYESR Bus Mod :-
- இப்பொழுது நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் Sri Kumaran Bus -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager–> Download–> Kayesr Bus Livery என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால் KAYESR Bus Mod நமது SRI KUMARAN BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
(அல்லது)
- Bussid Reviews Channel மூலமாக SRI KUMARAN BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(அல்லது )
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு நமது https://trickstamizha.com என்ற இணையவழிப் பக்கத்தைப் பின்தொடரவும்.