New Ration Card Online Apply 2025 | How To Apply New Ration Card Online Tamil | Ration Card Apply | Tricks Tamizha

New Ration Card Online Apply 2025 | How To Apply New Ration Card Online Tamil | Ration Card Apply | Tricks Tamizha

Ration Card :- ( Family Card )

  • ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் அவர்களின் விரங்களையும் பதிவு செய்து வைக்கக் கூடிய ஒரு ஆவணம். இதனை முதன் முதலில் இந்தோனேசியாவில் கார்து கெளுவார்கா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்போது பல்வேறு நாடுகளில் இதனை குடும்பங்களை அடையாளப் படுத்தவும் அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கான உணவுப் பற்றாக்குறைக்கு உதவவும்  பயன்படுத்துகின்றனர்.
  • இந்தியாவில் 1965 களில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தினை  சரிசெய்ய பல மாநிலங்கள்  பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 1966 ல் குடும்ப அட்டைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் அதனை போதுமான அளவு விரிவு படுத்த இயலாத காரணத்தால் 1972 ல் அப்போதைய முதல்வரால் (மு. கருணாநிதி) தமிழ்நாட்டில் பொது விநியோக கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும்  ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டது.
  • இந்த அட்டையைப் பெறுவதற்கு கீழ்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவை,
    • அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
    • அவர் வேறு மாநிலத்தில் குடும்ப அட்டை பெற்றிருக்க கூடாது.
    • தமிழ்நாட்டிற்குள்  ஒரு அட்டைக்கு மேல் ஒரு உறுப்பினர் பெயர் இருக்கக்கூடாது.
    • குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் நெறுங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும்.
    • இதை தவிர தனியாக வசிப்பவராக இருந்தால்  அவர் கீழ்கண்ட வரம்புள்ளவராக இருக்கலாம்.
      • மாற்றுத்திறனாளியாகவோ அல்லது நோய்வாய்பட்டவராக
      • தனி விதவையாக
      • 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்
      • குடும்ப ஆதரவு இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்  அல்லது பெண்
      • எந்த ஒரு நிலத்தின் மீதும் உரிமையில்லாத விவசாயத் தொழிலாளி
  • இவ்வாறான விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும் குடும்ப அட்டையானது Smart Card வடிவில் குடும்பத்தின் ஆண்டு வறுமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
      • BPL (Below Poverty Line)
      • PHH (Priority House Hold)
      • PHH-AYY (Priority House Hold- Annapoorna Yojana)
      • PHH (Priority)
      • NPHH(Non- Priority House Hold)
      • NPHH – S (Non- Priority House Hold- Sugar option Card
      • No Commodity Card
  • இவ்வாறு தரம் பிரித்து அந்தந்த குடும்பங்களுக்கான அட்டைகளை பயன்படுத்தி, பல மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் நுகர்பொருள் வாணிபக் கழகம் பகிர்ந்தளிக்கிறது.
  • இவ்வாறான குடும்ப அட்டையை புதிதாக விண்ணப்பித்து பெற வேண்டும் எனில் பின்வரும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை :-

    1.  இருப்பிடச் சான்று அல்லது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும்  வகையில் முகவரியுடன் கூடிய சான்று ( உதா, சொத்து வரி ரசீது, சிலிண்டர் ரசீது, மின்கட்டண ரசீது )
    2. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
    3. தெளிவான முகவரி ( மாவட்டம், தாலுக்கா, கிராமம் உட்பட )
    4. குடும்ப விவரங்கள்
    5. LPG இணைப்பு பற்றிய தகவல்கள்
    6. இதற்கு முன் இணைந்திருந்த குடும்ப அட்டையின் விவரங்கள்
    7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
    8. திருமணத்திற்கு பிறகு புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பிக்க உள்ளீர்கள் எனில் இதற்கு முன் இணைந்திருந்த குடும்ப அட்டையிலிருந்து பெயரை நீக்கியதற்கான நீக்கச் சான்றிதழ்
    9. திருமணச் சான்று

இது போன்று தேவையான ஆவணங்களை தாராக வைத்துக் கொண்ட பின் பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் :-

  • உணவுப் பொருள் கழகங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியே நுழைந்ததும்  அதன் முகப்புப் பக்கத்தில்  மின்னனு அட்டை சேவைகள் என்ற தலைப்புக்கு கீழ் உள்ள புதிய மின்னனு அட்டைக்கான விண்ணப்பம் என்ற தேர்வை பயன்படுத்தி உள்நுழையவும்.
  • இந்த விண்ணப்பத்தில் பயனர்களின் தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில் இந்த தகவல்கள்  தான் மின்னனு குடும்ப அட்டையில் குறிப்பிடப்படும்.
  • குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டும். இதனை கட்டாயம் 5 MB க்குள் இருக்க வேண்டும்.
  • இதில் குறிப்பிடும் பெயர், பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏனென்றால் இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் அதனை திருத்தம் செய்ய இயலாது.
  • வீட்டிற்கான முகவரியை கிராம, பஞ்சாயத்து, தாலுக்கா, அஞ்சல் முகவரியுடன் குறிப்பிட வேண்டும். இதனடிப்படையிலேயே உங்களுக்கான கடை  ஒதுக்கப்படும்.
  • குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் என்ற தலைப்பிற்கு கீழே உறுப்பினரை சேர்க்க என்ற தேர்வைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை குறிப்பிட வேண்டும். இதில் பெயர், பாலினம், மாற்றுத்திறனாளியா, அவர் பிறந்த தேதி, குடும்ப தலைவருக்கும் உறுப்பினருக்கும் இடையேயான உறவு முறை அடையாள சான்று போன்ற தகவல்களை குறிப்பிடவும். இதனை முதலில் குடும்ப தலைவரின் தகவல்களில்  தொடங்கி குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் தகவலை ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிட  வேண்டும்.
  • அடையாளச் சான்றாக கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். பின் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஒரே PDF ஆக இணைத்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இந்த தகவல்களை எல்லாம் தெளிவாக வழங்கியதும் உறுப்பினர் விவரம்  சேமி என்பதை தேர்வு செய்தால் உறுப்பினர் விவரம் வெற்றிகரமாக சேமிக்கப்படும். இதில் ஏதாவது தவறு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தால் திருத்த என்பதைப் பயன்படுத்தி திருத்திக் கொள்ளலாம்.
  • அடுத்ததாக அட்டைத் தேர்வு என்பதைப் பயன்படுத்தி உங்களுக்கு 4 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும். அவை,
      1. (No Commodity Card) பண்டமில்லா அட்டை
      2. (Rice Card) அரிசி அட்டை
      3. (Sugar Card) சர்க்கரை அட்டை
      4. (Others) மற்றவை

போன்ற தேர்வுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

  • குடியிருப்பு சான்றிதழில் பரிந்துறைக்ப்பட்ட தேர்வுகளில் அதற்கான ஆவணம் கைவசம் உள்ள ஏதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை Choose Files என்பதின் உதவியோடு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இறுதியாக உறுதிப்படுத்துதல் என்பதைத் தேர்வு செய்து திரையில் தோன்றும் இதுவரை குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்த்ததும் உறுதி செய் என்பதை Click செய்ய வேண்டும்.
  • இப்பொழுது இந்த விண்ணப்பத்திற்கான குறிப்பு எண் வழங்கப்படும். அதனை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனைப் பயன்படுத்தி இதன் தற்போதைய நிலையை தெறிந்து கொள்ள முடியும். அதற்கு முகப்புப் பக்கத்தை மீண்டும் அடைந்து அதில்  மின்னனு விண்ணப்பத்தின் நிலை  என்பதை தேர்வு செய்து  குறிப்பு எண்ணை பயன்படுத்தி தற்போதைய நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம். இவை 4 நிலைகளை கடந்து வர வேண்டியிருக்கும். அவை,
      1. விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நிலை
      2. ஆவண சரிபார்ப்பு நிலை
      3. துறை சரிபார்ப்பு நிலை
      4. தாலுக்கா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் நிலை
  • இப்பொழுது புதிய மின்னனு குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் நிறைவடைந்தது.  இதன் செயல்பாடுகள் தொடங்கி 3 தகவல்கள் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
  • அனைத்து செயல்பாடுகளும் முடிவடைந்ததும் அதனை பதிவிறக்கம் செய்ய பின்வரும் செயல்பாடுகளை பின்தொடரவும்.

ஒப்புதல் பெற்ற மின்னனு குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்ய:

  • இதே இணையதளத்தைப் பயன்படுத்தி அதன் முகப்புப் பக்கத்தை அடைந்த உடன் அதில் பயனர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதற்காக உங்களின் பதிவு செய்த கைப்பேசி எண் மற்றும் Captcha குறியீட்டை உள்ளிட்டை பதிவு செய் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அனுப்பப்படும் OTP ஐ உள்ளிட்டில் அடுத்த பக்கத்தில் புதிய குடும்ப அட்டை திரையிடப்படும்.
  • பின்  மின்னனு அட்டை கோப்பு பதிவிறக்கம் என்பதைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான மின்னனு குடும்ப அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
 இதையதள முகவரி:-

https://tnpds.gov.in

உதவி எண் :-      1967

1800-425-5901

புதிய மின்னனு குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக் கட்டாயம் இந்த வழிமுறைகளை பின்பற்றி தான் விண்ணப்பிக்க வேண்டும்…

இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு https://trickstamizha.com என்ற இணைய பக்கத்தைப் பின்தொடரவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *