நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாததாக மாறிவிட்டவைகளில் முக்கியமானது, கணிணி வழிப் பொருளாதாரமும், கணிணிப் பண்டமாற்றுமுறைகளும். இன்றைய சூழலில் வர்த்தகங்கள் அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் அவற்றைக் கொண்டு நிகழும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 4.2 மில்லியன் மக்களுக்கு மேல் இணைய வழி மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நாடுகளின் அறிக்கை தெறிவிக்கிறது. இணையவழியின் கட்டமைப்புகளை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்துவதுடன், கணிணி மோசடி, நிதி மோசடி முதல் பல உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவது வரை செயல்படுகின்றனர். நம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூபாய் 98 கோடி மதிப்பிற்கான புகார்கள் வந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
காவல் துறையின் எச்சரிக்கை
இவ்வாறு பெறுகி வரும் Online குற்றங்களில் இருந்து கவனமாக இருப்பதற்காக காவல் துறையம் அரசும் விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை வழங்குவதுடன்
cyber crime HELP LINE NO(1930)
www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிடல் மூலமும்
NCRP போர்டலில் குற்றங்கள் பற்றி பதிவிடுவதன் மூலமும் இவ்வகை குற்றங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக மைய அரசானது, Cyber Crime ன் தரவுத்தளத்தை நடைமுறை படுத்தி வருகிறது. இவற்றில் பொருளாதார ரீதியில் மோசடி , நிதி மோசடியை பற்றியும் புகார் தெரிவிப்பதைப் பற்றி தெறிந்து கொள்வோம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- விண்ணப்பிக்கும் முன் தயாராக இருக்க வேண்டியவை
பாதிக்கப்பட்டவரின் பெயர்,
பிறந்த தேதி,
அவர் பயன்படுத்திய வங்கி கணக்கு எண்,
IFSC code,
இழந்த பணத்தின் மதிப்பு,
பரிவர்த்தனை செய்யப்பட்டதேதி,
பரிவர்த்தனை எண்,
பணம் பரிமாற்றப்பட்ட முறை (single transaction, multiple transaction) ,
எந்த தளத்தின் மூலம் பணப்பரிவர்தனை நடந்தது,
மேலும் அதனுடைய புகைப்படம்,
ஏமாற்றியவரைப் பற்றிய தகவல்கள் போன்றவை தேவை.
- அரசின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் நுழைந்த உடன் National Cyber Crime Reporting Portal எனும் குற்றங்களை பதிவு செய்யும் ஒரு பயனர் நட்பு தளம் தோன்றும். இந்தத் தளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்தி தரவுகளை உள்ளிட முடியம்.
- பின் Financial Fraud—> Register Complaint என்ற பிரிவை தேர்வு செய்யவும்.
- இதில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் கடவுச்சொல்லை பயன்படுத்தி நுழையலாம். புதியவர் எனில் பாதிக்கப்பட்டவர் அவரின் தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
- பின் அவரின் சுய விவரம், தற்போதைய முகவரி, மேலும் தங்கள் பகுதியின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் காவல்துறையின் தகவல்கள், அஞ்சல் குறியீடு போன்ற தகவல்களை சரியாக உள்ளிடவும்.
- பின் அடுத்து வரும் பக்கத்தில் சம்பவம் நடைபெற்ற பொதுவான தகவல்களை உள்ளிடவும் (eg: bank name , a/c no, transaction id ,transaction date & time, platform), குற்றம் சாட்டப்படுபவர் அல்லது சந்தேக நபரின் தகவல்கள் தெரியும் பட்சத்தில் அதனை உள்ளிடவும்,
- புகார் தெரிவிப்பவரின் அடையாள அட்டைகளை புகைப்படம் மூலம் உள்ளிடவும்.
- இறுதியாக இவைகளை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும். இதில் நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
விண்ணப்பத்தின் நிலை அறிய
மேற்குறிப்பிட்ட படி அதே தளத்தில் உள்நுழைந்து Register a complaint–>Financial fraud–>register a complaint–>log in–>Check Status போன்ற வழிகளை பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பு- இப்பதிவில் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மையானதா என்பதை உறுதி செய்து கொள்வது கட்டாயம்.
இத்தளத்தின் மற்ற பயன்பாடுகள்
ஒரு புகாரை பதிவு செய்யவும்
உங்கள் புகாரை கண்காணிக்கவும்
சந்தேக நபரை புகாரளித்து சரிபார்க்கவும்
சைபர் தன்னார்வலர்கள்
கற்றல் மூலை
குடிமக்கள் கணக்கெடுப்பு
எங்களை தொடர்பு கொள்ளுதல்
அதிகாரப்பூர்வ தரவுத்தளம்
உதவி எண்
1930 (24/7 hours working)