நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையானது ஜூலை 1, 1975 அன்று இந்திய நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. PAN Card என்பது தனிப்பட்ட 10 இலக்க அடையாளங்காட்டியாகும்.
இது இந்தியாவில் வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு தனி நபருக்கும் நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் வரி விதிப்பு, அடையாளம் மற்றும் வயது சரிபார்ப்பு ஆகும். மேலும் இதற்கான குறைந்த பட்ச வயதாக 18 ஐ இந்திய அரசு நிர்ணயித்து உள்ளது. இதை மேஜர் கார்டு எனவும் ,18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் அட்டையை மைனர் கார்டு எனவும் வரையறுத்துள்ளது.
கட்டமைப்பு
- மேலே குறிப்பிட்டது போலவே இது 10 இலக்க எண்ணாகும். இந்த எண்கள் அனைத்திற்கும் ஒரு தனித்துவமான தகவல்களும் உள்ளது.
- இந்த குறியீட்டின் முதல் மூன்று எழுத்துக்கள்(eg: AAA ) A முதல் Z வரையிலான எழுத்துக்களின் வரிசையைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது.
- நான்காவது எழுத்து அட்டை வைத்திருப்பவரின் வகையை அடையாளம் காட்டுகிறது. A—(AOP) நபர்களின் சங்கம் , B—(BOI) தனி நபர்களின் உடல், C— நிறுவனம், F— நிறுவனம், G— அரசு, H— (HUF) இந்து பிரிக்கப்படாத குடும்பம் , L— உள்ளூர் அதிகாரம் , J— செயற்கை நீதித்துறை நபர், P—தனி நபர், T —டிரஸ்ட்
- PAN ன் 5-வது எழுத்து என்பது நபரின் முதல் பெயர், குடும்பப்பெயர் அல்லது கடைசி பெயர் ஆகியவற்றின் முதல் எழுத்து ஆகும்.
- கடைசி எழுத்து தற்போதைய குறியீட்டின் செல்லுபடியை சரிபார்க்க காசோலைத் தொகையாகப் பயன்படுத்தப்படும் அகரவரிசை இலக்காகும்.
புதிய மேம்பாடுகள்
- அவ்வகையில் தற்பொழுது இந்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வருமான வரித்துறை ஆணையங்கள் இணைந்து protean (formerly NSDL e-governance infrastructure Ltd) எனும் புதிய போர்ட்டலை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
- அதன் வழியே பல புதிய அம்சங்களை வழங்குகிறது.
- அதில் ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களை பாதுகாப்பான PAN தரவு பெட்டகத்தில் சேமிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தரவு பாதுகாக்கபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
- அரசின் அங்கிகரிக்கப்பட்ட தரவுத்தளத்தின் வழியே உள்நுழைந்ததும், அதில் 4 படிநிலைகளில் இவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
Fill the form
Make payment
Submit document
Get your PAN card
- இவ்விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ளபடி தனி நபரின் விபரங்களை (eg: பெயர், பிறந்த தேதி, பாலினம், ஆதார் எண் , புகைப்படம், மற்றும் முகவரி …….) பதிவிட்டு சமர்ப்பிக்கவும்.
- மேலும் இப்போர்டலின் மூலம் PAN CARD ன் மறு பிரதியை வெறும் 50 ரூபாயை செலுத்தி பெற முடியும்.
- தனி நபர் விபரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யவும் முடியம்.
- E-PAN பதிவிறக்கவும்
- விண்ணப்பித்த அல்லது மாற்றம் செய்த PAN CARD ன் தற்போதைய நிலை அறியவும் முடிகிறது.
- விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் உங்கள் ஊரில் உள்ள PAN மையங்களின் விபரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளன.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- சமீபத்திய புகைப்படம்
- வயது சான்றிதழ்
- கல்வி சான்றிதழ்