நம் இந்திய நாட்டில் அஞ்சல் துறையானது 1854 வது வருடம் அதாவது 170 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு தொலைத்தொடர்பு சேவையாகும். இத்துறையானது இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதாக செயல்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் 8 அஞ்சல் வட்டங்களுடன் துவங்கப்பட்ட இந்த துறையானது தற்பொழுது 23 அஞ்சல் வட்டங்களுடன் பணியைத் தொடந்து செய்து வருகின்றது.
ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரி (post master) ன் கீழ் தான் இயங்கும். இந்த அஞ்சல் வட்டங்களைத் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல் சேவைக்காக சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.
நம் இந்திய அஞ்சல் துறையானது 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாக செயல்படுகிறது. இவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் தகவல் தொலைத் தொடர்பு துறையாகும். இத்துறையில் 6 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையானது சிறிய வகை வங்கி அமைப்பிலும் செயல்படுகிறது. ஆகையால் இந்தத்துறை வங்கி வசதி இல்லாத கிராமங்களிலும் சேமிப்பைப் பெறுக்க வழிவகை செய்துள்ளது. தற்பொழுது தமிழநாட்டில் மட்டும் 6000 மக்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் மொத்தம் 10264 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறையானது பதிவு அஞ்சல், பொருட்கள், புத்தகங்கள் அனுப்புதல் , அஞ்சல் தலைகள் , அஞ்சல் அட்டை மற்றும் கடித உறைகள் விற்பனை போன்ற பல பணிகளை செய்து வருவது நாம் அறிந்ததே.அதே போல் இன்னும் சில வசதிகளையும் வழங்கி வருகின்றது. அவை
- வங்கி சேமிப்புக் கணக்கு
- பொது சேமிப்பு நல நிதி
- வைப்பித் தொகைத் திட்டம்
- மாத வருவாய் திட்டம்
- காப்பீட்டுத் திட்டச் சேவை
- தேசிய சேமிப்புப் பத்திரம்
- தங்கப் பத்திரம்
- கிஷான் விகாஷ் பத்திரம்
இத்தகைய அதிகாரப்பூர்வ தளத்தில் நமது வருமானத்தையும் சிறு சேமிப்பையும் பெறுக்கும் சில திட்டங்களைப் பற்றியே இத்தொகுப்பில் காண உள்ளோம்.
NSRD-National Savings Recurring Deposit
(தேசிய சேமிப்புத் தொடர் வைப்புக் கணக்கு)
- வட்டி விகிதம்———- 6.7%
- குறைந்த பட்ச தவணைத் தொகை(மாதத்தில்) ———- ரூ.100
- அதிக பட்ச தவணைத் தொகை———- வரம்பு இல்லை
- செலுத்தும் முறை ———- மாதாந்திர தவணை வசதி
- முதிர்வுக் காலம் ———- 5 ஆண்டுகள்
- வரி விலக்கு —–இல்லை
- கட்ட வேண்டிய மாதாந்திரம் ———- 60 மாதாந்திர வைப்புத்தொகை
- இடை நிறுத்தம் செய்ய இயலும் கால வரம்பு—– 3 வருடம்வர
- கடன்———- இத்திட்டத்தின் பேரில் கடன் பெறும் வசதி வழங்கப்படவில்லை.
- தகுதி—— 18 வயது நிரம்பியவராகவும், சுய நினைவுடன் இருப்பவராக இருக்க வேண்டும்.
உதாரணமாக== >மாதாந்திரத்தொகை 5000 செலுத்தினால் 5 வருட முதிர்வுக்குப் பின் மொத்த தொகை ரூ.3,00,000 -துடன் ஆண்டுக்கு 6.7% வட்டி என்ற வீத்த்தில் ரூ.56829.14 வட்டியும் சேர்த்து 356829.14 என கணக்கிட்டு வழங்கப்படும்.
PPF- Public Provident Fund
(பொது வருங்கால வைப்பு நிதி)
இது அஞ்சல் அலுவலகத்தின் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும்.
- வட்டி விகிதம்—–7.1%
- குறைந்த பட்ச தவணைத் தொகை(ஆண்டிற்கு)—–ரூ.500
- அதிக பட்ச தவணைத் தொகை——- 1.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்
- முதிர்வுக் காலம் ———- 15 ஆண்டுகள். ஆனாலும் 5 ஆண்டுகள் மேலும் இத்திட்டத்தை நீட்டிக்க முடியும்.
- கடன் —–இத்திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.
- வரி விலக்கு—- உண்டு
- தகுதி—— 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தொகை கட்ட வேண்டிய முறை—— மாதம் 12,500 அதாவது 1.5 லட்சம்
உதாரணம்==> வருடத்திற்கு 1.5 லட்சம் என 15 வருடத்திற்கு கட்டிய அசல் தொகை 22,50,000 துடன் 7.1% வட்டி வீதத்தில் கிடைக்கும் மொத்தத் தொகை 40,68,209 இத்திட்ட முடிவில் கிடைக்கும்.
SSY- Sukanya Samriddhi Yojana
(சுகன்ய சம்ரிதி திட்டம்/ செல்வமகள் சேமிப்புத் திட்டம்)
துவக்கம்: 22/1/2015 தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது.
பயன்பெறுபவர்கள்: பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகத்திலும் செலுத்த முடியும்.
- வட்டி விகிதம்—–8.2%
- குறைந்த பட்ச தவணை தொகை(ஆண்டிற்கு)—–ரூ. 1000
- அதிக பட்ச தவணைத் தொகை(ஆண்டிற்கு)—— ரூ.150000
- முதிர்வுக் காலம்—–14 ஆண்டுகளுக்கு அல்லது பெண்ணிற்கு திருமணம் ஆகும் வரை இத்தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். இதன் முதிர்வுத் தொகையை 21 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றுக்கொள்ள முடியும். அல்லது 18 வயதிற்குப் பிறகு திருமணத்திற்காக செலுத்திய தொகையில் 50% மட்டும் பெறமுடியும்.
- வரி விலக்கு —பெற முடியும்
- தகுதி—-பெண் குழந்தைகளுக்கான இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தினை தொடங்க முடியும். பெண் பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்கள் பிள்ளைகளின் பெயரில் பிறப்புச் சான்றிதழுடன் இக்கணக்கை தொடங்கலாம்.
- தொகை கட்ட வேண்டிய முறை—- ஒவ்வொரு நிதியாண்டிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால் கணக்கு செயலிலந்து விடும். தவணைத் தொகை செலுத்த தவறிய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.50 அபராதத் தொகை விதிக்கப்படும்.
உதாரணம்==> இத்திட்டத்தில் 1 வயது குழந்தையின் பெயரில் துவங்கப்பட்டது என எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 1,00,000 மானது 15 வருடத்திற்கு செலுத்தும் பொழுது 21 வருடத்திற்குப் பிறகு 8.2% வட்டியாக ரூ.3288076 சேர்த்து முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.47,88,076 பெறப்படுகிறது.
NSC-National Savings Certificate
(தேசிய சேமிப்பு சான்றிதழ்)
இது இந்தியாவில் சிறிய சேமிப்பு மற்றும் வருமான வரி சேமிப்பு முதலீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 1953 ல் துவங்கப்பட்ட இந்த தேசிய சேமிப்பு சான்றிதழானது, தற்பொழுது 1/4/2016 முதல் அச்சிடப்பட்ட சான்றிதழ் நிறுத்தப்பட்டு, மின் முறையில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
- வட்டி விகிதம்—– 7.7%
- முதிர்வு காலம்——5 ஆண்டுகள்
- குறைந்த பட்ச தொகை(ஆண்டிற்கு)—–ரூ. 1000
- அதிக பட்ச தொகை—— வரம்பு இல்லை
- இடைநிறுத்தம் செய்யும் காலம்—– கணக்கு வைத்தவரின் இறப்பு அல்லது நீதி மன்ற ஆணைப்படி மட்டுமே.
- கடன் —— வங்கியில் இந்த சான்றிதழின் மேல் கடன் பெற இயலும்.
- தொகை செலுத்த வேண்டிய முறை—– முதலீட்டுத்தொகை ஒரு முறை மட்டும் செலுத்தி சான்றிதழ் பெறுதல்.
- வரி விலக்கு—– வரி விலக்கு பெற இயலாது.
உதாரணம்==> ரூ.1,00,000 தொகை செலுத்தி இச்சான்றிதழை பதிவு செய்து வாங்குவதன் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 7.7% வட்டி வகித்த்தில் அதன் மதிப்பானது அசல் ரூ.1,00,000 துடன் வட்டி ரூ.44,903.41 சேர்க்கப்பட்டு ரூ.1,44,903.41 ரூபாயாக மாறும்.
SCSS- Senior Citizen Savings Scheme
(மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்)
இத்திட்டமானது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கான அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டமானது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். ஓய்வு பெற்றவர்களின் நிதித் தேவையை கருத்தில் கொண்டும் , அவர்களின் நிதி ரீதியான சுதந்திரத்திற்கு கனிசமாக உதவுவதற்கும் அரசு அத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
- வட்டி விகிதம்—– 8.2% (3 மாதங்களுக்கு ஒரு முறை வரி கணக்கிடப்பட்டு வட்டி வழங்கப்படும் )
- வட்டி வகை—- கூட்டு வட்டி
- முதிர்வு காலம்——5 ஆண்டுகள்
- குறைந்த பட்ச தொகை(ஆண்டிற்கு)—–ரூ. 1000
- அதிக பட்ச தொகை—— ரூ.30,00,000
- வரி விலக்கு—-வரி விலக்கு கோர முடியும்.
- தொகை செலுத்த வேண்டிய முறை—- ஒரே தொகையாக செலுத்த வேண்டும்.
- தகுதி—– 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான திட்டம்.
உதாரணமாக==> முதியவர் ஒருவர் ரூ.1,00,000 த்திற்கு ஒரு முழு தொகையை செலுத்தி இத்திட்டத்தை தொடங்கினால் 5 வருட முடிவில் அசல் ரூ.1,00,000 துடன் காலாண்டுக்கு(3 மாதங்களுக்கு ) ஒரு முறை 8.2% வட்டி கணக்கிடப்பட்டு ரூ.41,000 சேர்த்து 1,41,000 த்தில் இருந்து காலாண்டு தவணையாக ரூ.2,050 ஐப் பெறுவார்.
மேலும் இத்திட்டத்தைப் பற்றி அறிய அதிகாரப்பூர்வ தரவுத்தளம்