ரவிச்சந்திரன் அஸ்வின் :-
நம் இந்திய அணியின் துடிப்பான சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திர அஸ்வின் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் 1986 ஆம் ஆண்டு 17 ஆம்தேதி பிறந்தார். ஆஸ் என செல்லமாக அழைக்ப்படும் இவரின் தற்போதைய உயரம் 188 cm ஆகும். அவருடைய தந்தைப் பெயர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய் சித்ரா. அவருக்கு தற்போது திருமணமாகி பிரீத்தி நாராயணன் என்ற மனைவியும் ஆதியா மற்றும் ரவின்யா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அஸ்வின் தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வியை பத்மா சேஷாத்ரிபாலா பவன் மற்றும் செயின்ட் பேட்ஸ் பள்ளியிலும் பயின்றார். பின் அவரது பட்டப் படிப்பை சென்னையிலுள்ள SSN பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் B. Tech முடித்துள்ளார்.
அவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கும் முக்கியமானது. அவரின் இந்த கிரிக்கெட் திறமையை ஊக்குப்படுத்த அவரது தந்தை மற்றும் தாத்தாவும் அவருக்கு பக்கபலமாக இருந்து உதவினர். அவரின் கிரிக்கெட் விளையாட்டிற்கு அவரது குடும்பம் புதிதல்ல. ஏனெனில் அவர் தந்தை இரயில்வே துறையில் பணிபுரிந்தவர் என்பதால் அதன் மூலம் பல கிரிக்கெட் கிளப் மட்டத்தில் விளையாடக் கூடிய ஒரு வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.
ரவிச்சந்திர அஸ்வின் கடந்து வந்த பாதைகள் :-
- இவர் தனது கிரிக்கெட் விளையாட்டைஅவருடைய 9 வயதில் YMCA அணிக்காக விளையாட தொடங்கினார். இவருக்கு ஆரம்பத்தில் சந்திர சேகர் ராவ் என்பவர் பயிற்சியை வழங்கினார். துவக்கத்தில் இவர் ஒரு பேன்ஸ்மேனாகவே பயிற்சியை சிறப்பாக எதிர்கொண்டார். அப்பயிற்சியில் அவர் எதிர்கொண்ட ஒரு பந்து வீச்சாளரான SK என்பவரின் பந்து வீசும் புதிய யுக்தியை கண்டு அவரிடம் அதனை கற்றுக் கொள்ள விரும்பினார். அதனடிப்படையில் அவரிடம் சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்டார். இதில் SK வின் கேரம் பால் பயிற்சியை கற்றுத் தேர்ந்தார். இதன் மூலம் அவர் ஆல்ரவுண்டராக விளையாடினார்.
- அவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில் இடுப்பில் ஏற்பட்ட வலியால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. அத்தகைய சூழலில் அவரது தாயார் கொடுத்த அறிவுரையின் படி வேகப்பந்திற்கு பதில் சுழல் பந்து வீச்சாளராக மாற்றியது. அதுவே தற்போது அவரின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது
- இவ்வாறான அவருடைய அடுத்தடுத்த பயிற்சிக்கு அடுத்து 2006 ஆம் ஆண்டு தனது 20 வயதில் ரஞ்சிக்கோப்பைக்கான விளையாட்டில் Level A வகையில் அறிமுகமானார். இதில் அறிமுப் போட்டியிலேயே 6 இலக்குகளை வீழ்த்தினார்.
- T20 போட்டிகளிலும் ஆந்திராவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பைக்கான விளையாட்டிற்கு தமிழக அணிக்கு கேப்டனாக இருந்து முதல் இடத்தில் வெற்றியடையச் செய்தார்.
- இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.
- ஒரு நாள் போட்டியில் 2010 ஆம்ஆண்டு ஜூன் 5 ல் இலங்கைக்கு எதிரான போட்டியிலும், T20யில் ஜூன் 12, 2010 ல் ஜிம்பாப்வேக்கு எதிராகவும், 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6 ல் டெல்லியில் நடைபெற்ற மேற்கத்திய தீவுகளுக்கு எதிராகவும் தன் தொடக்க ஆட்டங்களை வழங்கினார்.
- இத்தகைய அவரது சிறப்பான அறிமுக விளையாட்டுக்களைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனைகள் :-
- 2011 ஆம் ஆண்டிற்கான World Cup-ற்கும், 2013 ஆம் ஆண்டிற்கான ICC Champions Trophy க்கும் இந்திய அணியுடன் இணைந்து விளையாடி கோப்பையை கைப்பற்றினர்.
- 2016 ஆம் ஆண்டிற்கான T20 -ல் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர்.
- 2019-2021 WTC சுழற்சியில் 14 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2021-2023 WTC சுழற்சியில் 13 போட்டிகளில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2011 ல், IPL போட்டியில் நான்காவது அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரராக கருதப்பட்டார்.
போட்டிகள் எண்ணிக்கை விக்கெட்டுகள்
டெஸ்ட் போட்டிகள் 106 537
டெஸ்ட் போட்டிகள்(இந்தியாவில்) 65 383
ஒரு நாள் போட்டிகள் 116 156
T20 போட்டிகள் 65 72
முதல் தர கிரிக்கெட் போட்டி 156 758
- டெஸ்ட் விளையாட்டில் 5 சதங்களுக்கு மேல் அடித்து 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
- 11 முறை சுழல் பந்து வீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் சிறப்பாக விளையாடி 11 முறை தொடரின் ஆட்டநாயகன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
IPL தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் :-
அணியின் பெயர் வருடம் தொகை விக்கெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 2008 ₹12 லட்சம் 13
சென்னை சூப்பர் கிங்ஸ் 2009 ₹12 லட்சம் 13
சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 ₹12 லட்சம் 13
சென்னை சூப்பர் கிங்ஸ் 2011 ₹ 3.91 கோடி 20
சென்னை சூப்பர் கிங்ஸ் 2012 ₹ 3.91 கோடி 13
சென்னை சூப்பர் கிங்ஸ் 2013 ₹3.91 கோடி 15
சென்னை சூப்பர் கிங்ஸ் 2014 ₹ 7.5 கோடி 16
சென்னை சூப்பர் கிங்ஸ் 2015 ₹ 7.5 கோடி 10
ரெய்சிங் புனே சூப்பர்கெய்ன்ட்2016 ₹ 7.50 கோடி 82
கிங்ஸ் XI பஞ்சாப் 2018 ₹ 7.60 கோடி 13
கிங்ஸ் XI பஞ்சாப் 2019 ₹7.60 கோடி 15
டெல்லி காப்பிடல்ஸ் 2020 ₹7.60 கோடி 13
ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 ₹ 5 கோடி 13
ராஜஸ்தான் ராயல்ஸ் 2023 ₹5 கோடி 18
ராஜஸ்தான் ராயல்ஸ் 2024 ₹5 கோடி 9
சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 ₹9.75 கோடி ?
அஸ்வின் பகிர்ந்து கொண்ட கோப்பைகள் :-
- 2010 ஆசியக் கோப்பை
- 2011 உலகக்கோப்பை
- 2013 சாம்பியன் ட்ராபி
ரவிச்சந்திர அஸ்வினிற்கு வழங்கப்பட்ட விருதுகள் :-
- சிறந்த இந்திய கிரிக்கெட் வீர்ருக்கான திலிப் சர்தேசி விருது – 2011
- நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது – 2013
- அர்ஜுனா விருது – 2014
- நடப்பு ஆண்டின் ICC கிரிக்கெட் வீரர் – 2016
- CEAT சர்வதேச கிரிக்கெட் வீரர் — 2017
- பிப்ரவரி மாத ICC ஆண்கள் விளையாட்டு வீர்ர் – 2021
அவர் அறிவித்த ஓய்வு பற்றிய தகவல் ;-
- இவ்வாறான அவரின் சாதனைப் பட்டியலுக்கிடையில் தனது ஓய்வை அவர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ல் அறிவித்தார்.
- அதனடிப்படையில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவப் போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.
- பின் 2025 IPL ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது போன்ற கிரிக்கெட் மற்றும் பல பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது இணையவழிப் பக்கமான https://trickstamizha.com என்பதைப் பின்தொடரவும்.