RAVINDRASINH ANIRUDHSINH JADEJA
(இரவீந்திரசிங் அனிருத்சிங் ஜடேஜா): இவர் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் அனிருத் ஜடேஜா மற்றும் லதா ஜடேஜா ஆவர். ஜதேஜாவின் சகோதரிகள் நைனா ஜடேஜா மற்றும் பத்மினி ஜடேஜா. இவர்கள் குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள நவகம் கெட் என்ற நகரத்தில் பிறந்த குஜராத்தைச் சேர்ந்த ராஜ்புத் குடும்பத்தை பூர்வீகமாக கொண்டவர்.
பிறப்பால் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவராக கருதப்பட்டாலும் அவர்களுடைய சொத்துக்களை அரசு கையகப்படுத்திய காரணத்தால் அவர் குடும்பம் ஏழை நிலைக்கு தள்ளப்பட்டது. ஆகையால் இவரது தந்தை ஒரு வாட்ச்மேனாகவும் அவரது தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலையிலும் பணிபுரிய வேண்டியிருந்தது. வசதியான ராஜ வாழ்க்கை நிலையிலிருந்து திடீரென்று அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் சற்று கடினமாகவே இருந்தது. இதற்கிடையில் அவருடைய தாயார் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிலந்தார். இந்த இழப்பும்அவரின் கிரிக்கெட் விளையாட்டைப் பாதித்தது. அதன் பின் தன்னை மெல்ல இந்த விளையாட்டிற்குள் ஈடுபடச்
அவருடைய தந்தைக்கு ஜடேஜா ஒரு இராணுவ வீரராக வேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும் மகனின் விருப்பத்திற்கு இசைந்தார். மற்றவர் கேலி கிண்டல்களுக்கு சற்றும் தளராமல் தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதிலேயே முனைப்பாயிருந்தார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைகளுக்கு இடையில் 2016 ஆம் ஆண்டு ரிவாபா இரவீந்திர சிங் ஜடேஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் அரசியல் பிண்ணணி கொண்டவர். பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக 2022 ல் தேர்ந்தெடுக்ப்பட்டார். அவர்கள் இருவருக்கும் நித்யானா ஜடேஜா என்ற பெண் குழந்தையும் உண்டு.
கிரிக்கெட்டிற்குள் ஜடேஜா கடந்து வந்த பாதை :-
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஜடேஜாவின் சிறு வயது பழக்கமான தூக்கத்தில் நடக்கும் நோயை சரி செய்யவே அவரின் 9 வயதில் மருத்துவரின் ஆலோசனைப் படி விளையாட்டில் அவரை கலைப்படையச்செய்து உறங்க வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் முதன் முதலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆனால் அவருடன் விளையாடும் நபர்களின் அதிகமான வயது வித்தியாசத்தின் காரணமாகவே அவர் மேற்கொண்டு விளையாட விரும்பவில்லை.
ஆனால் அவர்களின் பெற்றோரின் முயற்சியால் ஜாம்நகரில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல் அலுவலரான மகேந்திர சிங் சாஹுன் என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் கடுமையான ஒழுக்கம் மற்றும் தனித்துவமான பயிற்சி முறைகளை கற்றுத் தருவதில் சிறந்தவர். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக தயாராவதற்கு ஃபீல்டிங் மற்றும் Under Arm Bowling, Spin Bowling Flight Delivery போன்ற பல யுக்திகளை பயிற்ச்சியளித்தார்.
இது போன்ற பல கடினமான பயிற்சிகளை எதிர்கொண்டதன் விளைவாகவே 2006 ஆம் ஆண்டு தன்னை ஒரு ஆல்- ரவுண்டராக 16 ஆவது வயதில் இந்தியா Under 19 World Cup Team ல் விளையாடத் தேர்வாகினார். அதில் இந்திய அணி தோல்வியுற்றாலும் தனது சிறப்பான பங்களிப்பை ஜடேஜா வழங்கியிருப்பார்.
அதன் பின் சௌராஷ்டிரா அணிக்காக விளையாட ஆரம்பித்தார். இதில் அவரது முழுத் திறமையை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் முக்கியத்துவம் பெறுகிறார். இதனடிப்படையில் விராட் கோலியின் தலைமையில் விளையாடிய இந்திய அணியில் 2008 ல் நிகழ்ந்த உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். இதில் துணைத் தலைமை வீரராக செயலாற்றி இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிபெற உதவினர்.
இந்த ஆண்டில் தான் முதல் முதலில் IPL ஏலம் துவங்கியது. இதில் முதலில் இராஜஸ்தான் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அதன் மூலம் இந்தியாவிற்காக விளையாடும் சர்வதேச அணியின் ஒரு அங்கமாக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
சர்வதேச விளையாட்டிற்குள் அவரின் அறிமுகம் :-
- இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் இந்தியாவிற்காக தனது முதல் போட்டியில் அறிமுகமாகிறார். இதில் அவர் 77 பந்திற்கு 60 என்ற ரன்களை எடுத்தார்.
- 20-20 விளையாட்டில் அதே 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ல் இலங்கைக்கு எதிராக கலம் இறங்கினார்.
- டெஸ்ட் போட்டிகளில் 2012, டிசம்பர் 13 ல் விளையாடத் துவங்கினார். இதில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
இரவீந்திர ஜடேஜாவின் சாதனைப் பயணங்கள் பற்றி :-
- ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இவருடைய அதிகபட்ச ரன்கள் 87
- T20 போட்டிகளில் இதுவரை எடுத்த அதிகபட்ச ரன்கள் 46
- Test போட்டிகளில் 175 ரன்கள் எடுத்துள்ளார். (2022 ஶ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியில்)
- 2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 7/42 என்ற கணக்கில் விக்கெட்டுகள் குவித்தார்.
- இதுவரை அவர் Bating செய்து எடுத்த மொத்த ரன்கள் 3370 ஆகும். பேட்டிங் சராசரி 55.24
- பந்துவீச்சில் அவர் எடுத்த மொத்த விக்கெட்டுகள் 323. பந்துவீச்சில் அவரின் சராசரி 24.14 . இதில் ஃபீல்டிங் கேட்சஸ் 46-ம், ஸ்டம்ப் விக்கெட் 8-ம் அடங்கும்.
- இதுவரை அவர் அடித்த மொத்த சதங்கள் 4.
இரவீந்திர ஜடேஜவின் IPL பயணம் :-
- 2008 ல் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிக்காக முதன் முதலில் 12 லட்சத்திற்காக பின் அவருடைய IPL தொகை மற்றும் IPL அவரின் சிறனைகள் பற்றி பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
வருடம் அணிகள் தொகை ரன்கள் விக்கெட்டுகள்
2008 இராஜஸ்தான் இராயல்ஸ் ₹12 லட்சம் 135 0
2009 இராஜஸ்தான் இராயல்ஸ் ₹12 லட்சம் 295 6
2011 கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ₹4.37 கோடி 283 8
2012 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹9.2 கோடி 191 12
2013 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹9.2 கோடி 201 13
2014 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹5.5 கோடி 146 19
2015 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹5.5 கோடி 132 11
2016 குஜராத் லையன்ஸ் ₹9.50 கோடி 191 8
2017 குஜராத் லையன்ஸ் ₹9.50 கோடி 158 5
2018 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹7 கோடி 89 11
2019 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹7 கோடி 106 15
2020 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹ 7 கோடி 232 6
2021 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹7 கோடி 227 13
2022 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹16 கோடி 116 5
2023 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹16 கோடி 190 20
2024 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹16 கோடி 267 8
2025 சென்னை சூப்பர் கிங்ஸ் ₹18 கோடி ? ?
இரவீந்திர சிங் ஜடேஜாவின் ஓய்வு பற்றிய தகவல் :-
2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பல வெற்றிக்கு உறுதுணையாக ஒருந்த இவர் தனது T20 சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான T20 உலகக் கோப்பையை இந்தியா வென்றவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது போன்ற கிரிக்கெட் மற்றும் மேலும் பல பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது இணைய வழிப் பக்கமான Tricks Tamizha பக்கத்தை கீழே உள்ள Link-ஐப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளவும்.
🙏🙏
TAMBI HOW R U