ரிஷப் ராஜேந்திர பந்த் :-
இவர் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ராஜேந்திர பந்த் மற்றும் தாய் சரோஜ் பந்த் மற்றும் அவரின் ஒரு சகோதரியுடன் உத்தரகாண்டில் வாழ்ந்து வந்தார். படிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் தனது கிரிக்கெட் திறமையில் அதீத ஆர்வம் கொண்டவராய் இருந்தார். இதனால் தன் பெற்றோருக்குத் தெரியாமலே அவரை விட வழதில் பெரிய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
நாளடைவில் அவரின் இந்த திறமையை அறிந்து கொண்ட அவரது தாய் அவரின் இந்த கிரிக்கெட் திறமையை ஊக்கப்படுத்த தொடங்கினார். தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தன் தாய் அவருக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாகவே தனது 12 வயது முதலே விடுமுறை நாட்களில் டெல்லிக்குச் சென்று அங்குள்ள பயிற்சியாளரான தாரக் சிங்ஹாவிடம் சோனட் கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார்.
பின் அவரின் பரிந்துறையின் பேரில் அங்கிருந்து ராஜஸ்தான் உள்ள கிரிக்கெட் அகாடெமிக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட மொழி சம்பந்தப்பட்ட சில அசௌகரியமான சூழலால் மீண்டும் டெல்லிக்கு மாற்றம் செய்து வந்தார். அங்கேயே தன் சகோதரியுடன் தங்கி தன் பயிற்சியைத் தொடர்ந்தார். பின் பெற்றோரின் விருப்பத்திற்காக டெல்லியில் உள்ள ஶ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் வணிகம் பிரிவில் பட்டம் பெற்றார்.
இந்தப் பயிற்சியின் போது அவரின் திறமைகளை அடையாளம் கண்டு டெல்லி அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்திய ரிஷப் பந்த் அடுத்த வாய்ப்பாக Under 19 போட்டிகளிலும் விளையாடினார்.
கிரிக்கெட் விளையாட்டில் இவர் கடந்து வந்த பாதை:
- ரிஷப் பந்த் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் கையில் மட்டை இருக்கும் பொழுது ஆக்கிரோஷமாக விளையாடுவார் என்று வருணணையாளர்கள் கூறுவர். இவர் தனது விளையாட்டுத் திறமையைப் பயன்படுத்தி 2015 ஆண்டில் அக்டோபர் 22 ல் நடைபெற்ற level A வகை Bats Man ஆக அறிமுகமானார். பின் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியிலும் Level A வகை Bats Man ஆக விளையாடினார்.
- இதில் அவர் சிறப்பாக செயலாற்றியதால் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடேயே நடைபெறும் உலகக்கோப்பைக்கான விளையாட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இதில் 18 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து Under 19 பிரிவில் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் பெற்றார்.
- 2017 ல் இங்கிலாந்திற்கு எதிரான International T20 விளையாட்டில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற அறிமுகப் போட்டியில் Wicket keeper ஆக இருந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
- அவரது இந்த அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கு இடையில் 2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ரிஷப்பின் தந்தையான ராஜேந்திர பந்த் மாரடைப்பால் காலமானார்.
கிரிக்கெட் விளையாட்டில் ரிஷப் பந்த் நிகழ்த்திய சாதனைகள்:
- 2016-2017 ஆம் ஆண்டிற்காக அவர் விளையாடிய ரஞ்சிக் கோப்பைக்கான விளையாட்டில் 308 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இதில் குறைந்த வயதில் தொடர்ந்து 3 சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெறுமையைப் பெற்றார்.
- அதே சீசனில் 48 பந்துகளில் சதம் அடித்ததற்கான சாதனையையும் பெற்றார். இவ்வாறு ரஞ்சிக் கோப்பை விளையாட்டில் அவரின் அடுத்தடுத்த சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
- 2016 ஆம் ஆண்டு இவரின் IPL விளையாட்டு பயணம் தொடர்ந்தது. அதனடிப்படையில் ரூ. 1.90 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற IPL தொடர்களிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- இதன் மூலம் 2017 ல் இருந்து சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாட ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் முதன் முதலில் இங்கிலாந்திற்கு எதிராக களமிறங்கினார்.
- இதில் சதம் அடித்து இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் சாதனையையும் பெற்றார்.
- இதே போல் ஆஸ்திரேலியா சீரியர்ஸிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் பெற்றார்.
- 2018 ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அதிக ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை Rc. ரஸ்ஸல் மற்றும் APT. வில்லியர்ஸ்-உடன் பகிந்து கொள்கிறார். இதில் 11 கேட்ச்சுகளைப் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
- இதோடு அதிவேக அரை சதம் எடுத்தவர்களில் இரண்டாம் இடத்தை கபில் தேவிடமிருந்து கைப்பற்றினார்.
IPL ல் ரிஷப் பந்த்:
வருடம் தொகை அணி எடுத்த ரன்கள்
2016 ரூ. 1.90 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 198
2017 ரூ. 1.90 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 366
2018 ரூ. 8 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 684
2019 ரூ. 8 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 488
2020 ரூ. 8 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 343
2021 ரூ. 8 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 419
2022 ரூ. 16 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 340
2024 ரூ. 16 கோடி டெல்லி காப்பிட்டல்ஸ் 446
2025 ரூ. 27 கோடி லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் ?
இத்தகைய சானைகளைக் கொண்டு ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் இதுவரை 7 சதம் அடித்த சிறந்த பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டுவருகிறார்.
ரிஷப்பந்தின் விபத்து பற்றி:
இதற்கிடையில் ரிஷப் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளில் ஒரு பெரிய விபத்தை எதிர்கொண்டார். டெல்லியிலிருந்து டெஹராடூன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவருடைய காரானது (Mercedes- Benz GLE Coupe) கட்டுப்பாட்டை இழந்து பெரிய விபத்தை ஏற்படுத்தியது.
அவரை அந்த விபத்தில் இருந்து உள்ளூர் பேருந்து ஓட்டுநர்களான ராஜத் மற்றும் நிஷு போன்றோர் துறிதமாக செயல்பட்டு அவரின் உயிரை காப்பாற்றினர். இருந்த போதிலும் அந்த விபத்தின் காரணமாக அவருக்கு நெற்றியில் இரண்டு வெட்டுக் காயங்களும் முழங்காலில் தசைநார் கிழிந்து மேலும் உடலில் பல இடங்களில் பலத்த காயங்களும் ஏற்பட்டது. இதனால் அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவருடைய விடா முயற்சியால் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் அவரது அதிரடியான ஆட்டத்தை வழங்கி வருகிறார். அந்த வகையில் இவரின் ஆக்கிரோஷமான பேட்டிங் திறமையைக் கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு IPL விளையாட்டில் லக்னோ சூப்பர் கெய்ன்ஸ் இவரை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவரே ஆரார்.
இது போன்ற கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமது https://trickstamizha.com பக்கத்தை பின்தொடரவும்.