Ruturaj Gaikwad Life Story In Tamil | Ruturaj Gaikwad | Cricket Player Ruturaj Gaikwad Life Story Details And Life Style Revealed | Tricks Tamizha

Ruturaj Gaikwad Life Story In Tamil | Ruturaj Gaikwad | Cricket Player Ruturaj Gaikwad Life Story Details And Life Style Revealed | Tricks Tamizha

ருத்ராஜ் தஷரத் கெய்க்வாடின் சுய விவரம் :-

இவரே CSK அணியின் தற்போதைய Captain ஆவார். 28 வயதுடைய இவர் 1997ல் ஜனவரி 31 ஆம் நாளில் புனேவில் பிறந்தார். ருத்ராஜின் தந்தைப் பெயர் தஷரத் கெய்க்வாட் மற்றும் தாய் ஷரிதா கெய்க்வாட் ஆவர். இவர் அவருடைய பள்ளிப் படிப்பை புனித ஜோஷப் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் உட்கர்ஷா பவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் கடந்து வந்த பாதை :-

இவருடைய சிறு வயதில் தனது தந்தையுடன் மைதானத்திற்குச் சென்று பார்த்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கும் இடேயேயான கிரிக்கெட் போட்டியே இவரின் எதிர்கால கிரிக்கெட் சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தின் முதலடியை அவர் அவருடைய ஆறு வயதிலிருந்தே தொடங்கி விட்டார். அருகில் இருக்கும் ஒரு கிரிக்கெட் கிளப்பில் இணைந்து அங்கேயே தனது பதினோராவது வயது வரைக்கும் விளையாட்டின் ஆரம்பத்தை கற்றுத்தெரிந்து கொண்டார். சந்தீப் சவான் இவருடைய பயிற்சாயாளராக இருந்து இவரின் முன்னேற்றத்திற்கு உதவினார்.

அதன் பின் தனது 13 வயதிலேயே உள்நாட்டு கிளப்புகளுக்கு இடையேயான விளையாட்டுகளில்  2010 ஆம் ஆண்டு கலந்து கொண்டு 21 பந்துகளுக்கு 63 ரன்கள் அடித்து  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து Under 19 விளையாட்டில் கலந்து கொண்ட கெய்க்வாட் அதில் தன்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். பின் 2016 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைக்கான விளையாட்டை விளையாடத் துவங்கினார்.

இவரின் தொடர் முயற்சியின் காரணமாக 2019 ல் IPL தொடருக்குஆன போட்டியில்  MS. தோனி தலைமையிலான CSK அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தனது திறமைகளை காட்டி தன்னை ஒரு சர்வதேச விளையாட்டு வீரராக தகுதிகளை உயர்த்திக் கொண்டார். இதன் காரணமாக 2021ல் இவர் இந்தியாவிற்காக சர்வதேச அளவில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளைக் கூட மிக கவனமாக கையாண்டு இந்திய அணியின் ஒரு நாள் போட்டி போன்றவற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.

இவர் தனது T20 போட்டியை 2021 ல் ஜூலை 28 ஆம் ஆண்டு ஶ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியிலும் அதனைத் தொடர்ந்து இவரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ல் சௌத் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் ஆரம்பித்தார்.  T20 போட்டியை

ருத்ராஜ் தஷரத் கெய்க்வாடின் சாதனைப் பட்டியல்கள் :-

  1. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 போட்டிகளில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெறுமைக்குரியவர்
  2.  சர்வதேச T20 போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
  3. சர்வதேச T20 போட்டிகளின் கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலிலும் இரண்டாம் இடத்தையும்
  4. இந்திய Bats Man களில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
  5. ஒரே சீசனில் பஞ்சாப் கிங்ஸிற்கு  எதிரான விளையாட்டில் 509 ரன்களை குவித்து இதற்கு முன் இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
  6. T20  போட்டிகளில் 4000 ரன்களை குவித்து சாதனைப் படைத்தோர்களின் இந்தியர்கள்  பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
  7. Vijay Hazare Trophy போட்டியில் 6 பந்துகளில் 7 Sixer கள் அடித்தார்,

IPL ல் ருத்ராஜ் கெய்க்வாடின் மதிப்பு தொகை வருடம் வாரியாக :-

  1. 2019                              ரூ. 20 லட்சம்
  2. 2020                             ரூ. 20 லட்சம்
  3. 2021                              ரூ. 20 லட்சம்
  4. 2022                              ரூ. 6 கோடி
  5. 2023                               ரூ. 6 கோடி
  6. 2024                              ரூ. 6 கோடி
  7. 2025                              ரூ. 18 கோடி

இது போன்ற பல பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது இணைய வழிப் பக்கமான  https://trickstamizha.com ஐப் பின்தொடரவும்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *