- கார்த்திகை பிறந்தால் போதும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பனை பார்க்க வேண்டி மாலை அணிந்து ஐயப்பன் நாமத்தினை சொல்லி குறைந்தது ஒரு மண்டலம் ( 41 நாட்கள் ) விரதமிருந்து இருமுடிகட்டி கலியுகவரதன் ஐயப்பனை காண சபரிமலைக்கு புனிதயாத்திரை செல்கின்றனர்.
- ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
- மாலையிட்டு கடுமையான விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனின் அவதாரமாக ஏற்று அவர்களை சாமி என்று அழைக்கின்றனர்.
- குறிப்பாக நாம் நினைத்தால் மட்டும் ஐயப்பனை காண முடியது அவர் அழைத்தால் மட்டுமே நம்மால் ஐயனை காண செல்ல முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வோர் பின்பற்ற வேண்டிய விரத முறைகள் :-
- சபரிமலை செல்ல விரும்பும் சாமிகள் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதியே மாலை அணிந்து கொள்ளலாம். ( முதல் நாள் மாலை அணிந்தால் சாஸ்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ) அல்லது கார்த்திகை 19-ஆம் தேதிக்குள் மாலை அணிந்து கொள்ளலாம்.
- குறைந்தது 41 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்திற்கு விரதமிருக்க வேண்டும்.
- பிரம்மசாரிய விரதத்தினை மாலையணிந்த நாளிலிருந்து கடைபிடிக்க வேண்டும்.
- மாலை அணியும் மாலையில் துளசி மணி ( 108 ) ஆகவும் உத்ராட்ச மாலை ( 54 ) ஆக இருக்கும் மாலையை வாங்கி அதில் ஐயப்பன் படம் பதித்த டாலரை பொருத்தி அணிய வேண்டும்.
- நமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி வீட்டிலேயே தாயின் கையினால் மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது ஐயப்பன் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து குருசாமி (அ) அர்ச்சகர் முலமாகவும் அணிந்து கொள்ளாலாம்.
- மாலை அணிந்த பின்னர் குரோதம் , கோபம் , காமம் , விரோதம் இல்லாமல் பணிவுடம் பழக வேண்டும்.
- காலையில் சூரிய உதயத்திற்கு முன்னாலிலும் மாலையில் குளிந்த நீரில் நீராட வேண்டும்.
- கருப்பு , பச்சை , காவி நிற வேட்டி சட்டை அணிய வேண்டும்.
- கன்னி சாமிகள் தங்களின் வசதிகேற்ப வீடுகளில் பூஜை செய்து அன்னதானம் வழங்கலாம்.
- மது பழக்கம் , புகை பிடித்தல் , இறைச்சி உண்ணுதல் மற்றும் பிற தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.
- காலணிகளை பயன்படுத்த கூடாது .
- மாலையை எக்காரணத்தை கொண்டும் கழற்றக் கூடாது.
- சபரிமலை செல்லும் போது யாரிடமும் போய் வருகிறேன் என்று கூறக்கூடாது.
- எதிர்பாராத விதமாக மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூட்டாது.
- சடங்கு வீட்டிற்கோ , குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லாமல் இருப்பது நல்லது.
- ரத்த சம்மந்தபட்ட உறவுகளின் மரணம் ஏற்படிட்டால் மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கழந்து கொள்ள வேண்டும்.
- பம்பை நதியில் நீராடும் போது நமது முன்னோர்களை நினைத்து நீராட வேண்டும்.
- பயணம் முடிந்து வீடு வரும் போது வாசலில் தேங்காய் அடித்துவிட்டு வீட்டினுல் நுழைய வேண்டும்.
- பிரசாதங்களை பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பிறகே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- மாலையை குருநாதர் ( அ ) தாயின் மூலமாக மந்திரத்தை செல்லி மாலையை கழற்றி ஐயப்பன் படத்திற்கு முன்னால் வைத்து விரதம் முடிக்க வேண்டும்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை தங்கள் எண்ணம் போல் அளித்து ஐயனை காணுங்கள் அருள்பாவிப்பார்.