Vijay Shankar Life Story In Tamil | Vijay Shankar | Cricket Player Vijay Shankar Life Story Details And Life Style Revealed | Tricks Tamizha

Vijay Shankar Life Story In Tamil | Vijay Shankar | Cricket Player Vijay Shankar Life Story Details And Life Style Revealed | Tricks Tamizha

தமிழ்நாட்டில் இருந்து நம் இந்திய நாட்டிற்காக விளையாடி வரும்  திறமையான வீரர்களில்  ஒருவரான விஜய் சங்கர்-ஐப் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

விஜய் சங்கர் :-

1991, ஜனவரி 26 ல் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரரான விஜய் சங்கர் திரநெல்வேலியைச் சார்ந்த  சங்கர் மற்றும் ரமா சங்கர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இந்த தம்பதிகளுக்கு  அஜய் சங்கர் என்ற மற்றொரு மகனும் இருக்கிறார்.  இவர்கள் குடும்பத்திற்கு கிரிக்கெட் விளையாட்டிற்கு புதிதல்ல. விஜய் சங்கரின் தந்தைக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருப்பதோடு அவர் ஒரு முதல் தர விளையாட்டு வீரரும் ஆவார். அதோடு இவரின் அண்ணணான அஜய் சங்கரும் தமிழ்நாட்டின்  லீக் கிரிக்கெட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.  இவ்வாறு கிரிக்கெட்டில் ஆர்வமிக்க ஒரு குடும்ப பிண்ணணியில் இருந்து வந்துள்ளதால் இவருக்கு முதல் பயிற்சியாளரும் இவருடைய தந்தையாகவே இருந்துள்ளார்.

இவ்வாறு கிரிக்கெட்டின் விருப்பத்திற்கு எந்தவித தடையும் இன்றி வளர்ந்து வந்த இவருக்கு அடுத்த கட்ட பயிற்சியை வழங்க இவருடைய தந்தை திருநெல்வேலியில் இருந்து குடும்பத்துடன் சென்னைக்கு குடிப்பெயர்ந்து சென்றனர். இவ்வாறு இவரின் அடுத்த கிரிக்கெட் பயிற்சியை  சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து துவங்கினார்.

இவரின் பள்ளிப் படிப்பை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். அதோடு தன்னுடைய கல்லூரிப் படிப்பை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் முடித்தார். அச்சமயம் அவருக்கான பயிற்சியை மேற்கொள்ள ஏதுவான அகாடெமியோ, பயணதூரமோ சாதகமாக இல்லாத காரணத்தினால் அவருடைய வீட்டின் மாடியிலேயே தனது தந்தையின் உதவியால் தேவையான வசதிகளை ஏற்படுத்தி பயிற்சி பெற்று வந்தார். இதனடிப்படையில் பல காலமாற்றத்திற்குப் பிறகு அவர் பல லீக் மேட்ச்களில் விளையாடத் துவங்கினார்.

இவர் ஒரு வலது  கை பேட்ஸ்மேனாகவும் Off Spin பவுலராகவும் தனது விளையாட்டை மெறுகேற்றிக் கொண்டார். இதற்கிடையில் விஜய் சங்கருக்கு ஜனவரி 27, 2021 ல் வைஷாலி விஸ்வேஸ்வரனை என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

விஜய் சங்கரின் அறிமுக விளையாட்டுகள் :-

  • FC Match களில் ரஞ்சிக் கோப்பைக்காக விஜய் சங்கரின் அறிமுக விளையாட்டை 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த தமிழ்நாட்டிற்கும் விதர்பாவிற்கும் இடையேயான போட்டியில் கலந்து கொண்டார். இதில் 114 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்துள்ளார்.
  • அதே ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்காக விளையாடி 8 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்துள்ளார்.
  • T20 போட்டிகளில் முதன்முதலில் ஆந்திராவிற்கு எதிரான தமிழ்நாடு அணியில் பத்ராவதியில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.
  • T20I போட்டிகளில்  கொழும்புவில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2018 ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார்.
  • பின் இந்தியா-ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில்2019 ஆம் ஆண்டு  கலந்து கொண்டு  ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடினார்.
  • 2019 ல் இவர் கலந்து கொண்ட உலகக் கோப்பையில் அவருடைய உலகக் கோப்பை அறிமுகமான முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார்.

விஜய் சங்கர் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதைகள் :-

  • இவர் தனது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை பெற்ற ரன்களாக 46 ஆகவும் ஃபீல்டிங்கில் 9 இன்னிங்ஸிற்கு  4 விக்கெட்டுகளையும் எடுத்து பதிவு செய்துள்ளார்.
  • முதல் தர கிரிக்கெட் விளையாட்டில் இவரது அதிகபட்ச ரன்கள் 111 மற்றும்81 இன்னிங்ஸில்  33 விக்கெட்டுகள் ஆகும்.
  • அதே போல் IPL தொடரில் 63 ரன்களை அதிகபட்ச ரன்களாக எடுத்துள்ளார்.
  • T20 போட்டிகளில் 43 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் தனது அதிகபட்ச ரன்கள் வரிசையில் பதிவு செய்துள்ளார்.
  • List – A கிரிக்கெட் போட்டியில் 88 இன்னிங்ஸிற்கு  54 விக்கெட்டுகளையும் எடுத்து தனது கிரிக்கெட் வரலாற்றை படைத்துக் கொண்டுள்ளார்.
  • இது போன்ற இவரின் பல சாதனைகள கண்டு அப்போதைய தலைமை தேர்வாளரான MSK. பிரசாத் என்பவர் Desire, Discipline, Determination இந்த மூன்றும் இவரிடம் காண்பதாகவும் அறிவித்து இவரை ஒரு 3D Player என குறிப்பிட்டிருந்தார்.

Vijay Shankar-ன் IPL வரலாறு :-

  • 2014 லிருந்து IPL  ல் இவர் விளையாடத்துவங்கினார். இதில் அவரின் மதிப்பு மற்றும் அணிகளைப் பற்றிய தகவல்கள் பின்வருமாறு,

வருடம்    அணி       தொகை


2014            CSK            ₹10 லட்சம்

2017            SRH           ₹ 35 லட்சம்

2018            DD            ₹ 3.2 கோடி

2019            SRH          ₹ 3.2 கோடி

2020           SRH         ₹ 3.2 கோடி

2021           SRH          ₹ 3.2 கோடி

2022           GT            ₹1.4 கோடி

2023           GT             ₹1.4 கோடி

2024           GT           ₹1.4 கோடி

2025          CSK          ₹ 1.2 கோடி

இவரின் அற்புதமான பேட்டிங்காலும் ஃபீல்டிங் திறமையாலும் சிறு காலத்திலேயே அனைவருக்கும் பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். அதற்கு முதல் காரணம் அவரின் ரஞ்சிக் கோப்பை விளையாட்டில் அவர் அடித்த சதங்களும் ஒன்று.

அவர் இதுவரை எடுத்த ரன்களின் புள்ளி விவரங்கள் பின்வருமாறு,

போட்டிகள்                  ரன்கள்        விக்கெட்டுகள்


ஒரு நாள் போட்டி       223             4

T20                                    101               5

FC                                    3158              38

LIST A                            2444             58

T20                                 2170              33

இது போன்ற கிரிக்கெட் மற்றும் பல பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள  கிழே குறிப்பிட்டுள்ள நமது Tricks Tamizha இணைய வழிப் பக்கத்தைப் பின்தொடரவும்.

https://trickstamizha.com

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *